நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது



எனது இளம்பிராயத்தில் நான் கல்விகற்றது கொழும்பு றோயல் கல்லூரி எனும் மூவின மக்களும் கல்வி கற்கும் பிரபல பாடசாலையில், வசித்தது மூவினமக்களும் கலந்து குடியிருந்த கொழும்பின் புறநகர்ப்பகுதி. 

எனது வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளிக் குடியிருந்தவ சாந்தா. அவ காலையில் மடிப்பு கலையாத ஸ்கூல் யூனிபாரமும், அழகாக முகத்திற்கு பவுடர் பூசி, நெற்றியில சின்னதா ஒரு திருநீற்று குறி, நடுவில ஒரு குட்டி ஸ்டிக்கர்பொட்டு என அம்சமா வாசற்கதவை திறந்துகொண்டு தெருவில் இறங்கும்வரை காத்திருந்து நானும் புறப்படுவன்.  


வழியெல்லாம் லொள்ளுவிட்டு, வழிஞ்சு, கடலைபோட்டு, கதைத்துக்கொண்டுபோய் கரும சிரத்தையாக அவ ஸ்கூலுக்கு போற பஸ் ஏற்றிவிட்டிட்டுத்தான் நான் என்ரை பஸ் ஏறுவன்.

 



மத்தியானம் பாடசாலை முடிந்து வீட்டிற்குவரேக்கை திரும்பவும் அதே லொள்ளுவிடுதல், வழிதல், கடலைபோடல், கதைத்தல் எல்லாம் நடக்கும்.
ஆனால் இப்ப சாந்தா இல்லை சமியந்தா.
கதை பேச்செல்லாம் தமிழ் இல்லை சிங்களம்.
"ஏ சமி அத பிக்சர் எக்கட்ட யமுத."(ஏ சமி இன்றைக்கு ஒரு படத்திற்கு போவோமா?)
"மாலினிகே ஹொந்த பிக்சரெக்க ஓடியன் தியட்டர்..." (மாலினி பொன்சேகா நடித்த நல்ல படமொன்று ஓடியன் தியேட்டரில...)

இப்படி ஜாலியாக போனதுதான் என்ரை வாழ்க்கை.

நாங்கள் பெடியளெல்லாம் சிங்களம் தமிழென்று பார்க்காமல் நல்லாப் பழகுவம் அடிபிடிப்படுவம், துவேசமென்றது பெரிதாகத் தலையெடுக்காத காலம். நாங்கள் அந்தமாதிரிச் சிங்களத்திலை வெளுத்துவாங்குவம்.
அவங்களும் தட்டுத்தடுமாறி "கொஞ்சங் கொஞ்சங் தமில் தெறியும்" என்று தமாசாகப் பேசுவாங்கள். ஆனால் தமிழிலை உள்ள எல்லாக் கெட்டவார்த்ததையளும் மட்டும் தப்பாமல் பேசுவாங்கள்.
ஜாலியாக ஜெயந்த "பற பள்ளோ மேவரேங் (பறைச்சாதி நாயே இங்கே வாடா)" என்றால்
நான் பதிலுக்கு "கட்ட வாப்பாங் வேசிக்கே புத்தா" என்பேன். (வாயை பொத்தடா வேசைமகனே)
தயவுசெய்து இந்த வார்த்தைப்பிரயோகங்களிற்கு மன்னிக்கவும். ஆனால் அந்த புரிதலையும் ஒற்றுமையின் வலிமையையும்  கண்முன் கொண்டுவர இதைவிட யதார்த்தமான சம்பாசணை எதுவும் எனக்கு தோன்றவில்லை, எங்களிற்குள் அன்னியோனியம் இருந்தது. துவேசமெதுவும் இருக்கவில்லை.

இந்த இடத்திலை இன்னுமொன்றையும் சொல்ல வேணும் பெடியள் செற்றுகளுக்கை அடிக்கடி அடிதடியளும் வந்திடும் அப்ப கூட நிற்கும் எங்கட ஆட்களிலை கனபேர் நைசாக் கழண்டிடுவினம். அவங்கள் சிங்களப் பெடிப்பிள்ளையள்தான் கடைசிமட்டும் நின்று எங்களுக்காக அடிபடுவாங்கள், அப்பிடி நட்பெண்டால் நட்பாய் இருந்த ஒருசில சிங்களப் பெடியளை இன்றைக்கும் மறக்கேலாது. பெர்னாண்டோ எனக்காக எத்தனை பேரோட அடிபட்டிருப்பான்.

