நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

நட்பொன்று உருவானநேரம்

  • இணையத்தள நட்புகள் எப்படியெல்லாம் உருவாகிறது.  சிலகாலங்களிற்குமுன் முகப்புத்தகத்தில் எனக்கு  ஒரு நட்புக்கோரிக்கை வந்தது அந்த நாட்களில் நடைபெற்ற சுவாரசியமான தொடர்பாடல் இது
  • அம்பலத்தார்03 செப்டம்பர் 2010
    • அம்மா தாயே தங்களை யாரென்று புரியவில்லையே? பரித்தித்துறை பெரிய ஊராச்சே. உங்களை அறிமுகப்படுத்துங்களேன்.
  • 12 செப்டம்பர் 2010
    • I am really sorry. I thought it was my friend Mahen. I just realised it's not him. Sorry for the inconvenience.
  • பனனர அமபலததர12 செப்டம்பர் 2010
    • it`s OK.don`t worry take it easy.But I know one Mahen Gunawardene from Colombo
  • 12 செப்டம்பர் 2010
    • No, It's Maheswaran. I quite like your introduction though. Good one. Bye.
  • அம்பலத்தார்15 செப்டம்பர் 2010
    • எனக்கு ஒரு விசயம் தெரிஞ்சாகணும் அம்மணி!!!!!!!! அம்பலத்தார் எப்படியம்மணி மகேன் என்கிற மகேசுவரன்கூட கன்பியூஸ் ஆகலாம். அம்பலத்தார், அப்பளத்தார் அம்மணத்தார் என்று எவனாவது ஒருத்தனகூட வேணுமிண்ணா கன்பியூஸ் ஆகலாம். இவனெல்லாம் ஒரு நாட்டுக்கட்டை இவனைக் கொஞ்சம் கலாய்கலாம் என்று எண்ணித்தானே கடுதாசிபோட்டனிங்கள் அம்மணி. நான் அத்திம்பேர், சின்னமச்சான், மச்சுவீட்டுக்காரன்... என்று பலபேரைமுள்ளிவாய்காலில காவுகுடுத்த கவலையில இருக்கன் அம்மணி என்னைவச்சுத்தமாசு பண்ணாதிங்க அம்மணி
  • 15 செப்டம்பர் 2010
    • I am really sorry. It's just the moddai thalai got me confused.
  • அம்பலத்தார்16 செப்டம்பர் 2010
    • Hai Madam,
      How can you say it´s just the moddai thallai that confused you. May be your friend is moddai. Please look at the photo once again, i just have small playground in the middle but rest of the head is fully ok. may be you need a specs.
  • 16 செப்டம்பர் 2010
    For your kind information, I do have my own specs. Sorry, let me behave my age. When I created my face book, your name appeared along the other friends. Your name was next to my friend Gowry. So I thought you were her husband Mahen. Mahen is a writer too and Ponnar is his nick name. Do you know Gowry? You must be from Germany.
    Anyway, that's not just a small playground, it's a football pitch.
    • அம்பலத்தார்16 செப்டம்பர் 2010
    • Madam, It´s strange. how can my name appear next to your friend Gowry......... My wife´s name is Chellamma not Gowry. Gowry must stay near to Mahen not near to Ampalathar.My Chellamma will never allow this.
      How can some Mahen use my father´s name without asking my father. It´s very sad my father is no more to conform the matter. it´s ilegal and have to inform this to aniyan Ambi. is you friend writes stories for indian films. ask him to use his own name not my father´s name.
      Madam it is not football pitch. We tamils never play football we play cricket and. it´s cricket pitch
  • 17 செப்டம்பர் 2010
    • Ir still puzzles me too how your name appeared among my friends. Mahen writes dramas for his groups.
