நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

சொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.
இந்த விடயத்தை இங்கு ஜேர்மனியில் இருக்கிற என்ரை நண்பன் ராசுக்குட்டியனிற்கு சொல்லத்தொடங்க....... 

ராசுக்குட்டியன் "ஓய் அம்பலத்தார் உமக்கு என்ன கிறுக்கு பிடிச்சுட்டுதே. கொஞ்சக்காலத்துக்குமுன் போராளியாக இருந்தன் என்றதுபோல கதைவிட்டீர். இப்ப என்னடா என்றால் என்ரை பிரண்ட் சிறிலங்கா இராணுவத்தில....." என்று புதுக்கதை ஒன்றை கிளப்புகிறீர் என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கவும்
நான் "சும்மா சிரிக்காதை ராசுக்குட்டி நானும் கொமாண்டர் ஜெயந்த பெர்னாண்டோவும் படிக்கிறகாலத்தில வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலிலையும், கல்கிசை கடற்கரையிலையும் ஒன்றாக கடலை போட்டனாங்கள்."

என்ன அது? சிங்களவனோட சேர்ந்து கடலை போட்டனிரோ? அடபாவி அப்ப நீர் ஒரு சரியான துரோகி.

விபரம் தெரியாமல் எண்ணையிலை போட்ட அப்பளம்போல பொரியாதை ராசு. இது நடந்தது நாங்க துரோகிப்பட்டம் கொடுக்க தொடங்கிய காலத்திற்கு முன்.

கடலை போட்டது என்று சொல்லவும்தான் அவள் சிங்களத்துக்குட்டி சமியந்தா ஞாபகம் வருகிறது.  துருதுரு என்று ஆளைக் கிறங்கடிக்கிற பார்வையும், இதோ பாருங்கடா என்ரை அழகான தொடையை  என்று சொல்லாமல் சொல்லுவதுபோலவும், கொஞ்சம் குனிஞ்சாலே அவள் போட்டிருக்கிற உள்ளாடை எங்களை எட்டிப் பார்த்து கண்ணடிக்கும் என்கிற லெவலிலையும் அரைமீற்றர் துணியிலை தைத்த  மினி ஸ்கேர்ட் என கல்கிசை வித்தியாலய பாற வில் குடியிருந்த இளவட்ட பசங்கள் பலரதும் கனவுக்கன்னி சமியந்தாதான்.

நான் அவளிற்கு கடலைபோட்டு சைட் அடிக்க கடைசிவரை துணைக்கு நின்றவன் இந்த ஜெயந்ததான். எனக்கு வில்லனா வந்த இன்னொரு சிங்களப்பெடியன் காமினியை அடித்தே எங்கட ஏரியாவைவிட்டு கலைத்தது ஜெயந்ததான்.
கதையை முழுவதுமாக சொல்லவிடாமல்.......

"ஏற்கெனவே எனக்கு கனபேர் காது குத்திவிட்டாங்கள். எவனாவது இளிச்ச வாயன் கிடைச்சால் அவனுக்கு சொல்லும் உந்த கதையை " என்று  ராசுக்குட்டியன் திட்டிப்போட்டான். 

அதுதான் இப்ப உங்களுக்கு அந்த விடயத்தை சொல்லலாம் என்று வந்தனான். 

 "அடி செருப்பாலை அப்படியென்றால் நாங்கதான் அந்த இளிச்சவாயரோ"
என்று நீங்க உங்க பிஞ்ச செருப்பை தூக்கமுதல் நான் சோல்லுறதை கொஞ்சம் கேளுங்கோ. 

ஜெயவர்த்தனாவின் சொந்தங்களும், பண்டாரநாயக்கா குடும்பத்தில இருந்து பலரும் இராணுவத்தில பெரிய பதவியில் இருக்கலாம்.