பிறகு தமிழரும் சிங்களவரும் இரு துருவங்களாகி கால ஓட்டத்திலை நான் ஊர் துறந்து.....
                                            
ஒரு சில தசாப்தத்திற்குள் காலம் செய்த கோலத்தைப் பாருங்கோ. காட்சிகள் மாறி நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமே.

எதையோ கூறவந்து ஏதேதோ பழங்கதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறன்.

அட இன்னுமே மாற்றருக்கு வரேல்லையோ Trailer ஏ இம்மாம் நீளமென்றால்... 
என திட்டவேண்டாம்.
விசயத்திற்கு வாறன்.

தோல்வி அடைந்தவர்களின் கதை.


அதைத்தான் சொல்ல வந்தனான்.

அட போய்யா நாங்களே சோகத்தில துவண்டுபோய் இருக்கிறம் ஆளாளாளுக்கு இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு....

இது அது இல்லையப்பா. எங்க கதை கிடையாது....

அப்படின்னா நாங்க தோற்றவங்க இல்யெங்கிறியா? என்னதான் சொல்லவாறே நீட்டி முழக்காம சீக்கிரமா சொல்லிதொலை.

சரி சொல்லுறன் கேளுங்கோ.

இனிமையாகவும் அமைதியாகவும் கழிந்துகொண்டிருந்த வாழ்வில் ஒரு புயல். ஜே.வி.பி. இன் அரசுக்கெதிரான புரட்சி. இதன் அரங்கேற்றகாலத்தில் கொழும்பில் வாழ்ந்துவந்த நான் கலகெதற எனும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் கிராமத்தில் மாட்டிக்கொண்டன்.

ஊரடங்குச்சட்டம் போக்குவரத்துச் சீரின்மை போன்றவற்றாலை கொழும்பு திரும்பமுடியாமல் சிலவாரங்கள் அங்கு தங்கியிருந்தன்.
அந்தநாட்களில் அடிக்கடி ஆமிக்காரன், சேகுவராக்காரங்களை இராணுவ வாகனங்களுக்குப் பின்னாலை கயிற்றிலை கட்டி இழுத்துக்கொண்டு போறாங்களாம், வாகனத்திலை கன பெடியளைக் குற்றுயிராக அள்ளிப்போட்டுக்கொண்டு அவங்களுக்கு மேல ஏறி நின்றுகொண்டு போறாங்களாம் என்று சொல்லி புதினம் பார்க்க ஊர்ச்சனங்கள் பிரதான வீதிக்கு ஓடுவினம். நானும் பலதடவை புதினம் பார்க்க ஓடினவன்தான்.

புரிகிறதா? இலங்கையில் 1971 ம் ஆண்டு 1989 என இரண்டுதடவைகள் இடம்பெற்ற JVP கிளர்ச்சிபற்றிய எனது பார்வை கண்டது, கேட்டது, அனுபவங்கள் போன்றவற்றைத்தான் சொல்லவாறேன்.

இதுபற்றிய போதிய விளக்கங்களும் உண்மைகளும் தமிழில் பதிவுசெய்யப்படவில்லை.
றோகண விஜயவீர தோற்றவர்களின் தானைத் தலைவன்.
தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த ரோகண மருத்துவ கல்விக்காக சோவியத்யூனியன் சென்றிருந்தபோது அரசியல் ஆர்வம் உண்டாகியது. ஆனால் சீனசார்பு கம்யூனிஸ்டு கட்சியினருடனேயே அதிக தொடர்புகளை வைத்திருந்ததால் ரஸ்யாவில் அவர் தொடர்ந்து படிப்பதற்கான விசா மறுக்கப்பட்டது.

இந்தக்காலத்தில் அவர் N.சண்முகதாசன் தலைமையில் இயங்கிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் 150 ரூபா சம்பளத்தில் முழுநேர செயற்பாட்டாளராக இணந்துகொண்டார். பின்பு சண்முகதாசனுடன் முரண்பட்டு அதிலிருந்து 1966 ம் ஆண்டளவில் பிரிந்து சென்று ஆரம்பித்ததுதான் JVP எனும் ஜனதா விமுக்தி பெரமுன... என்பதாகும். 

