நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

என்னை செதுக்கியவள்


சிலகாலத்துக்குமுன் பெர்லின் நகரத்திலை ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன்.  நீண்ட நாட்களின்பின் எனது நண்பர் ஒருவரை நேரில் சந்திக்கமுடிந்தது. அவரும் கலை, இலக்கியம், மேடைப் பேச்சு என்று பலதிலையும் கால் பதிச்சவர். சமத்துவம் பொதுவுடமை என்றெல்லாம் பந்தாவாக் கதைத்துக் கொண்டு திரியிறவர். பலதும் பத்தும் கதைத்துக்கொண்டு இருக்கும்போது அவர் சொன்னார். ஒருகப்பலுக்கு ஒரு கப்டன் (தலைவன்) அதுபோல வீட்டுக்கும் ஒற்றையாட்சிதான் சரி, அப்படியென்றால்தான் பிரச்சனைகள் இல்லாமல் முடிவுகள் எடுக்கலாம் என்று.
"ஓ! உங்கட மனுசி வலு கெட்டிக்காரிதானே அப்ப அவவே உங்கட கப்பலுக்குக் கப்டன்." என்று நான் வழமைபோலவே யோசிக்காமல் டக் என்று கேட்டன்......
"சீ! நல்ல கதையாக்கிடக்கு" .... அது வந்து  எப்பவும் ஆம்பிளையள்தான் கப்டனாக இருக்கவேணும் என்றார் அவசர அவசரமாக. 





எங்கட வீட்டை.... யோசித்துப்பார்த்தன்.

உண்மையைச் சொன்னால் என்ன ! என்ரை வீட்டிலையென்றால் என்ரை செல்லம்மாதான் கப்டன். ஐயாவுக்கு வெளிவிகார அமைச்சு அதுதான் ஊர்த் தொண்டு, கூட்டல், பெருக்கல், வீட்டுவேலைகள்....... போல சில ஒன்றுக்கும் உதவாத அமைச்சுக்கள்தான். சும்மா சொல்லக் கூடாது என்ரை மனுசி ஒரு நடமாடும் கொம்பியூட்டர். வீட்டு நிர்வாகத்திலை மட்டுமில்லை பத்து வருசத்துக்கு முந்திப் படிச்ச பாலகுமாரன் கதை, 15 வருசத்துக்கு முந்திப் பார்த்த படத்திலை வரும் ஒரு கட்டம், பல வருசங்களிற்கு முன்பு நண்பனின் கல்யாணத்திற்குக் கொடுத்த மொய், 20 வருசத்துக்கு முன்னர் வந்த திசைகள் பத்திரிகையில மாலன் எழுதினதுபற்றி.... எப்பவோ படித்த கவிதை என்று என்ன கேட்டாலும் விரல் சொடுக்க முதல் பதில்வரும்.


செல்லம்மாவைச் சைட் (காதலிக்க) அடிக்கத் தொடங்கின காலத்தில நான் பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சமே! அப்பொழுதுதான் என்ரை ரசனை அத்தை பெத்த ரத்தினம், சித்தியின் சிலுமிசங்கள்.... என்ற லெவலிலையிருந்து (அளவில்) ஆனந்தவிகடன் குமுதத்துக்கு உயர்ந்திருந்தது. இங்கு கட்டாயம் இன்னுமொரு விடயத்தையும் சொல்லவேணும். அந்தக்காலத்தில் எங்களது வீட்டில் கலைமகள், தீபம், மஞ்சரி மல்லிகை, சிரித்திரன் ஆகிய சஞ்சிகைகள் தொடர்ந்து வாங்குவது வழமை. இதிலை நான் வீட்டில் படிக்கிறது சிரித்திரன் மட்டும்தான்.

அந்தநேரத்தில் செல்லம்மா என்னடா என்றால் ஜெயகாந்தன், அசோகமித்திரன், வல்லிக்கண்ணன், எஸ்.பொ, அ.முத்துலிங்கம், டொமினிக் ஜீவா என்று எனக்கு ஆரென்றே தெரியாத ஆக்களின்ரை கதையள், மல்லிகை, தீபம்,கணையாளி என்று ஊர்பேர் தெரியாத சஞ்சிகைகளையெல்லாம் தந்து படிக்கச்சொல்லும்.