ஜனாதிபதி ராஜபக்சவின்ரை கடைசி சகோதரியின்ரை புருசன் நடேசன் திருக்குமரன்  என்கிற தமிழராக இருக்கலாம். 

 கோத்தபாயவுக்கு கூட்டிக்கொடுத்தவங்கள் முக்கிய பதவியிலை இருக்கலாம். 

அரசியல்துறை பொறுப்பாளர் ப. நடேசன் மனைவி ஒரு சிங்கள பெண்ணாக இருக்கலாம். 

என்ரை பிரண்ட் மட்டும் சிங்கள இராணுவத்திலை இருக்கிறான் என்றால் நம்ப இயலாதோ.... 
நீங்களே சொல்லுங்கோ பார்ப்பம். 

ஓம் அம்பலத்தார் நீங்க சொல்வதை கேட்க..... 

அடடா பார்த்தியளே நீங்களே நம்பலாம் போலகிடக்கு என்று சொல்லவாறியள் - என்ன நான் சொல்லுறது சரியே? 

இல்லை அம்பலத்தார் அது வந்து....  நம்பலாம் ஆனால் இப்ப நம்ப இயலாமல் இருக்கு என்று சொல்லவாறம். 

கழுவுற மீனில நழுவுற மீன்போல "நம்பலாம் ஆனால் இப்ப நம்ப இயலாது." என்றதையெல்லாம் விட்டிட்டு வெட்டொன்று துண்டு இரண்டா பதில் சொல்லுங்கோ. 

அது வந்து கோபப்படாமல் நாங்க சொல்லுறதைக் கொஞ்சம் கேளும்... 

நிஜமாலுமே என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்திலதான் இருக்கிறான். ஆனாலும் இப்ப விளக்கமாக சொல்ல இயலாது.
உங்களோட இவ்வளவு நேரமாக கதைத்ததிலையே மூச்சிரைக்குது. அப்புறமாக வந்து அடுத்த பதிவிலை ஆர்மியலை இருக்கிற பிரண்டின்ரை கதையை சொல்லுறன். 

அதுவரை எதாவது புது யன்னல்களாக திறந்து பாருங்கோ. எதாவது சுவாரசியமான சமாச்சாரங்கள் தென்பட்டால் எனக்கும் சொல்லுங்கோ படித்துப்பார்க்கலாம். 

 Bye Bye.

 Hai chellam. 
Where are you? 
 I am soooo tired டா செல்லம்.

இந்த பசங்களோட ரொம்பநேரமாக கதைச்சதிலையே தொண்டை கட்டிடிச்சு செல்லம்
Cup of சுக்கு காப்பி please. 

நல்லா ஊர் வம்பளந்துபோட்டு
நேரத்துக்கு நேரம் சாப்பாடு தண்ணி வேணுமென்றால் மட்டும்
ஹாய் செல்லம் ஹீ செல்லம் என்றுகொண்டு வீட்டிற்கு வாங்கோ.
எடு பிள்ளை உந்த பிஞ்ச செருப்பை.....
 

you Chellam 
My Chellam 
Why Chellam  இந்த கொல வெறி.
 

ஐயோ .....தடால்........

எதாவது புது ஜன்னலா திறந்து பாருங்க என்றால்,
ஏன் நீங்களெல்லாம் என்ரை வீட்டு யன்னல்லாலை எட்டிப்பார்க்கிறியள்.
ஹீ ஹீ அது வேறொன்றும் இல்லை.
செல்லம்மா காலிலை சிற்றெறும்பு ஒன்று கடிச்சுது....
அதுதான் அந்த சிற்றெறும்பு ஓடி தப்பிக்கமுதல் தடால் என்று விழுந்து...
சிற்றெறும்பை நானும் அடிச்சனான்.

                   

இன்றைக்கு கதை அம்புட்டுந்தான்.  நீங்களும் அவங்க அவங்க வீடுகளிற்குப்போய் அங்கேயும் யாருக்காவது சிற்றெறும்பு எங்கேயாவது இசகுபிசகான இடத்திலை கடிக்குதா என்று பாருங்கோ.