1971 ஆண்டு கிளர்ச்சி ஏன் JVPயினர் திட்டமிட்ட தினத்திற்குமுன்பே எதிர்பாரதவிதமாக ஆரம்பிக்கவேண்டியதாயிற்று. JVP பெண் தொண்டர் அழகி பிரேமாவதி மானம்பெருமா கொலை, ரோகன விஜயவீரவை கைதுசெய்து கொலைசெய்ததின் பின்னணியில் இருந்த, முன்நாள் ஜனாதிபதி பிரேமதாசவிற்கு ஆதரவான இராணுவ அதிகாரிகள் என பல சுவாரசியமான விடயங்களை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

அதுவரை....
நேசமுடன் அம்பலத்தார் 



59 comments:

முத்தரசு said...

வணக்கம்.

படிச்சிட்டு வாரேன்.

முத்தரசு said...

அடுத்த பதிவிலா...

ம்

பராசக்தி said...

அம்பலத்தார், தொலைக்காட்சி நாடகங்கள் நடுவே வரும் விளம்பர இடைவேளை போல, "அடுத்த பதிவில் கூறுகிறேன்" போட்ட இடம், அருமை. மிகமிக ஆவலாக வாசித்துக் கொண்டிருக்கும் போது சினிமா பாடல் இடைவேளை வேறு!, வழமையாக தொலைக்காட்சி நிலையங்கள் சினிமா பாடல்களுக்கு, விளம்பர இடைவேளை தரும் போது, அம்பலத்தார் பதிவுலகில் "தன் வழி தனி வழி" என்பதாக, பதிவுலக "Super Star" ஆக உயர்ந்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற JVP கிளர்ச்சிகளில், தாங்கள் பார்த்தது 1971 ம் ஆண்டு, கேட்டது, 1989 ம் ஆண்டு என எடுத்துக்கொள்ளலாமா? சத்தியமாக இந்தப் பதிவை வாசிக்கும் வரை இலங்கை அரசியலின் மறு பக்கம் தெரியாமலேயே இருந்துவிட்டேன் என மன வாட்டமாக உள்ளது. மீதியை தெரிந்துகொள்ளும் ஆவலில் பெரிய பின்னூட்டமாகி விட்டது.

நிரூபன் said...

Hi grand fa, nice post, I can remember. Someone has published a big journal about Rohana in uthayan paper.

நிரூபன் said...

Was in 1999, Sarinigar Tamil paper also published a historical story about Rohana.

நிரூபன் said...

Nice start. I'm waiting for your next episode. Sorry about my English comments

கூடல் பாலா said...

ஈழத் தமிழ் வித்தியாசமான அனுபவமாக உள்ளது .....

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்.!


இன்றைய ஜெவிபி பற்றித்தான் எனக்கு தெரியும்.. அடுத்த பதிவில் முழுவதுமாக அறிந்துகொள்ள காத்திருக்கிறேன்.

எஸ் சக்திவேல் said...

அது ஒரு கனாக்காலம்!!

Yoga.S. said...

வணக்கம் அம்பலத்தார்!விடிய எல்லாரும் எழும்பீட்டினம் போல கிடக்கு.நான் கொஞ்சம் பிந்தீட்டனோ?பருவாயில்லை,இப்ப தேவையான ஒரு விசயத்தைத்தான் தொட்டிருக்கிறியள்.சின்னப் பொடியளுக்கும்,ஏன் அங்காலப் பக்கம் நடந்த பயங்கரங்கள் இங்கால இருந்த எங்களுக்கும் தெரியாது தான்!கடலை சாகுபடி செய்த விஷயம் நல்லாயிருக்கு!

மகேந்திரன் said...

வணக்கம் அம்பலத்தார் ஐயா,
J.V.P கிளர்ச்சி பற்றி தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.
முழுவதும் அறியவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

சிறு வயதில் பன்மொழி பேசும் சமூகத்தினருடன்
கலந்து இருப்பதில் இருந்த இன்பம் பற்றி நீங்கள்
சொல்லி இருப்பது அருமை..
நூலில் சொட்டை அதாவது முடிச்சி விழாத வரை தான்
அதன் பயன்பாடு என்பது எவ்வளவு அழகாக
விளங்குகிறது...

அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன் ஐயா...

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா அம்பலத்தாரின் பிளாஸ்பக்:))) நல்லாத்தான் இருக்கு... சாந்தாவின் கதை சொல்ல வெளிக்கிட்டு.. பாதியில அப்பூடியே விட்டிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

//"பற பள்ளோ மேவரேங் //

ரீச்சர் ஓடிவாங்கோ ஸ்பெல்லிங் மிஸ்ரேக்கூஊஊஊஉ:)) நாய்க்கு “வள்ளா”தானே?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... :))

முற்றும் அறிந்த அதிரா said...