அதுகூடப் பரவாயில்லை பிறகு அவனுக்கு ஒழிச்சு இவனுக்கு ஒழிச்சுப் போய் சந்திச்சு ஆசையா நாலுவார்த்தை கதைப்பமென்று தொடங்கமுதல்,
"என்னப்பா அந்த எஸ்.பொ.வின்ரை ஆண்மை புத்தகத்திலை அந்தாள் என்ன மாதிரித் துணிச்சலா எழுதியிருக்கிறார்...... அந்தக் கதையைப்பற்றி என்ன நினைக்கிறியள்?....."
"பாலகுமாரின்ரை அகல்யாவின்ரை கடைசி அத்தியாயம் வாசிச்சிட்டு நான் அழுதிட்டனப்பா......"
"கணையாளியின் கடைசிப்பக்கத்தில் சுஜாதா அட்டகாசமாக எழுதியிருக்கிறாரப்பா" என்று அதுகள் பற்றியே கதைப்பா. எனக்குப் படிக்கத் தந்த புத்தகங்களைப் பற்றி என்னை வேறு குறுக்குக் கேள்வியள் கேட்பா.

எனக்கு ஏனடா இவங்களெல்லாம் வேற வேலையில்லாமல் கதை, கட்டுரை எழுதுறாங்களென்று எரிச்சலாக வந்தாலும் புதுசா லவ்பண்ணத் தொடங்கியிருக்கிறன்..... நானும் பதிலுக்கு நாலு விசயங்கள் சொல்லாட்டில் செல்லம்மா இளக்கமா நினைச்சுப் போடுவாள் என்ற பயத்திலை, உந்தப் புத்தகங்களை எல்லாம் ஒன்றுக்கு நாலுதரம் படிச்சு எதாவது நாலு பொயின்டுகள் (விசயங்களை) பிடிச்சுக் கொண்டுபோய் விலாசமாக் கதைக்கப்போய் ஏடாகூடமா மாட்டுப்பட்டுப்போவன். ஆழமாகப் படிச்சு ரசிக்கும் செல்லம்மாவிடம், நுனிப்புல் மேய்ந்துவிட்டு புழுகுற என்ரை பருப்பெல்லாம் வேகாமல் போயிடும்.

ஆனால் என்ரை மனுசிக்குப் பயத்திலை கண்டது கடியதுகளை எல்லாம் படிக்கத் தொடங்கினதிலை இப்ப விலாசமாக அம்பலத்தார் தொடர்ந்து எதோ ஓரளவிற்கு நீங்களெல்லாம்  படிக்கிறமாதிரி எழுதத்தக்கதாக இருக்கு.

நான் ஆரம்பத்தில் அத்தை பெத்த ரத்தினம், சித்தியின் சிலுமிசங்கள், மித்திரன் பத்திரிகையில் தொடராக வந்த சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியின் கதை, பமீலா போன்ற கிளுகிளு கில்மா கதைகள் என்ற லெவலில் (அளவில்) படிக்கத்தொடங்கித்தான் தரமான இலக்கியங்களை தேடத்தொடங்கினேன் என்று சொல்வதற்கு வெட்கப்படவில்லை.  கொழும்பு வெள்ளவத்தை பிள்ளையார்கோயிலுக்கு வரும் குட்டியளை
சைட் அடிக்க, நாங்கள் தமிழ் சிங்களப் பெடியள் எல்லாம் ஜாலியாகப்போவம். அங்கு கோயிலுக்குப் பக்கத்திலை இருந்தசின்னக் கடையொன்றில் தொங்கும் இந்தக் கிழுகிழு கில்மாப்புத்தகங்களை வாங்கி நாங்க நண்பர்களெல்லாம் ரகசியமாக வீட்டிலை தெரியாமல் மாறிமாறிப் படிப்பம். அதிலை எங்களுக்கு ஒருவித பெருமை. ஒருவிதத்தில் இந்த கிளூகிளு கதைகள்தான் முதலில் எனக்கு தமிழின்பக்கம் ஒரு ஈர்ப்பை உண்டுபண்ணியது, அதற்காக அவற்றை எழுதியவர்களுக்கும் நன்றி சொல்லவேணும். 