      I am sure Gowry will respect Chellamah and stay near her husband.
      Thamils play cricket!!!!!! May I ask which team they play these days?
  • அம்பலத்தார்18 செப்டம்பர் 2010
    those days our thalaivar used to play the long testmatchs. But you see now a days after he disapeared without even saying goodbye. most of our team star players like KP, nediayan, rudrakumar, daya master ....... started their own teams and playing the short & fast twenty twenty matchs. They say it´s more interesting than the very long boring testmatches. Fans also tells it´s funny & interesting. Government is also supporting these gays to develop the twenty twenty matchs. Mostly these players earn a lot from match fixing. They earn more whenever they lose the match. If you have time please watch some these matchs It´s mostly interesing & and like thriller movies with unexp. sudden turns.
  • 19 செப்டம்பர் 2010
    True, our politicians play better game than real cricket players. It's becoming quite depressing to see the latest plight. Any way, why can't you accept in the facebook?
  • அம்பலத்தார்21 செப்டம்பர் 2010
    அம்மணி, நான் சொந்தப்புத்தியில வாழுறவனாக்கும். சும்மா அடத்தவன் சொல்லுறதுக்கெல்லாம் தலையையும், வாலையும் ஆட்டிக்கொணடு நிற்கமாட்டன் எனக்கெண்டு கொள்கையள் இருக்கு எனக்குச் சொந்தப்புத்திகிடக்குது. நான் சரி சொல்லுறதென்றால் முதலிலை அம்மணி ஒரு உறுதிமொழி தரவேணும். அம்மணி எனக்கு உந்த மகேன் என்ற பெயரைக் கேட்டாலே மகேன் டி சில்வா, மகேன் கொடித்துவக்கு மகேன் புஞ்சிபண்டா.......... இப்பிடி என்று ஆமியில இருந்த அரைச்சிங்களவன்ரை ஞாபகம்தான் வருகுது இவனுகளிலை எவனோ ஒருவன்தான் என்ரை அத்திம்பேரையும் சின்னமச்சானையும் முள்ளிவாய்காலில சுட்டிருப்பான். சொந்தப்புத்தியில்லாத அவனுகள் தமிழனை முடிக்கிறமென்று தங்கட தலையிலையுமெல்லோ மண்ணை அள்ளிக்கொட்டியிருக்கிறாங்கள். இப்பபாருங்கோ உவன் ராசபக்ச எங்களுக்குமட்டுமில்லை தங்கடஆட்களுக்குமெல்லோ நாமம் போடுறார். அம்மணி உந்த வெத்துப்பயல் மகேனை மறக்கச் சம்மதமென்றால் அம்பலத்தார் கதவைத் திறப்பான். இல்லையென்றால் சும்மா ஜன்னலுக்காலை மொட்டந் தலையைக் காணுகிறநேரம Hallo சொல்லலாம். அம்மணி நல்லா யோசிச்சு நாடகம்போட்டு றீல்விடுகிற மகேனோ அம்பலத்தானோ என்று முடிவெடுங்கோ. ஆனால் பேச்சுப் பேச்சா இருக்கணும் பிறகு மாறக்கூடாது. இப்ப பந்து உங்கடபக்கம் கோல் அடிக்கிறியளோ கோட்டைவிடுறியளோ பார்க்கலாம். அம்மணி எனக்குக் கன அலுவலுகள் கிடக்குச் சும்மா வெத்துப்பேச்சுப் பேசியே காலம் போக்க இயலாது அப்புறமா நேரமிருந்தால் பேசலாம். .
  • அம்பலத்தார் 22 செப்டம்பர் 2010
  • என்ன அம்மணி பேச்சையே காணம். மூச்சையாகி மூலையில விழுந்திட்டேளோ? சீக்கிரமா எழுந்திருங்க விழுந்தவன்மேல மிதிச்சிட்டு ஓடிட்டே இருப்பான் அடுத்தவன்.
  • 22 செப்டம்பர் 2010
    Oi, Mahen is Maheswaran, not one of the killing people. I think you will like him too. Why don't you check in his wife's (my friend Gowry) facebook? How can I write in Thamil? Thamilil kilika aasaiyaha irukirathu.

