நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

நாங்களும் எங்கட விலாசங்களும் படுகிறபாடு.


எங்களது ஆட்கள் எதாவது ஒரு நிகழ்வு நடைபெறும் மண்டபம் ஒரு வீடு ஒரு கடை என எந்த ஒரு இடத்தின் முகவரியை சொல்லுறதென்றாலும் ரொம்பவும் விபரமாக சொல்லிடுவாங்க.

 என்ன ஒரு சோகமென்றால் அவங்க சொல்லுறபடி அந்த இடத்தை தேடிப்பிடித்து போகிற வல்லமை எனக்கில்லை. இப்படி நான் விலாசம் தேடின கதையளை உங்களுக்கெல்லாம் சொல்லி ஒருவாட்டி ஓவென்று அழுதால்தான் என்ரை மனசு ஆறும்.


ஒருசில வாரங்களுக்கு முன்னால நண்பர் ஒருவர் ரெலிபோன் எடுத்து அண்ணை வருகிற சனிக்கிழமை ஒரு நாடகம் போடுறம் நீங்க கட்டாயம் பார்க்க வரவேணும் என்றார். நானும் எங்கை போடுறியள் என்று சொல்லுங்கோ வசதியென்றால் வாறன் என்று சொல்லவும்.

என்ன அண்ணை இப்படிச் சொல்லுறியள் வசதியென்றால் வாறன் என்றதைவிட்டிட்டு கட்டாயமாக வாங்கோ. வந்து நாடகத்தை பார்த்திட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கோ.

சரியடா தம்பி வாறன் முகவரியை சொல்லுங்கோ.

அது ஒன்றும் கண்டுபிடிக்கிறது கஸ்டமில்லை நான் சொல்லுறமாதிரி வந்தியள் என்றால் சரி.
உங்கட வீட்டிலயிருந்து புறப்பட்டு அப்படியே ஹைவே 323 ஐ பிடிச்சுக்கொண்டுவந்து பெர்லின்னுக்குள்ள காரை இறக்கினியள் என்றால்......

அட விளக்கமாக சொல்லுறதைவிட்டிட்டு விலாசத்தை சொல்லும் நான் வந்திடுவன்.

இல்லை அண்ணை, இது ஒன்றும் கஸ்டமில்லை. அப்படியே பேர்லினுக்கை இறக்கின கையோட வலப்பக்கம் மடக்கி வெட்டி எடுத்தியளென்றால் ஒரு மக்டொனால்ஸ் வரும் அதுக்கு பக்கத்தில வாற சந்துக்க விட்டியளென்றால் அப்படியே கொஞ்சத்தூரம் ஓட ஒரு சுப்பமார்க்கட் வரும் அதில காரை விட்டிட்டு பின்பக்கமா நடந்துவந்தியளென்றால் ஒரு நீலக்கட்டிடம் தெரியும் அதுதான் இடம்......

அட தம்பி எனக்கு இந்த வயசில முன்பக்கமா நடக்கிறதே கஸ்டம் எதுக்கெடாமோனை பின்பக்கமா நடக்கவேணும்.

அண்ணை சும்மா பகிடியைவிட்டிட்டு நான் சொன்னதுபோல வாங்கோ.

இது இவ்வளவையும் எனக்கு ஞாபகத்தில வச்சிருக்க இயலாது முகவரியை சொன்னியள் என்றால் நவிகேட்டரில கொடுத்திட்டு இலகுவாக வந்திடுவன்.

அது வந்து.... வந்து... அண்ணை நான் சரியான விலாசத்தை குறித்துவைக்கேல்லை.
உங்களுக்கு புரியாவிட்டால் இன்னொருவாட்டி வடிவாச் சொல்லுறன்..

உங்கட வீட்டிலயிருந்து புறப்பட்டு அப்படியே ஹைவே 323 ஐ பிடிச்சுக்கொண்டுவந்து பெர்லின்னுக்குள்ள காரை இறக்கினியள் என்றால்......

சரி சரி சரி புரியுதடா தம்பி நான் தேடிப்பிடிச்சு வந்து சேருறன் என்று சொல்லிப்போட்டு அவசரம் அவசரமாக தொலைபேசியை வச்சிட்டன்.

சனிக்கிழமை நண்பர் சொன்னதுபோல போனால்..... என்ன நடந்தது என்கிறதை அப்புறமாக சொல்லுகிறன்.

செல்லம் செல்லம் டார்லிங் கதை சொல்லிக்களைச்சுப்போனன் ஓடிவந்து கன்னத்தில ஒன்றுகுடும்மா குடும்மா ஒண்ணே ஒன்று குடும்மா.......






விலாசம் காட்டுறது சீ சீ விலாசம் தேடுவது தொடரும்..........

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... அடுத்து என்னவாயிற்று...ஆவல்...

தனிமரம் said...

அம்பலத்தாருக்கு ரோட்டு சொன்ன கதை கேட்க ஆவல்:)))) ஐயா நலம் தானே!இனி ஓய்வுதான் தனிமரம் :))

முத்தரசு said...

ஒரு வடிவா சொல்லுங்கோ......ஆவலுடன்