ஆனால் இன்றைய புலம்பெயர் பெற்றோரில் பலரும் தங்கள் பிள்ளைகள் ஆரம்பத்திலேயே சங்க இலக்கியங்கள், கலிங்கத்துப்பரணி, ஐம்பெரும் காப்பியங்கள் தான் படிக்கவேண்டும் என அடம்பிடிப்பது வேதனையாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. இப்பாடி சொல்லுகிறவர்களெல்லாம் ஆரம்பத்திலேயே சங்க இலக்கியங்களை படித்துத்தான் தமிழ் வளர்த்துக்கொண்டாரளா என்ன? 

தயவுசெய்து உங்கட பிள்ளைகள் ஆரம்பத்தில் சினிமா பொழுதுபோக்கு என இலகு வாசிப்புச் செய்யும்போது அவர்களது பாணியில் படிக்க விட்டுவிடுங்கள். வாசிப்பிலும் தமிழிலும் அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு நாளடைவில் அவர்களாகவே நல்ல படைப்புகளைத் தேடிப் படிக்கத்தொடங்குவார்கள். அதைவிடுத்து இதைத்தான் படிக்கவேண்டுமென்ற எமது திணிப்பு பிள்ளைகளிற்கு தமிழ்மீதும் வாசிப்புப் பழக்கத்தின்மீதுமே ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடும். பிள்ளைகளையும் அவர்களது வயதிற்கேற்ற விருப்பு வெறுப்புக்களுடன் புரிந்துகொள்ள முயலுங்கள்.


எதோ எழுதத்தொடங்கி எங்கேயோபோட்டன். திட்டாதையுங்கோ சரி என்ரை விசயத்திற்குவாறன். காட்டாறுபோல எதற்கும் அடங்காமல் திரிந்த எனக்கு அவ செல்லம்மா கடிவாளம்போட்டு ஒருகட்டுக்கை கொண்டுவந்திராவிட்டால் ஐயாவிரை சமாதியிலை எப்பவோ புல்லு முளைத்திருக்கும். வெறும் கல்லாக தெருவோரம் கிடந்த எனக்கு உருவம் கொடுத்து ஒரு சிற்பமாக இன்னமும் செதுக்கிக்கிகொண்டு இருப்பது என்ரை செல்லம்மாதான்.

இந்தமாதிரி எல்லாம் எழுதாட்டில் அம்பலத்தாருக்கு வீட்டிலை அடுத்த  
வேளைச் சோற்றுக்கே சிக்கலெண்டு முணுமுணுக்கிறது கேட்குது. அதுசரி நான் என்ரை மனுசியைப்பற்றி புளுகிறதிலை உங்களுக்கு என்ன முணுமுணுப்பு வேண்டிக்கிடக்கு? அம்பலத்தான் பெண்டாட்டிதாசன் என்று முணுமுணுக்கிறதை விட்டிட்டு நீங்களும் என்ரை வழியைப் பின்பற்றிப் பாருங்கோவன்! என்ன விளங்குதே நான் சொல்லுறது? உங்களது மனைவிமாரிடம் இருக்கிற திறமைகளையும் அறிந்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மதிக்கப்பழகிப் பாருங்கோ குடும்பம் ஒரு கோயிலாகும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்களையும் உங்கட கோயிலிலை சந்திக்க ஆவலோடவாறன்.



 


நேசமுடன் அம்பலத்தார்

40 comments:

Thozhirkalam Channel said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

வாழ்த்துக்களுடன்

Admin said...

கிளுகிளுப்பு கதைகள்தான் தமிழின் மீது ஒரு பற்றுதலை உண்டுபண்ணியது என்பதை மறைக்காமால் ஒத்துக்கொண்டதும் தான் படித்த புத்தகங்களை சுட்டிக்காடியதும் ஆங்காங்கே மெலிதான நகைச்சுவை கலந்து அனுபவத்தை சொன்ன விதம் அருமை..


அன்போடு அழைக்கிறேன்..

இறப்பதை எதிர்பார்க்கிறோம்

இராஜராஜேஸ்வரி said...

உங்களது மனைவிமாரிடம் இருக்கிற திறமைகளையும் அறிந்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மதிக்கப்பழகிப் பாருங்கோ குடும்பம் ஒரு கோயிலாகும்.

வாழ்த்துகள்..

ad said...