  • அம்பலத்தார்24 செப்டம்பர் 2010
    அம்மணி வை டோன்ற் ஆஸ்க் oi.mahen. ரு ரீச் தமிழ். ஐ டோன்ற் லயிக் ரு செக் சம் அதர்ஸ் வைப்ஸ் பேஜ். அம்மணி தயவு செஞ்சு தமிழை ஆங்கிலத்தில எழுதித் தமிழையும் என்னையும் கொல்லாதையுங்கோ. எப்படித் தமிழிலை எழுதுகிறதென்று சொல்லித்தாறன். அம்மணி நான் கீழை தந்திருக்கிற தொடுப்புக்குப் போங்கோ அதிலை இடதுபுறம் மேலே புதுவை என்று ஒரு பெட்டி இருக்கும் அதை அமுக்குங்கோ. இப்ப வந்த பக்கத்தில நடுவில தெரிவு செய்க என்றதில் thaminglish ஐ கிளிக்குங்கோ பிறகு தெரிவு செய்க என்றதுக்கு மேல இருக்கிற வெற்றிடத்தில் ampalathaar sonna kathaiyak keedda naan oru muzu muddaaL. என்று ஆங்கிலத்தில் தட்டுங்கோ கீழே இருக்கிற பெட்டியில அம்பலதார் சொன்ன கதையக் கேட்ட நான் ஒரு முழு முட்டாள் என்று வரும். தமிழில அடிச்சு அதை வெட்டிக் கடிதங்களிலை ஒட்டிவிட்டால் தமிழ் எழுத்துக்கள் கணனியிலை இல்லாதவர்களும்கூட அந்தக் கடிதத்தைப் படிக்கலாம். ஏனென்றால் இது யுனிக்கோட் எழுத்துரு எழுத்துக்கள் உருவங்கள்போல மாற்றப்படுவதால் இவற்றை எந்தக் கொம்பியுட்டரிலையும் தமிழ் படிக்கத்தெரிஞ்சவன் படிக்கலாம். சட்டென்று தமிழில ஒரு கடிதத்தைத் தட்டி அனுப்புங்கோ பார்க்கலாம்.
  • அம்பலத்தார்30 செப்டம்பர் 2010
    அம்மணி என்ன தமிழில் தட்டுவது அவ்வளவு கஸ்டமாக இருக்கோ ஒரு வரிகூட எழுதக்காணம். என்ரை ஆத்துக்காரி செல்லம்மா சொல்லுறா நான் அப்பவே சொன்னனான் கேட்டியளோ உந்த லண்டன்காரியளை நம்பாதையுங்கோ தங்கட காரியம் முடிஞ்சவுடன எஸ்கேப் ஆகிவிடுவாளவையென்று. அம்மணியும் தமிழ் படிச்சதோட எஸ்கேப்போ.
  • 30 செப்டம்பர் 2010
    Oi!!!!!! Thamil sari varuthillai. My target is this weekend. You will hear from me in Thamil soon mate!!!!!
  • 03 அக்டோபர் 2010
    ஓய், அம்பலத்தார், தமிழில் எழுதத் தெரியாதென்று நினைத்தீரா? இது என்ன பெரிய உலகமகா அதிசயமா? மகேனை பற்றி உமக்கு என்ன தெரியும்? நீர் ஒழுங்கா உம்முடைய வேலையை பாரும்.
  • அம்பலத்தார்03 அக்டோபர் 2010
    அம்மணி,தமிழிலை எழுதினதற்கு வாழ்த்துக்கள். அதுபோக நான் ஒய் அம்பலத்தார் இல்லை பொன்னர் அம்பலத்தார் அடிக்கடி பெயருகளை மாத்தி சொல்லி குடும்பத்திலை குத்துவெட்டுக்கு வழிபண்ணிவிடாதையுங்கோ. தமிழிலை எழுதினபடியால் இன்னும் ஒருதடவை கேட்கிறன் அந்த வெத்துப்பயல் மகேன் பெயரை அம்பலத்தாரின்ரை பக்கத்திலை எழுதமாட்டன் என்று சம்மதித்தல் you are sellected ............as a friend, deal ok.
  • அம்பலத்தார்03 அக்டோபர் 2010
    அம்மணி நான் என்ரை முகப்புத்தகப்பக்கம் என்ரை மனிசி பிள்ளைகளையே அண்டுறதில்லை மகேனை எப்படிச் சேர்க்கமுடியும். புரிஞ்சுகொண்டால் சரி.
  • 04 அக்டோபர் 2010
    வணக்கம். அம்பலத்தார். கனக்க கதைக்கிறிங்கள்!!!மகேனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்கட வேலையை பாத்துக் கொண்டு இருங்கோ. முள்ளிவாய்க்கால் கதை எல்லாம் எனக்கு வேண்டாம். எல்லாரும் அப்படி தான் சொல்லினம்.
  • அம்பலத்தார்05 அக்டோபர் 2010
    வணக்கம் அம்மணி,
    நாடுகடந்தவை ஆளாளுக்கு அடிச்சுக்கிற்தைப் பார்த்தால் சீக்கிரமே ஆட்டம் குளோஸ்போல கிடக்குது. இனிப்புலம்பெயர்ந்த காகிதப்புலிகள் சாயந்திரமானால் ஒன்றுக்கு இரண்டு பியரை அடிச்சிட்டுக் குப்புறப் படுக்கவேண்டியதுதான். பாவம் எங்கட சனங்களை உங்கட மகேனாலையும் காப்பற்ற இயலாது.
  • அம்பலத்தார்13 அக்டோபர் 2010
    அம்மணி என்ன கனநாளாய் பேச்சைக் காணம்
    ஓயாது பேசும் உம் வாயடைச்ச மர்மம் என்ன? சோகமாகிப்போனீரோ?
    சும்மா வந்து கதையளக்கமாட்டீரோ? கலகலப்பாயிருந்தால் ஆயுசுகெட்டி- அது உமக்குத்தெரியாதோ?
  • 11 ஜூலை
    Hello Ponnar.....Eppady suham?
    Enna sathamillai!!!!
  • அம்பலத்தார்12 ஜூலை
    சத்தமில்லாமல் சித்தம் படிக்கிறன்
  • 12 ஜூலை
    Valha!!!!!Valarha!!!!!!
  • அம்பலத்தார்12 ஜூலை
    வளர்கிற காலம் போட்டுது.வாழ்க ஓகே
    • அதுக்கிடையிலை என்ரை செல்லம்மா உது என்ன ஸ்கிரீனில படம் தெரியுது பொம்பிளையோ ஆம்பிளையோ என்று சதிராடத் தொட்ங்கிவிட்டா கொஞசம் மெல்லமாக் கதையுங்கோ.
      அம்மணி இப்படியே தொடர்ந்து மாறி மாறி எழுதி எழுதி சலிப்பாகிவிட்டது ஆதலால் இதைவிட நாம் நண்பர்களாக இணையலாம் என நினைக்கிறேன்.
      So now you you are included in my friends list..