அரும்பத விளக்கம்
கல்கிசை - கொழும்பின் புறநகர்களில் ஒன்று
வித்தியாலய பாற - கல்லூரி வீதி
 


நேசமுடன் அம்பலத்தார்

44 comments:

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

வணக்கம் அண்ணர்! தோ படிச்சுட்டு வர்ரேன்! கொஞ்சம் பயமா இருக்கு!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அந்த சமியந்தாவ மனசுல இருத்திட்டீங்க! - ஹா ஹா ஹா எங்க மனசுல!

அவளை வர்ணித்தவிதம் அருமையோ, அருமை!

கவனம் அண்ணர் செல்லமக்கான்ர கண்ணில இந்தப் பதிவ காட்டிப் போடாதேங்கோ! :-)

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

ஹா ஹா ஹா ஹா அண்ணி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டு எப்புடி சமாளிக்குறார் பாருங்கோ!

அன்ணர், உங்கள் நண்பர் இராணுவத்தில் இருப்பதால் நாம் எதுவுமே பிழையாக நினைக்கப் போவதில்லை! நீங்க ஓபனாகவே சொல்லியிருக்கலாம்!

அம்பலத்தார் said...

ஆறுதலாக படியுங்கோ மணி

அம்பலத்தார் said...

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
//அந்த சமியந்தாவ மனசுல இருத்திட்டீங்க! - ஹா ஹா ஹா எங்க மனசுல!
அவளை வர்ணித்தவிதம் அருமையோ, அருமை!
கவனம் அண்ணர் செல்லமக்கான்ர கண்ணில இந்தப் பதிவ காட்டிப் போடாதேங்கோ! :-) //

சமியந்தாவை மனசில் வைத்தால் அப்புறம் ஏற்கெனவே மனசில இருக்கிற விதானையாரின்ரை மகள் என்ன ஆகிறது.
No promlem Mani. செல்லம்மா சதிராட தொடங்கமுதல் ஐயா சட்டென்று விழுந்திடுவனே- செல்லம்மா காலில்

அம்பலத்தார் said...

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

//ஹா ஹா ஹா ஹா அண்ணி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டு எப்புடி சமாளிக்குறார் பாருங்கோ! //
ஓகோ அப்ப நீங்களும் ஜன்னலிற்காலை எட்டிப் பார்த்திட்டியள்.

அம்பலத்தார் said...

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
//அன்ணர், உங்கள் நண்பர் இராணுவத்தில் இருப்பதால் நாம் எதுவுமே பிழையாக நினைக்கப் போவதில்லை! நீங்க ஓபனாகவே சொல்லியிருக்கலாம்!//
மணி எனக்கு இலங்கையின் மூவின மக்களிலும் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அதை சொல்வதில் தயக்கமும் இல்லை. நான் எப்பவுமே அரசியலையும் தனிப்பட்ட நட்புகளையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக்கொள்வதில்லை.

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்!
இன்றைய பதிவை மட்டும் பார்த்திட்டு பின்னூட்டம் போட்டால்... இதன் தொடர்ச்சிப்  பதிவில் நான் செருப்படி வாங்கனும்.?;-))  நாங்க அடுத்த பதிவையும் வாசிச்சிட்டுடுதான்  கச்சேரி.

அதுவரைக்கும் எங்கேயாவது சிற்றெறும்பு இருக்குதான்னு பார்த்திட்டு வாரேன்க.;-))

அம்பலத்தார் said...

காட்டான் said...
//வணக்கம் அம்பலத்தார்!
இன்றைய பதிவை மட்டும் பார்த்திட்டு பின்னூட்டம் போட்டால்... இதன் தொடர்ச்சிப் பதிவில் நான் செருப்படி வாங்கனும்.?;-)) நாங்க அடுத்த பதிவையும் வாசிச்சிட்டுடுதான் கச்சேரி.//
வணக்கம் காட்டான் சும்மா சொல்லப்படாது ரொம்பவும் உசாராகத்தான் இருக்கிறியள்.