அப்பாடா... இண்டைக்குத் தப்பீட்டார்.ஹிஹி.
சரி.. செல்லம்மா அக்காவையும் ப்ளாக் எழுத சொல்லுங்கோ.

சென்னை பித்தன் said...

//உங்களது மனைவிமாரிடம் இருக்கிற திறமைகளையும் அறிந்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மதிக்கப்பழகிப் பாருங்கோ குடும்பம் ஒரு கோயிலாகும்.//
அருமையாச் சொன்னீங்க!

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார் நலமா???
இல்லத்தரசிகளின் நிர்வாகத்திறமையை வெகுவாக விமர்ச்சித்து அதன் ஊடே வாசிப்புப் பாதை எவ்வாறு இலக்கியம் மீது திசை திருப்பப் படும் என்பதைச் சொல்லிச் செல்லும் அருமையான பதிவு!

தனிமரம் said...

செல்லாம்மா அத்தையை சுற்றிவர அவர் கற்ற ஈழத்து இலக்கியம் எஸ்.பொ,ஜீவா, மல்லிகை இதழ் சிரித்திரம் சுந்தர் போன்ரோரின் இலக்கியப் படைப்புக்களைக் கற்று அதன் தாற்பரியம் தெரிந்து கொண்ட நீங்கள் ஏன் ஈழத்து இலக்கியவாதிகளுக்கு சந்தைப்படுத்தல் திறமையின்னையும், இலக்கிய வழுக்களையும் சாடும் பண்டித மணிகளுக்கு புரியும் வண்ணம் நம்மவர் இலக்கியச் சுவையை ஒரு தொடராக தரமுயலலாமே ஐயா!

தனிமரம் said...

எஸ்.பொ வின் ஆண்மை என்ற நாவலின் உலகதரத்தையும் அன்றே அவர் எழுதிய பாலியல் நூல் என்று முகம் சுழுத்தவர்களின் கபடத்தனமும் அதை ஒரு வட்டத்துக்குள் வைத்து மற்றவிடயங்களை அவதானிக்க முடியாத நடுநிலமையாளர்களின் முகத்திரையையும் இன்று இளையதலைமுறையினருக்கு அவர் பற்றிய ஞாபகக் குறிப்புக்களைத் தரலாமே ஐயா!
மல்லிகை இதழ் ஆசிரியர் ஜீவாவை ஆரம்பத்தில் வளர்த்தவர் பின் ஜீவாவின் பாதை கொழும்பில் அவர் நடத்தும் அச்சகம் போன்றவற்றையும் பதிவாக இடுவீர்களா ஐயா!

தனிமரம் said...

ஈழத்து இலக்கியவானத்தைப் பற்றி அதிகம் தெரிந்த உங்களிடம் இருந்து அரிய நூல்கள் பற்றிய காத்திரமான பதிவு என் போன்ற இளையவர்களுக்கு கிடைக்கும் என நினைக்கின்றேன் முயல்வீர்களா!

சுதா SJ said...

அம்பலத்தாரும் அப்போ ஒரு மன்மதன்தான் போல.... ஹா ஹா

சுதா SJ said...

மனசில் பட்டத்தை போட்டு உடைக்கும் சில பதிவர்களில் நீங்களும் ஒருவர்..... கருத்து போட நேரம் இடம் கொடுக்கா நேரங்களிலும் தொடர்ந்து உங்கள் எழுத்தை படித்து வருகிறேன்.... ரெம்ப துணிச்சலாய்..... வெளிப்படையாய் எழுதுறீங்க பாஸ் :)

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்!
சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க இன்னும் சொல்லப்போனா ஆண்களை விட பெண்களுக்குத்தான் நிர்வாக திறமை கூட...!!

Yaathoramani.blogspot.com said...

அம்பலத்தாரே எப்போது உங்கள் எழுத்தில்
சுவாரஸ்யம் இருக்கும் அதைவிட உண்மை இருக்கும்
நானும் கல்கண்டு அம்புலிமாமாவில் துவங்கி
கணையாழி கசட தபற வந்தவன்தான்
அதனாலேயே என்னவோ படிமம் குறியீடு
மண்ணாங்கட்டி மட்டை மயக்கம் எனக்கில்லை
எளிய விஷயத்தை உயரிய நடையில் சொல்வது ஒரு வழியெனில்
கடினமான விஷயத்தைஎளியவகையில் சொல்வதும் ஒரு வழி
இவைகளுக்குள் உயர்ந்தது தாழ்ந்தது பிஸ்கோத்தெல்லாம் ஏதும் இல்லை
சிந்தனைய தூண்டிப் போகும் பதிவுக்கு நன்றி
குறிப்பாக சக்தியாய் இருக்கிற செல்லம்மாவுக்கு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையை மறைக்காமல் கூறிய உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்!
பகிர்விற்கு நன்றி Sir!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

srikrshnan said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

பராசக்தி said...

