நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Saturday

இந்த ஊருக்கு வயது 800 ஆண்டுகளிற்குமேலே.


அண்மையிலே ஜேர்மனியின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றான Idstein  நகரிற்குச் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது. இங்குள்ள கட்டிடங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானதாகக் காணப்படுகிறது. ஒன்றுபோல மற்றொன்று இல்லை. லண்டன் மாநகரத்திலும் பழைய கட்டிடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் அங்குள்ள பழைய தெருவொன்றிற்குச் சென்றால்  தெருவிலுள்ள அத்தனைவிடுகளும் பெரும்பாலும் ஒரேமாதிரியானதாகவே இருக்கும்.
வரலாற்றுச்சான்றுகள் இந்த ஊர் Idstein 1102 ம் ஆண்டில் தோற்றம்பெற்றதாக்க தெரிவிக்கின்றன. நகரின் பெரும்பாலான கட்டிடங்களும் புராதனச்சின்னங்களாக ஜேர்மனிய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இக்கட்டிடங்களை பேணிப்பாதுகாத்துப் பராமரிக்கமுடியாத உரிமையாளருக்கு அவறைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் பொருளாதார உதவி செய்கிறது.
நம்ம நாடுகளில் புராதன கட்டிடங்களில் இருந்து கதவுகள்,வேலைப்பாடுமிக்க தூண்கள், சிற்பங்கள் என எவை எவற்றையெல்லாம் பெயர்த்து எந்த நாட்டிற்குத் திருட்டுத்தனமாக எற்றுமதிசெய்து கொள்ளை லாபம் அடிக்கலாம் என்பதிலேயே பலரும் கண்ணாயிருக்கிறார்கள்.  
Idstein இல் உள்ள  மிகவும் புராதனக் கட்டிடமாக 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கண்காணிப்புக் கோபுரம் காணப்படுகிறது. இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை 1400 முதல் 1700ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவையாக இருக்கின்றன.  இந்த ஊரிலேயே நான் பார்த்ததில் மிகவும் பழைய வீடு 1449 இல் கட்டப்பட்டது. 
 இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தமக்குள்ளே எத்தனை எத்தனை கதைகளையும் வரலாறுகளையும் கொண்டிருக்குமோ? இவற்றில் குடியிருந்தவர்கள் ஒல்லியோ குண்டோ, அழகோ, ஆண்டபரம்பரை வந்தவரோ, அடிமையோ,அந்நியதேசத்தை அடிமைகொள்ளச் சென்றவரோ, இங்கு ஆடவரும் பெண்டிரும் எப்படியெல்லாம் கொஞ்சிக்குலாவி மகிழ்ந்திருப்பரோ. இந்தவீடுகள் பேசினால் எத்தனை எத்தனை கதைகள் சொல்லியிருக்கும்.               
ஊரின் அழகையும் கம்பீரத்தையும் கெடுக்கும்விதமாக இந்த இடத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாமல் தெருவோரம் தரித்திருக்கும் வாகனங்கள் எரிச்சல் தருகின்றன.
ஓ ரொம்பவும்தான் அறுத்திட்டனோ? கோவித்துக்கொள்ளாமல் பார்த்து ரசியுங்கோ.

1 comment:

பராசக்தி said...

அழகோ அழகு! ஒவ்வொரு மூலையும் அழகு, யன்னல்களின் வேலைப்பாடு, பூந்தொட்டிகளின் அணிவகுப்பு, வீடுகளின் கூரைகள் எல்லாமே அழகு!