அம்பலத்தார் said...

Blogger காட்டான் said...
//அதுவரைக்கும் எங்கேயாவது சிற்றெறும்பு இருக்குதான்னு பார்த்திட்டு வாரேன்க.;-))//
கவனம் காட்டான் சிற்றெறும்பை பார்க்கிறதோட நிறுத்துங்கோ பிடிக்கப்போய் கடி வாங்கியிடாதையுங்கோ

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார்!
ஹா ஹாஹா சிரிப்புத்தாங்க முடியல முதலில் சிறு எறும்பு கடிச்சுப்போட்டுது என்று வீழ்ந்து கும்பிடும் சாதாரமானவனின் படம் பார்த்து முதலில் காலையில் சிரிக்க வைத்ததற்கு ஒரு வாழ்த்து.

தனிமரம் said...

ஹாய் செல்லம் என்று நீங்க போட்ட ஜொல்லு இன்னும் அடங்கவில்லை செல்லம் செல்லம்மா அக்காளிட்ட போட்டுக்கொடுக்கனும்.ஹீ ஹீ

தனிமரம் said...

முத்தாய்ப்பா அம்பலத்தார் மிகவும் சந்தோஸம் உங்கள் நண்பன் என்று துனிந்து சொன்னீர்கள் பாருங்க கைகொடுங்க அம்பஜாலுவா !
ஏன் தானோ சிலர் கதையைச் சொல்லமுன்னமே  வெட்டனும் ,கொத்தனும் துரோகி ,என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவதை என்ன சொல்வது .ஏன் இப்படிப்போனது நம் இளைய சமுகம் என்று எனக்குல் இன்னும் தேடல் முடியவில்லை .என் பாதி நண்பர்கள் சகோதரமொழி இனத்தவர்கள் அதில் கடலைபோட்ட சாலிக்கா ,ஐராங்கனி இன்னும் அதிகம்.இதைச் சொன்னால் சிலர் என்னைப்பார்க்கும் பார்வையை நினைத்தால் சிரிப்பு வரும் ஆனாலும் பல நல்ல நண்பர்கள் நாட்டுக்கு சேவை என்று போனவர்களும் இருக்கும் அதே சமயத்தில் மண்மீட்பு என்று போன நண்பர்களையும் பெற்றதில் நானும் ஒரு சாமானியன்.

தனிமரம் said...

நாங்களும் கல்கிசையில் விழுந்து எழும்பிய விடலைப்பசங்க செல்லம்.ஹீ ஹீ

தனிமரம் said...

ராஜபக்ஸ குடும்பத்தில் இன்னொரு சகோதரியின் கணவர் ஒரு தமிழர் அதுவும் ரகசியம் அம்பலத்தார். இதை வெளியில் தனிமரம் சொல்லும் ஆனாலும் கொலைவெறி அதிகம் வரும் வேனாம் பிறகு நான் அழுவிடுவேன் பிளாக் விட்டு ஓடனும்.!!!!!!!

Anonymous said...

நாங்கள் யன்னலைத் திறந்து பார்க்க காதிலே கேட்டது, கண்ணிலே தெரிந்தது இதுதான். www.youtube.com/watch?v=ZA1NopLB-L8
அம்பலத்தார் செல்லம்மாவின் காலிலே விழுந்து தான் இந்தப்பதிவையும் எழுதினாரோ?...என்று சந்தேகமா இருக்கு

அம்பலத்தார் said...

Anonymous Anonymous said...

