நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

இவர்களின் கதை சுவாரசியமானது 2

நிச்சயமாக ஒரு சில மணித்துளிகள் உங்களுடன் இணைந்து
இருப்பது எனக்கும் சந்தோசமே என்று நான் கூறியதும்
அவர்களில் ஒருவர் நீங்கள் எவ்வளவு காலமாக ஐரோப்பாவில் வசித்துவருகிறீர்கள் என்றுகேட்டார்.
1982 ஆம் ஆண்டு இதே மட்ரிட் விமானநிலையத்தில் முதன்முதலாக வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகியதுதான் எனது இந்த அகதி வாழ்க்கை என்று கூறவும்.
அப்படியாயின் எங்கள் வாழ்வைப் புரிந்துகொள்வது உங்களிற்கு இலகுவாக இருக்கும்
எண்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில்தான் ஐரோப்பாவில் போதைப்பொருட்களின் பாவனை உச்சத்தில் இருந்த்து. அந்த நாட்களில் ஐரோப்பாவில் வாழ்ந்த இளைஞர் யுவதிகளில் 60% வீதத்திற்குமேற்பட்டவ்ர்கள் ஒருமுறையேனும் போதைப்பொருட்களைப் பாவித்திருக்கிறார்கள் எனப் புள்ளிவிபரமொன்று தெரிவிக்கிறது. 
நாங்கள் நின்றுகொண்டிருக்கும் இந்த வீதி 
இப்பொழுது இருக்கும் தோற்றத்திற்கு 
முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் பின் இரவு நேரங்களில் காணப்படும்.
ஆமாம் நானும் அதைப் பார்த்திருக்கிறேன்
. விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதையும் மதுபோதை நிறைந்த மக்கள்வெள்ளத்தையும் போதைப்பொருட்களில் தன்னிலை மறந்திருக்கும் மக்களையும் கண்டுவியந்திருக்கிறேன் என்று கூறவும்
நன்றாக அவதானித்திருக்கிறீர்கள். 
80 களில் இதைவிட மிக இலகுவாகவும் 
மலிவாகவும் போதைப்பொருட்கள் 
கிடைக்கும். இளைஞராக இருந்த எமக்கு குணா என்றொரு உங்கள் நாட்டவரின் நட்புக்கிடைத்தது. சில நாட்களில் அவர் போதைப்பொருட்களை மொத்தமாக விற்பனை செய்பவர் என்பது தெரியவர அவரிடமிருந்து அதை வாங்கி பாவனையாளரிற்கு விற்கத்தொடங்கினோம்.
இடையில் புகுந்து நானும்  .ஆம்  அன்றைய நாட்களில் நம்மவர் பாகிஸ்தானிலிருந்து இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளூடாகப் பெருமளவில் போதைப்பொருட்களை ஐரோப்பாவிற்குக் கடத்தியதை நானும் அறிந்திருக்கிறேன் என்றேன்.
பார்த்தீர்களா உங்களவர்களைப்பற்றி நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறீர்கள் என்ற மற்றவர் தொடர்ந்து,  
நாளடைவில் எமக்குக் கீழ் ஒரு பெரிய குழுவே வேலை செய்தது. பணத்தில் மிதந்தோம் தினத்திற்கொரு அழகிய பெண்களுடன் நட்சத்திரவிடுதிகளில் உல்லாசம். புத்தம்புதுக் கார்கள் அடியாட்கள் என ஒரு சினிமாப்படம்போல எமது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.
இதே இந்தச் சந்தடிமிக்க தெருவில் போட்டிக்குழுக்களுடன் மோதிக்கொண்டதற்கு ஆதாரமாக இன்னமும் இருக்கும் இந்தத் தழும்புகளைப் பாருங்கள் என மற்றவர் தனது உடம்பிலிருந்தபல வெட்டுக்காயத் தழும்புகளக் காட்டினார்.
நாளடைவில் .....

இவர்களின்கதை தொடரும்...............

1 comment:

ஹேமா said...

நம்மவர்களின் ஆரம்பகால வாழ்க்கையை நினைத்தால் சிரிப்புத்தான்.ஆடு களவெடுத்து டெலிபோன் பூத்ல வச்சி வெட்டி...என்ன அட்டகாசம்.அதுக்கு எதிர்மாறா இப்ப தமிழர் என்றாலே அவ்வளவு மரியாதையும் மதிப்பும்.வாழ்க்கைத்தரம்கூட எத்தனை உயர்வு.சந்தோஷம்.சரி....நீங்க தொடருங்கோ !

தயவு செய்து பின்னூட்டம் போடும்போது வரும் ஆங்கில எழுத்துக்களை எடுத்துவிடுங்கோ.
பின்னூடம் தர சுலபமாய் இருக்கும் !