//தயவுசெய்து இந்த வார்த்தைப்பிரயோகங்களிற்கு மன்னிக்கவும்///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) செல்லம்மா ஆண்டி கொஞ்சம் ஓடிவாங்க... அம்பலத்தாரை என்ன எனக் கேழுங்கோ:)))

அம்பலத்தார் said...

மனசாட்சி said...

//வணக்கம். படிச்சிட்டு வாரேன்.//
அவசரம் ஒன்றும் இல்லை மெதுவாக படிச்சிட்டு வந்து கருத்தை சொல்லுங்கோ. ஏனென்றால் ஒவ்வொருத்தனும் மனச்சாட்சி சொல்லுறதை கட்டாயம் செவிமடுக்கணும்தானே ஹி ஹி

அம்பலத்தார் said...

மனசாட்சி said...
//அடுத்த பதிவிலா...
ம் //
என்னங்க மனச்சாட்ட்சி இப்படி ம் என்றால் எப்படி..

அம்பலத்தார் said...

பராசக்தி said...
//அம்பலத்தார், தொலைக்காட்சி நாடகங்கள் நடுவே வரும் விளம்பர இடைவேளை போல, "அடுத்த பதிவில் கூறுகிறேன்" போட்ட இடம்.....//
அம்மாடி பராசக்தி ஒரு சுவாரசியமான விமர்சனப் பதிவுபோல நிறைய விடயங்களையும் சொல்லியிருக்கிறியள். நன்றி. உங்களைப்போன்றவர்களின் நல்ல விமர்சனங்கள்தான் மெலும் சிறப்பாக எழுதவேண்டும் என்ற ஆதங்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.

அம்பலத்தார் said...

பராசக்தி said...
// இலங்கையில் இடம்பெற்ற JVP கிளர்ச்சிகளில், தாங்கள் பார்த்தது 1971 ம் ஆண்டு, கேட்டது, 1989 ம் ஆண்டு என எடுத்துக்கொள்ளலாமா? சத்தியமாக இந்தப் பதிவை வாசிக்கும் வரை இலங்கை அரசியலின் மறு பக்கம் தெரியாமலேயே இருந்துவிட்டேன் என மன வாட்டமாக உள்ளது//
ஆமா 1971 இல் நேரில் பார்த்து அனுபவித்தது. 1989 இல் கேட்டு அறிந்துகொண்டது.
உங்களிற்கு தெரியாமல் இருந்தது உங்கள் தவறில்லை.
வரலாற்றின் சில பக்கங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. அவற்றையும் முடிந்தவரை ஆவணப்படுத்தவேண்டியது அவசியமானது.

அம்பலத்தார் said...

நிரூபன் said...

// Hi grand fa....//
வணக்கம் வாடா பேராண்டி சௌக்கியமா? படிப்பெல்லாம் எப்படிப்போகிறது. ரொம்ப பிசியா?

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//Nice start. I'm waiting for your next episode. Sorry about my English comments//
It doesn't matter dear.

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//Was in 1999, Sarinigar Tamil paper also published a historical story about Rohana.//
Thanks for the information Niru

அம்பலத்தார் said...

koodal bala said...
//ஈழத் தமிழ் வித்தியாசமான அனுபவமாக உள்ளது .....//
வருகைக்கும் கருத்துப்பகிரிவிற்கு நன்றி பாலா. இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு தடவை, உங்கள் சமுதாய விழிப்புணர்வு பணிகளிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்பலத்தார் said...

காட்டான் said...
//இன்றைய ஜெவிபி பற்றித்தான் எனக்கு தெரியும்.. அடுத்த பதிவில் முழுவதுமாக அறிந்துகொள்ள காத்திருக்கிறேன்.//
வணக்கம் காட்டான், 1971 இல் நீங்க பிறந்தே இருகமாட்டீர்கள் என நினைக்கிறேன்.
வராற்றின் மறைக்கப்படும் பக்கங்களை அறிந்திருப்பவர்கள் அவற்றை தெரியாதவர்களிற்கு கூறாமல் இருப்பதுவும் சமுதாயத்திற்கு செய்யும் ஒருவித தவறுதான்.

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார் !
எப்படிச் சொல்வது நீங்க வழிகாட்டி ஐயா துனிந்தவனுக்கு தும்புத்தடியும் துப்பாக்கி என்று மெனிக்கே போறபோக்கில் சொல்லும் சொல்வாடை இன்று இரவு வருகின்றேன் நீண்ட பின்னூட்டத்துடன். மறைக்கப்பட்ட வரலாறு சொல்லவேண்டியது மூத்தவர்களின் கடமை அதை நீங்கள் செய்வதில் சந்தோஸம் அப்பே கொல்லேங்கே ஹட்டிய அப்பிதன்னவா? ஹீ அப்பித் தெமலனே!