//நாங்கள் யன்னலைத் திறந்து பார்க்க காதிலே கேட்டது, கண்ணிலே தெரிந்தது இதுதான். www.youtube.com/watch?v=ZA1NopLB-L8 //
நீங்க பகிர்ந்த லிங்கிற்கு நன்றி இப்ப பதிவில பாடிட்டிருக்கிறன் கேளுங்கோ

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//ஹா ஹாஹா சிரிப்புத்தாங்க முடியல முதலில் சிறு எறும்பு கடிச்சுப்போட்டுது என்று வீழ்ந்து கும்பிடும்..... //
நேசன் உங்களிற்கு மனமகிழ்வு ஊட்ட முடிந்ததில் மகிழ்ச்சி.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//...செல்லம் செல்லம்மா அக்காளிட்ட போட்டுக்கொடுக்கனும். ஹீ ஹீ//
ஐயோ நேசன் ஐந்தோ பத்தோ வேணுமென்றால் வெட்டுறன் போட்டு குடுத்திடாதையுங்கோ

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//முத்தாய்ப்பா அம்பலத்தார் மிகவும் சந்தோஸம் உங்கள் நண்பன் என்று துனிந்து சொன்னீர்கள் பாருங்க கைகொடுங்க அம்பஜாலுவா !
ஏன் தானோ சிலர் கதையைச் சொல்லமுன்னமே வெட்டனும் ,கொத்தனும் துரோகி ,என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவதை என்ன சொல்வது .ஏன் இப்படிப்போனது நம் இளைய சமுகம் என்று எனக்குல் இன்னும் தேடல் முடியவில்லை. என் பாதி நண்பர்கள் சகோதரமொழி....//
உங்கள் புரிதல் அனைவருக்கும் (இருதரப்பிலும்) வரவேண்டும் ஒருவன் ஆளும்கட்சியில் இருப்பான் இன்னொருவன் எதிர்க்கட்சியில் இருப்பான் மற்றொருவன் தீவிர இடதுசாரியாக இருக்கலாம் ஏன் தீவிர வலதுசாரியாககூட இருக்கலாம் அது அவரவர் விருப்பம். நட்பும் அரசியலும் வேறு வேறு இதை புரிந்துகொள்ளாதவரை சிக்கலே. நான் என்றும் எனது உரிமைகளுக்காகவும் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுப்பேன். அதேநேரத்தில் அனைத்து மக்களினதும் உண்மையான சுதந்திரத்தை நேசிக்கிறன். அனைவரையும் சமமாக மதிப்பதை விரும்புகிறேன்.அதற்காக குரல்கொடுக்கவும் தயங்குவதில்லை

அம்பலத்தார் said...

Blogger தனிமரம் said...
//நாங்களும் கல்கிசையில் விழுந்து எழும்பிய விடலைப்பசங்க செல்லம்.ஹீ ஹீ//
நீங்கள் முன்பொருதடவை ஓடியன் தியேட்டரில் படம் பார்த்தவிடயத்தை கூறும்போதே புரிந்துகொண்டேன் நேசன்.

Anonymous said...

நீங்களும் அவங்க அவங்க வீடுகளிற்குப்போய் அங்கேயும் யாருக்காவது சிற்றெறும்பு எங்கேயாவது இசகுபிசகான இடத்திலை கடிக்குதா என்று பாருங்கோ//

லொள்ளு டைம்ஸ் த்ரீ ...

ஹேமா said...

ஹாய்...செல்லம் யாரைப் பார்த்துச் சொன்னீங்களோ பொதுவில கிடக்கு அது.செல்லம்மா மாமிக்குத் தெரிஞ்சா செல்லம் அம்பலத்தாரின்ர கெதி கஞ்சிதான் !

யாரும் யாருக்கும் ஃப்ரெண்டா இருக்கலாம்.அள்ளி வைக்காம இருந்தாச் சரி.அதோட ஃப்ரெண்டா இருக்கிற ஆக்களுக்கும் பாதுகாப்பு வேணும் !

பாட்டு ரசனையோ ரசனை !

வீடு K.S.சுரேஸ்குமார் said...