ஒவ்வொரு ஆம்பிளையும் செல்லம்மா மாதிரி பெண்ணாட்டி வேணும் என்ட மாதிரி ஏங்க வைச்சிட்டீகளே அம்பலத்தார்...........நம்ம வீட்டில கலகம் உண்டாக்கின பெருமை உங்களைச் சேரட்டும். புது பட்டம் (நாரதர் கலகம் ) கொடுக்கலாமா?

பராசக்தி said...

மன்னிக்கவும், சிறு எழுத்துப்பிழை "பெண்டாட்டி" என வாசிக்கவும் . நன்றி

ஹேமா said...

அம்பலத்தார்...இப்பிடி உங்களைப்போல பெண்களை மதிக்கிற ஒரு நல்லவர் கிடைக்க அவவும் குடுத்து வச்சிருக்கவேணும் !

punkayooran said...

பல வருடங்களின் முன்பு, துணைவன் படம் பார்த்தபோது, கிருபானந்த வாரியாரின் அறிவுரை, நினைவுக்கு வருகின்றது!
' மகனே, உன் வழிக்கு அவள் வராவிட்டால், நீ அவள் வழிக்குப் போ!!!

அம்பலத்தார் said...

Blogger Cpede News said...
//தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..//

தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி நண்பரே

அம்பலத்தார் said...

Blogger மதுமதி said...
//கிளுகிளுப்பு கதைகள்தான் தமிழின் மீது ஒரு பற்றுதலை உண்டுபண்ணியது என்பதை மறைக்காமால் ஒத்துக்கொண்டதும்....//
எனது அனுபவம் இன்னொருவருக்கு பிரயோசனப்படும்போது செய்ததை சொல்வதில் வெட்கம் எதற்கு. உங்கள் தொடர்ந்த உற்சாகம்தரும் பின்னூட்டங்களிற்கு நன்றி கவிஞரே!

அம்பலத்தார் said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, உங்க பாராடுகளிற்கு நன்றியம்மா

kowsy said...

ஆண்டவனுக்கும் நண்பனுக்கும் தாய்க்கும் தந்தைக்கும் மட்டுமே ஆக்கம் எழுதும் உலகில் மனைவிக்கு இடம் கொடுத்து இதய வரிகள் எழுதிய உங்களுக்கு முதலில் பாராட்டுக்கள் அள்ளி வழங்க வேண்டும். என்ன எல்லோருக்கும் தெரியும் தாம் மதிக்கப் படுவதற்கு மனைவி மார்களே காரணம் என்பது. ஆனாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் தன்மானப் பிரச்சினை. ஆனால் உள்ளதை உள்ளவாறு கூறியிருக்கின்றீர்கள். உங்கள் மனைவியின் கருத்துக்களும் உங்கள் ஆக்கங்களுக்கு வலுச் சேர்க்கின்றன என்று நம்புகின்றேன் . அதனால் நான் தரும் வரிகள் உங்கள் மனைவியையும் போய்ச் சேரட்டும்.. அதைவிட புலம்பெயர் பெற்றோர் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள் . நூற்றுக்கு நூறு உண்மைதான் . அங்கு காணாததை இங்கு கண்டதுகளுக்கு இப்படித்தான் இருக்கும் . தம்மால் முடியாததை தமது பிள்ளைகளில் கொண்டு அடைகின்றார்கள். எவ்வளவைத்தான் அடையும் மூளை ஒரு நாள் வெடிக்காத என்ன . புரிந்து கொள்ளுதுகள் இல்லையே .......என்னதான் செய்ய முடியும் எழுதித் தள்ளுவோம்

shanmugavel said...

ஆரம்பத்திலேயே சங்க இலக்கியம் காட்டினால் ஓடிப்போவார்கள்.உங்கள் அதிர்ஷ்டம் நல்ல எழுத்துக்கள் அறிமுகம் கிடைத்துவிட்டது.நல்ல பகிர்வு.