தனிமரம் said...

எங்களுக்கு சங்கீத்தா வீரரத்ன தான் கனவுக்கன்னி(சங்கீத்தாவுடன் எடுத்த போட்டோ மறக்கமுடியாது துரதிஸ்ரவசம் படம் மண்ணாப்போச்சு விதிவசத்தால்!) மாலினி
அல்ல !ஹீ ஹீ 

தனிமரம் said...

ரோகனவிற்கு N . சண்முகதாசனோடு ஏற்பட்ட தொடர்பை திட்டமிட்டே நம் சந்ததிக்கு மறைத்த மூத்தவர்களை மன்னிக்கமுடியாது இரட்டை வேடம் இடதுசாரிக் கொள்கையில் மட்டும்மல்ல வடக்கே இருந்த நம்மவர்களிடம் கூடத்தான் இருந்தது.

அம்பலத்தார் said...

எஸ் சக்திவேல் said...

//அது ஒரு கனாக்காலம்!!//
ஆமா அதை அனுபவிச்சங்களிற்குத்தான் புரியும்.

தனிமரம் said...

ரோகனவை நம்பிப் போய்  2கிளர்ச்சியின் போது 1989 இன் பிற்பகுதியில் மலையகத்தில்  எப்படி எல்லாம் சகோதர இனம் வேட்டையாடப்பட்டது என்பதற்கு கண்கண்ட சாட்சிகள் பலர் இன்னும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்கின்றார்கள்.தொடரும் என்பதால் அதிகம் பின்னூட்டம் இடாமல் ஒதுங்கி விடுகின்றேன்.நீங்கள் 1971 வரலாற்றைச் சொல்லுங்கள் கேட்கத் தயாராக இருக்கின்ரேன்
. சுராங்கனி  படும் பாட்டை நினைத்தால் வேண்டாம் அதிகாலையில் சிரிப்போம்.

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...
//வணக்கம் அம்பலத்தார்!விடிய எல்லாரும் எழும்பீட்டினம் போல கிடக்கு.நான் கொஞ்சம் பிந்தீட்டனோ?பருவாயில்லை//
அதனால் என்ன யோகா உங்களுக்கு ஒரு ஸ்பெசல் காப்பி தாறன் குடிச்சிட்டு நிதானமா கதைக்கலாம்

தனிமரம் said...

ரோகனவை நம்பிப் போய்  2கிளர்ச்சியின் போது 1989 இன் பிற்பகுதியில் மலையகத்தில்  எப்படி எல்லாம் சகோதர இனம் வேட்டையாடப்பட்டது என்பதற்கு கண்கண்ட சாட்சிகள் பலர் இன்னும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்கின்றார்கள்.தொடரும் என்பதால் அதிகம் பின்னூட்டம் இடாமல் ஒதுங்கி விடுகின்றேன்.நீங்கள் 1971 வரலாற்றைச் சொல்லுங்கள் கேட்கத் தயாராக இருக்கின்ரேன்
. சுராங்கனி  படும் பாட்டை நினைத்தால் வேண்டாம் அதிகாலையில் சிரிப்போம்.

தனிமரம் said...

ரோகனவை நம்பிப் போய்  2கிளர்ச்சியின் போது 1989 இன் பிற்பகுதியில் மலையகத்தில்  எப்படி எல்லாம் சகோதர இனம் வேட்டையாடப்பட்டது என்பதற்கு கண்கண்ட சாட்சிகள் பலர் இன்னும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்கின்றார்கள்.தொடரும் என்பதால் அதிகம் பின்னூட்டம் இடாமல் ஒதுங்கி விடுகின்றேன்.நீங்கள் 1971 வரலாற்றைச் சொல்லுங்கள் கேட்கத் தயாராக இருக்கின்ரேன்
. சுராங்கனி  படும் பாட்டை நினைத்தால் வேண்டாம் அதிகாலையில் சிரிப்போம்.

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...
//கடலை சாகுபடி செய்த விஷயம் நல்லாயிருக்கு!//
ஹி ஹி நீங்களும் வயசுபோனாலும் கடலையை விடுறதில்லை என்றுதான் நிற்கிறியள்.

தனிமரம் said...