சமியந்தா இன்னும் மனசில வருகிறாளா? அம்பலத்தாரே!
உங்கள் எழுத்து நடை கொஞ்சம் படிக்க சிரமமா எனக்கு இருந்தாலும்...படிக்க சுவையா இருக்கு!

மனசாட்சி said...

சிரமப்பட்டு படித்தேன்.


ம்.

அம்பலத்தார் said...

தனிமரம் சைட்...

//ராஜபக்ஸ குடும்பத்தில் இன்னொரு சகோதரியின் கணவர் ஒரு தமிழர் அதுவும் ரகசியம் அம்பலத்தார். இதை வெளியில் தனிமரம் சொல்லும் ஆனாலும் கொலைவெறி அதிகம் வரும் வேனாம் ...//

என்ன நேசன் இதுக்கெல்லாமா பயப்படுவாங்க

அம்பலத்தார் said...

ரெவெரி சைட்...

// லொள்ளு டைம்ஸ் த்ரீ ...//

ஹா ஹா

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

ஹேமா சைட்...
//ஹாய்...செல்லம் யாரைப் பார்த்துச் சொன்னீங்களோ பொதுவில கிடக்கு அது.செல்லம்மா மாமிக்குத் தெரிஞ்சா செல்லம் அம்பலத்தாரின்ர கெதி கஞ்சிதான் !//
ஹேமா கஞ்சி கிடைத்தாலே பரவாயில்லை.

//யாரும் யாருக்கும் ஃப்ரெண்டா இருக்கலாம்.அள்ளி வைக்காம இருந்தாச் சரி.அதோட ஃப்ரெண்டா இருக்கிற ஆக்களுக்கும் பாதுகாப்பு வேணும் !//
அனுபவமுள்ளவங்க சொல்லுறியள் கேட்டுக்கிறேன்.


//பாட்டு ரசனையோ ரசனை !//
ஹாஹா

அம்பலத்தார் said...

வீடு K.ஸ்.சுரேஸ்குமார் சைட்...

சமியந்தா இன்னும் மனசில வருகிறாளா? அம்பலத்தாரே!//
ஹீ ஹீ மெதுவா சொல்லுங்கோ செல்லம்மா காதிலை கேட்டுவிடப்போகிறது.

//உங்கள் எழுத்து நடை கொஞ்சம் படிக்க சிரமமா எனக்கு இருந்தாலும்...படிக்க சுவையா இருக்கு!//
ஈழத்து பேச்சு வழமையையும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.

அம்பலத்தார் said...

மனசாட்சி said...

// சிரமப்பட்டு படித்தேன்.

ம்//
என்னங்க இப்படி சொல்லிப்புட்டிங்க. நாங்க தமிழ்நாட்டின் மதுரைத்தமிழ் கோயம்புத்தூர் தமிழ், சென்னைத்தமிழ்..... எல்லாத்தையுமே புரிஞ்சுக்கிறோம். உங்களுக்கு நம்ம தமிழ் ரொம்ப சிரமமாக இருக்கோ

சந்திரகௌரி said...

உண்மையச் சொன்னா யாருக்கும் பிடிக்காது பாருங்கோ . 3 இனமும் ஒரு நாள் ஒன்றாக வாழ்ந்த இடமே நான் பிறந்த ஊர். இது சொன்னா வேற ரத்தம் ஓடுது என்பார்கள். இப்பத்தானே வெளி நாட்டிலே ஆபரேஷன் என்ற பெயரிலே எத்தனையோ இனத்துடைய இரத்தம் எல்லாம் ஓடுது. கம் என்று இருப்பது தமிழனுக்கு எப்போதும் தேவைப்படுகின்றது. நல்ல சுவாரஷ்யமாக விடயங்களைக் கொண்டு வருகின்றீர்கள். இந்தப் பாணி பிடித்திருக்கின்றது. மனதை மாற்றி உங்கள் பக்கத்தில் இருந்து போக நல்ல பிரபுதேவா நடனமும் காட்டியிருக்கின்றீர்கள் . continue yourself

athira said...