10 comments:

Muruganandan M.K. said...

சுவார்ஸமாக இருந்தது. இப்படியெல்லாம் ஒரு கதம்பப் பதிவு எனக்குப் புதிதாக இருந்தது.

ஹேமா said...

எங்கட மனுசரிண்ட மனநிலை இதுதான் !

அம்பலத்தார் said...

டாக்டர் ஒரு ஏகலைவனாக உங்களிடமிருந்து பல விடயங்களையும் கற்றுவரும் எனக்கு குருவிடமிருந்தே பாராட்டுக்கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
sowmy, மற்றும் ஹேமா
உற்சாகமூட்டும் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி

நிலாமதி said...

காலத்துக்கேற்ற உரையாடல்பதிவு. இப்போ வயது வித்தியாச மில்லாமல் கம்பூட்டர் இல முக புத்தம் என்று ( face book )ஒரெ கலாட்டா தான். காலம் கெட்டு கிடக்கு அம்பலத்தார் கவனம். சும்மா தமாசுங்க.

அம்பலத்தார் said...

நிலாமதி
தமாசான கருத்திற்கு நன்றி

Anonymous said...

உதென்ன நல்ல கதையா இருக்கு, வேலைக்கு ஆள் எடுக்கிறமாதிரி, போகிற போக்கில interview வைச்சு, resume பார்த்து, வீடியோ conference செய்து
தான் friends list இல் அனுமதிப்பியளோ?, மனுசரை நம்புங்கோ அம்பலத்தார், நம்புங்கோ.

பராசக்தி said...

உங்கள் மானசீக குருவின் ஆக்கங்களை மீள்பதிவு செய்ய முடியுமா? என்போன்ற கத்துக்குட்டிகள் அறிவை வளர்க்க ......

அம்பலத்தார் said...

Anonymous said...

//உதென்ன நல்ல கதையா இருக்கு, வேலைக்கு ஆள் எடுக்கிறமாதிரி, போகிற போக்கில interview வைச்சு, resume பார்த்து, வீடியோ conference செய்துதான் friends list இல் அனுமதிப்பியளோ?....//
விருப்பமென்றால் நீங்களும் ஒரு விண்ணப்பம் போட்டுப்பாருங்கோ என்ன நடக்கிறதென்று.

பராசக்தி said...

"முழுப் பூசணிக்காயை சோத்துக்குள்ள மறைப்பது எப்படி அம்பலத்தார்?" இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கோவன்

பராசக்தி said...

அம்பலத்தார் உந்தAnonymous உங்களுக்கு விண்ணப்பம் போட்டவவோ, அல்லது நீங்கள் அவவிற்கு விண்ணப்பம் போட்டு நண்பராகி விட்டியளோ?