Yoga.S.FR said...
//வணக்கம் அம்பலத்தார்!விடிய எல்லாரும் எழும்பீட்டினம் போல கிடக்கு.நான் கொஞ்சம் பிந்தீட்டனோ?பருவாயில்லை//
அதனால் என்ன யோகா உங்களுக்கு ஒரு ஸ்பெசல் காப்பி தாறன் குடிச்சிட்டு நிதானமா கதைக்கலாம்

//யோகா ஐயாவுக்கு பால்கோப்பியில் ஏலம் போட்டுக் கொடுங்கோ! ஹீ

தனிமரம் said...

நானும் காதல் கதை என்று ஓடிவந்தால் கடைசியில் அரசியலில் என்னையும் கும்மியடிக்க விட்டீங்களே அம்பலத்தார் இது நியாயமா! நாங்களும் கடலை போட்டம் ஐராங்கனியுடன் ஆனால் படிக்கும் போதல்ல பணிக்குப் போன பிறகு! சமித்தா லஸ்ஸன கெல்லத ஏயாவா நமுத் அசாரக்கரனவத??(செல்லம்மக்காவிடம் போட்டுக் கொடுக்க வழிகிடைத்துவிட்டது ஹீ ஹீ)

தனிமரம் said...

இப்ப உடரட்டையில் போய்க்கொண்டு இருக்கின்றன் பிறகு வாரன் அம்பலத்தார் பின்னூட்டத்துடன்.தொடர்வேன் !அதிரா ஏதோ சொல்லியிருக்கின்றா பதில் சொல்லுறன் பிறகு வந்து .மீஈஈஈஈஈ

தனிமரம் said...

கலகேதர குருணாகல் மாவட்டத்தில் வரும் பகுதிதானே அம்பலத்தார்??

அம்பலத்தார் said...

மகேந்திரன் said...
//சிறு வயதில் பன்மொழி பேசும் சமூகத்தினருடன்
கலந்து இருப்பதில் இருந்த இன்பம் பற்றி நீங்கள்
சொல்லி இருப்பது அருமை..
நூலில் சொட்டை அதாவது முடிச்சி விழாத வரை தான்
அதன் பயன்பாடு என்பது எவ்வளவு அழகாக
விளங்குகிறது...// வணக்கம் மகேந்திரன், சௌக்கியமா?
நாடுகள்முதல் பெரும் நிறுவனங்கள் சிறு கம்பனிகள்வரை தனித்து இயங்குவதைவிட சேர்ந்து இயங்குவதே முன்னேற்றத்திற்கும் ஆதாயத்திற்குமான வழி என எண்ணி செயற்படும் இன்றைய காலகட்டத்தில், முன்னேறிய நாடுகளின் நரித்தனமான செயற்திட்டங்களுக்கு அமைய மூன்றாம் உலக நாடுகளில் உள்ளவர்களும் அரபு நாடுகளும் தமக்குள்ளேயே பிளவுபட்டு மோதிக்கொள்வதை என்னவென்று சொல்வது?

அம்பலத்தார் said...

athira said...
//அடடா அம்பலத்தாரின் பிளாஸ்பக்:))) நல்லாத்தான் இருக்கு... சாந்தாவின் கதை சொல்ல வெளிக்கிட்டு.. பாதியில அப்பூடியே விட்டிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))//
வணக்கம், அதிரா என்ரை டார்லிங் செல்லம்மா செஞ்ச தக்காளி சாதம் இருக்கு கொஞ்சம் சாப்பிடுகிறியளா? ஹா ஹா நீங்க நாங்க கேட்டா ஏமந்திடுவமா என்ன? சாந்தா மாற்றர் எல்லாத்தையும் வெளிய சொல்லமாட்டமே!

அம்பலத்தார் said...

athira said...

//"பற பள்ளோ மேவரேங் //

ரீச்சர் ஓடிவாங்கோ ஸ்பெல்லிங் மிஸ்ரேக்கூஊஊஊஉ:)) நாய்க்கு “வள்ளா”தானே?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... :))//
அதிரா வாத்தியாரை திருப்பி அனுப்புங்கோ... நானும் தப்பில்லை நீங்களும் தப்பில்லை. அது பள்ளோவும் இல்லை வள்ளோவும் இல்லை அதனை B என்ற உச்சரிப்புடன் சொல்லவேணும் அதற்குரிய தமிழ் எழுத்து இல்லை.

