நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Saturday

இலங்கையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் இனவாத அரசியல் சக்திகள்.



தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று.
ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை.
அடுத்தது என்ன?


முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக தாக்குதல். இஸ்லாமியருக்கு சொந்தமான பிரபல வர்த்தகநிலையத்திற்கு எதிராக போராட்டம். இலங்கையில் இஸ்லாமியரின் ஜனத்தொகை விகிதாசாரம் வேகமாக அதிகரிக்கிறது. இதைத் தடுக்க இஸ்லாமியரைப்போல பௌத்தர்களும் ஐந்து தடவை மணமுடிக்க சட்டத்தில் மாற்றம் செய்யவெண்டுமென புத்தமதகுரு அறிக்கை.
என்ன இன்னமும் புரியவில்லையா சிங்கள இனவாத சக்திகள் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகின்றன.
காட்சி மாறுகிறது. இனிவரும்காலங்கலில் சிங்களவரின் கஸ்டங்களுக்கு காரணம் அதிகரித்துவரும் இஸ்லாமிய மக்கள் தொகைப்பெருக்கமும், சிங்களவரை சுரண்டிக்கொண்டிருக்கும் பெரும் இஸ்லாமிய வர்த்தகர்களுமே என்ற கருத்துருவாக்கம் உண்டுபண்ணப்படும்.
தீவிரவாத இஸ்லாமியசக்திகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜிகாத், புனிதப்போர் என்றுகூறிக்கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும், அல்கைதா போன்ற அமைப்புக்களுக்கும் இலங்கையில் தளம் அமைக்கும்.
அப்புறம் என்ன ஆப்கானிஸ்த்தான் மற்றும் பல இஸ்லாமிய நாடுகள்போல இலங்கையும் ரணகளமாகும். அமெரிக்காவும் ஐரோப்பாவும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எனும் பெயரில் இலங்கையின்மீதான தமது ஆதிக்கத்தை செலுத்தும்.

உழைக்கும் சிங்களமக்களின் போராட்டம் JVP என்றபெயரில் இரண்டுதடவைகள் நசுக்கப்பட்டது. எமது மக்களின் போராட்டம் நசுக்கப்பட்டது. மலையக மக்கள் ஆரம்பத்திலிருந்தே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாக்கி இருப்பது இஸ்லாமிய சமூகம் மட்டுமே. இப்பொழுது அவர்களுக்கெதிரான எதிர்ப்பலை மெல்ல மெல்ல உருவாக்கப்படுகிறது.

இலங்கை மக்கள்தொகையில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இன, மத, மொழி வேறுபாடுகளால் பிரிந்துகிடக்கும்வரை யாருக்கும் உரிமைகள் கிடைக்கப்போவதில்லை.
இப்பொழுது எம்முன் இருக்கும் ஒரே தெரிவு பிரித்தாளும் தந்திரத்தின்மூலம் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எல்லோரும் சேர்ந்து எம் எல்லோரையும் அடக்கி ஒடுக்கி சுரண்டிக்கொளுக்கும் மேட்டுக்குடி அரசியல் சக்திகளுக்கு எதிராக போராடவேண்டும்.

இதற்கான கருத்தியல் உருவாக்கத்தை மக்கள் எழுச்சியை தமிழ், இஸ்லாமிய, மலையக, சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சமூக ஆர்வலர்களும் தொலைநோக்குக்கொண்ட சிந்தனையாளர்களும் தமது சமூகத்தினரிடையே செய்யவேண்டும். செய்வார்களா? செய்வோமா?

2 comments:

தனிமரம் said...

தற்போதைய நிலையில் இலங்கை அரசியலில் மாற்றும் மாற்றுச் சிந்தனையும் வரட்சியாகவே இருக்கு இப்படிப்போனால் இனி ஒரு ஆப்கான் போல இலங்கையும் பிற்போக்கு புத்தநாடாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

செங்கோவி said...

சமத்துவமும் சகிப்புத்தன்மையும் அற்ற தேசம் வளர்ச்சியில் பிந்தங்கியே நிற்கும். அளவற்ற ஊழல், எங்கும் சொந்த பந்தங்களுக்குப் பதவி என பக்சே தரப்பு அனைத்து அட்டூழியங்களையும் செய்து வரும் நிலையில், வேறு மாற்று என்பது உடனடித் தேவை.

மேலும் ஒரு கொடுங்கோலனுக்கு ஆதரவு தெரிவித்தோர், தன் தவறை உணரும் தருணம் இது.