என் கண்ணில் தலைப்பு படவே 2 நாள் முடிஞ்சு போச்சு:)

அம்பலத்தார் உந்த உங்கட ஆமியில பெரியாளாக இருக்கிற நண்பனின் ஃபோன் நம்பரை எனக்கு ஒருக்கால் தர முடியுமோ?:)

athira said...

சமியந்தா அழகுதான், ஆனாலும் வர்ணிச்சது கொஞ்சம் ஓவர்தான்:)) எதுக்கும் உங்கட செல்லம்மாவின் கண்ணில இத்தலைப்பு பட்டிடாமல் இருக்க, அடிக்கடி எறும்பு பிடியுங்கோ :))

Yoga.S.FR said...

வணக்கம் அம்பலத்தார்!சிற்றெறும்பு சா...........ல கடிச்சு,மூத்திரம் பெய்ய பட்ட கஷ்ரமெல்லாம் இருக்கு!

அம்பலத்தார் said...

உங்க ஆதங்கம் புரிகிறது சந்திரகௌரி. இலங்கையில் தமிழர் தாயக பிரதேசங்களுக்கு வெளியே வாழ்ந்தவர்களிற்குத்தான் இதை புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். 77 கலவரத்தில் என்னை காப்பாறியதும் சிங்களவங்கதான், மிகவும் பிந்தங்கிய சிங்கள ஊர் ஒன்றில் தனி ஒரு தமிழராக இருந்து வைத்தியராக கடமை ஆற்றிய எனது சகோதரனை கலவரத்தில் காப்பாற்றியதும் அவங்கதான் மற்றும் ஒரு சிங்கள பிரதேசத்தில் மிக இளவயதினராக ஒரு கைக்குழந்தையுடன் வாழ்ந்த எனது அக்கா அத்தானையும் கலவரத்தின்போது காப்பாற்றியதும் சிங்களவர்தான். எல்லா இனங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பது சகஜம்தான். உங்கள் பாராட்டுகளிற்கு நன்றிகள்.
சந்திரகௌரி said...
//உண்மையச் சொன்னா யாருக்கும் பிடிக்காது பாருங்கோ . 3 இனமும் ஒரு நாள் ஒன்றாக வாழ்ந்த இடமே நான் பிறந்த ஊர். இது சொன்னா வேற ரத்தம் ஓடுது என்பார்கள். இப்பத்தானே வெளி நாட்டிலே ஆபரேஷன் என்ற பெயரிலே எத்தனையோ இனத்துடைய இரத்தம் எல்லாம் ஓடுது. கம் என்று இருப்பது தமிழனுக்கு எப்போதும் தேவைப்படுகின்றது. நல்ல சுவாரஷ்யமாக விடயங்களைக் கொண்டு வருகின்றீர்கள். இந்தப் பாணி பிடித்திருக்கின்றது. மனதை மாற்றி உங்கள் பக்கத்தில் இருந்து போக நல்ல பிரபுதேவா நடனமும் காட்டியிருக்கின்றீர்கள் . continue yourself//

அம்பலத்தார் said...

அதிர said...
//என் கண்ணில் தலைப்பு படவே 2 நாள் முடிஞ்சு போச்சு:)

அம்பலத்தார் உந்த உங்கட ஆமியில பெரியாளாக இருக்கிற நண்பனின் ஃபோன் நம்பரை எனக்கு ஒருக்கால் தர முடியுமோ?:)//
நான்,தம்பி மணி, மச்சான் காட்டான், சகோதரம் யோகா, என்ரை பெறாமகன் நிரூ என்று சொந்தங்கள் எல்லாத்துக்கும் எதிரா வழக்கு வச்சிட்டு இப்ப என்ரை கொமாண்டர் பிரண்டின்ரை நம்பர் வேணுமோ. ஹா ஹா இப்ப அவனை வச்சுத்தானே அந்த வழக்கையே வெல்லப்போறம்.