அம்பலத்தார் said...

athira said...
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) செல்லம்மா ஆண்டி கொஞ்சம் ஓடிவாங்க... அம்பலத்தாரை என்ன எனக் கேழுங்கோ:)))//
Please don´t karrrrrrrrrrrr Madam.
என்ரை டார்லிங் செல்லம்மாட்டை மட்டும் மாட்டிவிட்டியள். அப்புறம் தெரியும் இந்த அம்பலத்தரின்ரை வீரம்.... என்ன ஸ்பீட்டா எங்கே ஓடுவன் என்று எனக்கே தெரியாது.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//எப்படிச் சொல்வது நீங்க வழிகாட்டி ஐயா துனிந்தவனுக்கு தும்புத்தடியும் துப்பாக்கி....//
என்ரை டார்லிங் செல்லம்மவை கட்டின கொஞ்சக்காலத்திலையே தும்புத்தடியின் Power தெரிந்துவிட்டது.

வலையுகம் said...

நண்பர் அமபலத்தார்

///ஜாலியாக ஜெயந்த "பற பள்ளோ மேவரேங் (பறைச்சாதி நாயே இங்கே வாடா)" என்றால்
நான் பதிலுக்கு "கட்ட வாப்பாங் வேசிக்கே புத்தா" என்பேன். (வாயை பொத்தடா வேசைமகனே)///

கொஞ்சம் ஓவருதான் இருந்தாலும் இயல்பாக இருக்கு

ஆத்மா said...

நான் சின்னப் பையன் அந்த காலத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்று அறிந்து கொண்டேன்.. ஆவலுடன் அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன்.காரணம் என்னுடைய சின்ன வயதினில் பிரேமேதாச இறந்து விட்டார் அவர் பற்றிய தகவல்களை அறிய ஆவலாக உள்ளேன்

Unknown said...

பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன விஷயங்கள் நான் கேள்விப்பட்டது மட்டுமே! நாங்கள வளர்ந்த சூழ்நிலை காரணமாக அவர்கள் நட்புடனே இருந்தாலும் எங்களால் ஒன்ற முடியவில்லை! இடைவெளி பலமாக!!

நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்!

Anonymous said...

ஜேவிபி நேசர் பதிவிலிருந்து உங்களதில் தொடர்கிறது அம்பலத்தார்...

சுராங்கனி சுராங்கனி...இனிமை...

அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன்...

நன்றி அம்பலத்தார்...

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள் !

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//எங்களுக்கு சங்கீத்தா வீரரத்ன தான் கனவுக்கன்னி(....//
ஆகா! அப்படியென்றால் உங்கட ஆத்துக்காரி என்ன கன்னி என்று ஒருக்கால் சொல்லுறியளே நேசன்

அம்பலத்தார் said...

தனிமரம் said...
/ரோகனவிற்கு N. சண்முகதாசனோடு ஏற்பட்ட தொடர்பை திட்டமிட்டே நம் சந்ததிக்கு மறைத்த மூத்தவர்களை மன்னிக்கமுடியாது இரட்டை வேடம் இடதுசாரிக் கொள்கையில் மட்டும்மல்ல வடக்கே இருந்த நம்மவர்களிடம் கூடத்தான் இருந்தது.//
இலங்கை வரலாற்றில் இதுபோல நிறைய விடயங்கள் பலருக்கும் தெரியாமல் மறைந்து கிடப்பது உண்மைதான்.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
// ...தொடரும் என்பதால் அதிகம் பின்னூட்டம் இடாமல் ஒதுங்கி விடுகின்றேன்.நீங்கள் 1971 வரலாற்றைச் சொல்லுங்கள் கேட்கத் தயாராக இருக்கின்ரேன்
. சுராங்கனி படும் பாட்டை நினைத்தால் வேண்டாம் அதிகாலையில் சிரிப்போம்.//
நேசன் நீங்கள் எப்பொழுதும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லலாம். You are always wellcome. எப்பொழுதுமே சீரியசான விடயங்களை சொல்லிக்கொண்டிருந்தால் படிக்கிறவங்களுகு சலிப்பேற்பட்டுவிடுமே அதனால்தான் அதனால்தான் சாந்தா, சமியந்தா, சுராங்கனிப்பாட்டு..... இப்படிப் பலவிசயங்கள் அடிக்கடி வந்துபோயிட்டு இருக்கிறது.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//நானும் காதல் கதை என்று ஓடிவந்தால் கடைசியில் அரசியலில் என்னையும் கும்மியடிக்க விட்டீங்களே அம்பலத்தார் இது நியாயமா!...//
இதுவும் காதல் கதைதான் நானும் முருகனைப்போல இரண்டு பெண்டாட்டிக்காரன் முதலாவது செல்லம்மா அடுத்தது சின்னவீடுமாதிரி அரசியல்.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//கலகேதர குருணாகல் மாவட்டத்தில் வரும் பகுதிதானே அம்பலத்தார்??//ஓம் நேசன் கண்டி, றம்புக்கன, குருநாகல் மூன்றிற்கும் இடையில் இருக்கிற பெரும்பான்மையாக அன்பான இஸ்லாமிய மக்களும், சிறிதளவு சிங்கள குடும்பங்களும் ஆறும், மலைச்சாரலும் நிறைந்த அழகிய கிராமம்.