ம.தி.சுதா said...

////செல்லம்மாவைச் சைட் (காதலிக்க) அடிக்கத் தொடங்கின காலத்தில நான் பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சமே!////

ஹ..ஹ.. பாரதியர் பட்ட பாட்டை விடவா இவங்க பட்டிருப்பார்கள்...

இந்த வயசிலயே இப்படி எழுதுறிங்கண்ணா அப்ப எப்படி எழுதியிரப்பீர்கள்....

அது தான் என்தள சைட் பாரில் தங்களுக்கு நல்ல பட்டம் ஒன்று கொடுத்திருக்கேனே..

Unknown said...

மண்வாசனை வீசுகிறது எழுத்தில்....

அம்பலத்தார் said...

எஸ்.பி.ஜெ.கேதரன் said...
//....சரி.. செல்லம்மா அக்காவையும் ப்ளாக் எழுத சொல்லுங்கோ.//
செல்லம்மாவிடம் உங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கிறேன்.

எஸ் சக்திவேல் said...

வீட்டில் மதுரை ஆட்சிதான் என்பதை நீளமாக்கிச் சொல்லியுள்ளீர்கள் :-)

அம்பலத்தார் said...

Blogger தனிமரம் said.
//நீங்கள் ஏன் ஈழத்து இலக்கியவாதிகளுக்கு சந்தைப்படுத்தல் திறமையின்னையும், இலக்கிய வழுக்களையும் சாடும் பண்டித மணிகளுக்கு புரியும் வண்ணம் நம்மவர் இலக்கியச் சுவையை ஒரு தொடராக தரமுயலலாமே ஐயா!//
உங்கள் கோரிக்கை புரிகிறது. நிச்சயமாக முயற்சிக்கிறேன்.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//வணக்கம் அம்பலத்தார் நலமா???
இல்லத்தரசிகளின் நிர்வாகத்திறமையை வெகுவாக விமர்ச்சித்து அதன் ஊடே வாசிப்புப் பாதை எவ்வாறு இலக்கியம் மீது திசை திருப்பப் படும் என்பதைச் சொல்லிச் செல்லும் அருமையான பதிவு!//
உண்மையிலேயே எனக்கு இந்தத்திரட்டிகளின் வோட்டுக்கள் மொய்யிற்கு மொய் என்பதைத் தாண்டி உங்களைப்போன்ற தீவிர வாசகர்களின் பின்னூட்டங்கள்தான் உற்சாகம் தந்து எழுதும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நன்றி தனிமரம் நேசன்

அம்பலத்தார் said...

Blogger சென்னை பித்தன் said...
//அருமையாச் சொன்னீங்க!//
சென்னைப்பித்தனே உங்கள் பாராட்டுகளிற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

Blogger தனிமரம் said...
//எஸ்.பொ வின் ஆண்மை என்ற நாவலின் உலகதரத்தையும் அன்றே அவர் எழுதிய பாலியல் நூல் என்று முகம் சுழுத்தவர்களின் கபடத்தனமும் அதை ஒரு வட்டத்துக்குள் வைத்து மற்றவிடயங்களை அவதானிக்க முடியாத நடுநிலமையாளர்களின் முகத்திரையையும் இன்று இளையதலைமுறையினருக்கு அவர் பற்றிய ஞாபகக் குறிப்புக்களைத் தரலாமே ஐயா!//
உங்களது கருத்தை வரவேற்கிறேன் நேசன் வெறுமனே பொழுதுபோக்கிற்கு எழுதாமல் எமது அடுத்த சந்ததியினரிற்கு ஒருசில நல்லவிடயங்களையாவது கொடுத்துச் செல்லவேண்டும் என்ற ஆதங்கம்புரிகிறது. கட்டாயமாக முயற்சி செய்கிறேன்

அம்பலத்தார் said...

துஷ்யந்தன் said...
//அம்பலத்தாரும் அப்போ ஒரு மன்மதன்தான் போல.... ஹா ஹா//
ஹீ ஹீ என்ன இப்படிச் சொல்லிப்போட்டியள் நான் இப்பவும் மன்மதனல்லோ!

அம்பலத்தார் said...