அம்பலத்தார் said...

athira said...

//சமியந்தா அழகுதான், ஆனாலும் வர்ணிச்சது கொஞ்சம் ஓவர்தான்:)) எதுக்கும் உங்கட செல்லம்மாவின் கண்ணில இத்தலைப்பு பட்டிடாமல் இருக்க, அடிக்கடி எறும்பு பிடியுங்கோ//
டார்லிங் செல்லம்மா. எங்க வீட்டுக்கை எதோ திருட்டு பூனை கக்துகிற சத்தம் கேட்குது. விரட்டிவிடுங்கோ.

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...
//வணக்கம் அம்பலத்தார்!சிற்றெறும்பு சா...........ல கடிச்சு,மூத்திரம் பெய்ய பட்ட கஷ்ரமெல்லாம் இருக்கு!//
வணக்கம் யோகா முதமுதலா வீட்டுக்கு வந்திருக்கிறியள் கோப்பி தருவம் என்றால் இந்த நேரம் என்றுபார்த்து செல்லம்மா வீட்டிலை இல்லை.
நீங்க சொல்லுறதை பார்த்தால் உங்களுக்கும் அடிக்கடி சிற்றெறும்பு கடிச்சிருக்குதுபோல தெரியுது.

Yoga.S.FR said...

வெளியில சொன்னா வெக்கக்கேடேண்டு சாரியமா உங்களிட்ட அதுக்கும் இடைவெளி விட்டு எழுத,நீங்கள் என்னடாவெண்டால் பரிசு கெடுக்காம விடமாடன் எண்டு ஒற்றைக்காலில நிக்கிறியள்,ஹி!ஹி!ஹி!!!!!!!!

Yoga.S.FR said...

முதமுதலா வீட்டுக்கு வந்திருக்கிறியள் கோப்பி தருவம் என்றால் இந்த நேரம் என்றுபார்த்து செல்லம்மா வீட்டிலை இல்லை.////அயலுக்கை இருக்கிற பொடியன் ரெண்டு மூண்டு தரம் கோப்பி தந்திருக்கிறான்!பறுவாயில்லை,இண்டைக்கு இல்லாட்டி என்ன?இன்னொரு நாளைக்கு செல்லம்மாக்கா வீட்டில இருக்கேக்கை பாப்பம்!ஆனாப் பாருங்கோ,பிரான்சில கோப்பிய விட "செற்"தான் பேமஸ்!செற் எண்டா தெரியுமோ?ஒரு முழுப் போத்தில்,கலக்கிறதுக்கு சோடா,ரெண்டு/மூண்டு பிளாஸ்ரிக் கப்,ஒரு சின்ன பவடா இல்லாட்டி மிக்சர் பக்கற் ஒண்டு!(ஒருத்தருக்கும் பறைஞ்சு போடாதயுங்கோ.நான் தண்ணி அடிக்கிற ஆள் எண்டு நினைச்சிடுவினம்!தமிழ்க் கடையில வேலை செய்த அனுபவம்.)

athira said...

ஹா...ஹா..ஹா... உங்கட டார்லிங், எங்கட செல்லம்மா ஆண்டியை, கைக்குள்ள போட்டுத்தான்.. அந்தச் சங்கிலியைக் கண்டு பிடிக்கப் போறன்...:))

யோகா அண்ணன் என்னவோ சொல்றார்.. நான் ஒண்ணும் படிக்கேல்லை:)

Yoga.S.FR said...

athira said...

யோகா அண்ணன் என்னவோ சொல்றார்.. நான் ஒண்ணும் படிக்கேல்லை:)////Good!Very,Very Good!!!!!!!Believe me!!!!!

நிலவன்பன் said...

உங்கட தமிழ் நடை அருமை