அம்பலத்தார் said...

ஹைதர் அலி said...
// நண்பர் அமபலத்தார் கொஞ்சம் ஓவருதான் இருந்தாலும் இயல்பாக இருக்கு//
வணக்கம் ஹைதர் அலி, யதார்த்தமாக உள்ளதை உள்ளபடியே எழுதினேன். மனதுக்கு கஸ்டமாக இருந்தா மன்னித்துக்கொள்ளுங்கோ.

அம்பலத்தார் said...

சிட்டுக்குருவி said...
//நான் சின்னப் பையன் அந்த காலத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்று அறிந்து கொண்டேன்.. ஆவலுடன் அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன்.காரணம் என்னுடைய சின்ன வயதினில் பிரேமேதாச இறந்து விட்டார் அவர் பற்றிய தகவல்களை அறிய ஆவலாக உள்ளேன்//
வணக்கம் சிட்டுக்குருவி உங்களைப்போன்ற இளைய சந்ததியினரும் எமது வரலாற்களை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பது மகிழ்வு தருகிறது.

அம்பலத்தார் said...

ஜீ... said...
//பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன விஷயங்கள் நான் கேள்விப்பட்டது மட்டுமே! நாங்கள வளர்ந்த சூழ்நிலை காரணமாக அவர்கள் நட்புடனே இருந்தாலும் எங்களால் ஒன்ற முடியவில்லை! இடைவெளி பலமாக!!//
இதுபோன்ற மிகவும் நீண்டதொரு பிரச்சனையின் வடுக்களில் இருந்து விடுபட நீண்டகாலம் எடுக்கும்.
நாங்கள் புலம்பெயர்ந்து இருந்துகொண்டு பலதையும் சொல்லலாம். ஆனால் உங்களைப்போன்று தாயகத்தில் வாழ்பவர்களுக்குத்தான் நடைமுறை சிக்கல்கள் தெரியும்.

அம்பலத்தார் said...

ரெவெரி said...
//ஜேவிபி நேசர் பதிவிலிருந்து உங்களதில் தொடர்கிறது அம்பலத்தார்...
சுராங்கனி சுராங்கனி...இனிமை...
அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன்...//
வணக்கம் ரெவெரி, எமது தாயக அரசியலில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டு மகிழ்ச்சிதருகிறது.

அம்பலத்தார் said...

திண்டுக்கல் தனபாலன் said...

// தொடருங்கள் !//
நன்றி தனபாலன்

ஹேமா said...

இரண்டு நாளுக்குப் பிறகு ஏதோ சொல்றன் எண்டு சிங்களத்தால திட்டாதேங்கோ அம்பலம் ஐயா.என்க்கும் சிங்களம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.நிறைய விளங்கும்.

எங்கள் பழங்கதை என்ன புதுக்கதயென்ன எல்லாமே வலிகளும்,இரத்தமும்,பயமும் அவலமும்தானா.சந்தோஷமான கதை ஏதாலும் இருந்தால் பெரியவையள் நீங்கள் சொல்லுங்கோவன்.கேக்க ஆசையாயிருக்கு !

enrenrum16 said...

வாசித்து புரிவதற்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கு.... என்னை மாதிரி ட்யூப்லைட்டுகளுக்கு ஏற்ற மாதிரி இன்னும் நல்ல எளிய தமிழில் எழுதினால் எனக்கு புரிய வசதியாயிருக்கும். (என் சின்னத்துரை தூக்கத்திலிருந்து விழிப்பதற்குள் வாசித்து முடிக்க ஏதுவாக இருக்கும்:))...அரசியல் தொடரை வாசிக்க ஆவலாயிருக்கிறோம்.

Muruganandan M.K. said...

அடேயப்பா! இவ்வளவு தகவல்களை
இத்தனை நாட்களாக எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள். அருமையாக இருக்கிறது.