Blogger துஷ்யந்தன் said...
//..... கருத்து போட நேரம் இடம் கொடுக்கா நேரங்களிலும் தொடர்ந்து உங்கள் எழுத்தை படித்து வருகிறேன்.... ரெம்ப துணிச்சலாய்..... வெளிப்படையாய் எழுதுறீங்க பாஸ் :)//
ரொம்ப Thanks துஷ்யந்தா! நாங்கள் எல்லாவிடயங்களையும் மூடி மறைத்து பொத்திவைப்பதாலேயே பல தவறுகளிலிருந்தும் சமுதாயச் சீர்கேடுகளில் இருந்தும் வெளிவரமுடியாமல் இருக்கிறோம். பெரிதாகப் பீத்திக்கொள்வதற்கு என்ன பிறக்கும்போதே Image, Status எல்லாவற்றையும் கொண்டா வந்தோம். வாழ்வின் இறுதிநாளில் நாம் இறக்கும்வரை கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

அம்பலத்தார் said...

Blogger காட்டான் said...
//.... இன்னும் சொல்லப்போனா ஆண்களை விட பெண்களுக்குத்தான் நிர்வாக திறமை கூட...!!//
மிகவும் சரியாக சொன்னீர்கள் காட்டான். ஆனால் நம்மில் எத்தனை ஆண்களால் இதை ஒத்துக்கொள்ளமுடிகிறது. திருந்துவதற்கு நிறைய இருக்கிறது.

அம்பலத்தார் said...

Blogger Ramani said...
//அம்பலத்தாரே எப்போது உங்கள் எழுத்தில்
சுவாரஸ்யம் இருக்கும் அதைவிட உண்மை இருக்கும்
நானும் கல்கண்டு அம்புலிமாமாவில் துவங்கி
கணையாழி கசட தபற வந்தவன்தான் அதனாலேயே என்னவோ படிமம் குறியீடு மண்ணாங்கட்டி மட்டை மயக்கம் எனக்கில்லை.....//
தன்னைத்தானே சீர்தூக்கிப்பார்த்து சரி, தப்பு எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ளும் உங்க மனதிற்குத் தலைவணங்குகிறேன்.

//குறிப்பாக சக்தியாய் இருக்கிற செல்லம்மாவுக்கு தொடர வாழ்த்துக்கள்//
செல்லமாவை வாழ்த்தியதற்கு அவரதுசார்பில் நன்றிகள் நண்பரே

அம்பலத்தார் said...

திண்டுக்கல் தனபாலன் said...
//உண்மையை மறைக்காமல் கூறிய உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்!...//
பாராட்டிற்கு நன்றி தனபால், உண்மையை சொல்வதற்கு நான் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை. முகமூடிகள் போட்டுக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யவிரும்பவில்லை. எனது அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தால் அல்லது உந்துகோலாக அமைந்தால் மகிழ்ச்சி..

அம்பலத்தார் said...

mathuraikaran said...
//தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..//

உங்கள் வருகைக்கும் ஊக்கம்தரும் வார்த்தைகளிற்கும் நன்றி நண்பரே.

அம்பலத்தார் said...

பராசக்தி said...
//ஒவ்வொரு ஆம்பிளையும் செல்லம்மா மாதிரி பெண்ணாட்டி வேணும் என்ட மாதிரி ஏங்க வைச்சிட்டீகளே அம்பலத்தார்...........நம்ம வீட்டில கலகம் உண்டாக்கின பெருமை உங்களைச் சேரட்டும். புது பட்டம் (நாரதர் கலகம் ) கொடுக்கலாமா?//

கவலை வேண்டாம் பராசக்தி நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும்

அம்பலத்தார் said...

Blogger ஹேமா said...
//அம்பலத்தார்...இப்பிடி உங்களைப்போல பெண்களை மதிக்கிற ஒரு நல்லவர் கிடைக்க அவவும் குடுத்து வச்சிருக்கவேணும் !//

ஹா ஹா நீங்கள் இப்படிச் சொல்லினியள் தப்பிவிட்டேன் ஹேமா, ஆனால் வேறுசிலபேர் பாவம் செல்லம்மா கிறுக்கன் அம்பலத்தானோட எப்படித்தான் குடும்பம்நடத்திறாவோ என்றும் சொல்லுறாங்கள்.