நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

வேர்களைத் தேடி............2



புறநானூறும் வன்னிக்களமும்

புறநானூறு என்று சொன்னால் எம்மில் எத்தனை பேருக்கு அதன் விபரம் தெரியுமோ என்னவோ? ஆனால்...

சில நாட்களின் முன்பு நடந்தபோரில் தந்தையை இழந்த பெண், முதல் நாள் நடந்த போரில் தன் கணவனை இழந்தும் கூட கலங்காது,

அடுத்த நாளும் போர்ப்பறை கேட்டதும் தன் வீட்டிலிருந்து இன்றும் போர்முனைக்கு ஒருவரை அனுப்ப வேண்டும் என்று எண்ணி பச்சிளம் பாலகனான தன் ஒரே மகன் கையில் வீர வாளைக் கொடுத்து "வென்று வா மகனே!" என்று போருக்கு அனுப்பிய வீரம் சொல்லும் புறநானூற்றுக் கதை நன்கு தெரியும்.

புறநானூறானது நாமெல்லாம் எண்ணுவதுபோல வீரத்தை மட்டுமன்றி மன்னர் தம் ஈகைச் சிறப்பையும்இ தமிழர் நம் வாழ்வியலையும், வாழ்த்தியலையும், புலவர்தம் கையறு நிலையையும் எனப் பல பரிணாமங்களையும் தொட்டு நிற்கும் நானூறு பாடல்களின் கதம்பத் தொகுப்பாகும். இந்தப்பாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் ஒளவையார், கபிலர், கோவூர்கிழார், பெருந்தலைச்சாத்தனார் போன்ற நாம் சற்றே கேள்விப்பட்ட புலவர்களினாலும்
சற்றும் அறியப்படாத வேறும் பலநூறு புலவர்களினாலும் பாடப்பட்டுள்ளன. அதியமான் முதல் கோப்பெருஞ்சோளன் சேரன் இரும்பொறை.............. எனப் புகழ்ந்து பாடப்பட்ட மன்னரின் பெயர்ப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இது தவிரப் பல புறநானூற்றுப் பாடல்களைப் பாடியவர்கள் பற்றிய விபரங்கள் அறியப்படாமலும் பல பாடல்களின் வரிகள் பல கிடைக்கப் பெறாமலும் உள்ளன.

ஒளவ்வை பாட்டி நெடுநாள் வாழ மன்னன் அதியமான் நெடுமான் நெல்லிக்கனி கொடுத்த கதைதான் எமக்கெல்லாம் பரிச்சயமான கதை
ஆனால் ஒளவ்வைக்கு அதியமான் கள்ளுண்ண கொடுத்ததுவும் அதை உண்ட மயக்கத்தில் பாடல் ஆக்க அதியமான் அந்தப் பாடல்களை இரசித்ததாக ஒளவ்வையே கவி வடித்திருப்பதும் நமக்கெல்லாம் புதிய சேதி அல்லவோ?

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே..............

என்று தொடங்கும் புறநானூற்று பாடல் வரிகளைச் சற்றே பாருங்கள்.

சிறிது மதுவைப் பெற்றால் அதை எங்களுக்கே தருவான்.
பெரிய அளவில் மது கிடைத்தாலோ
அதை நாங்கள் அருந்திப் பாட எஞ்சியதை உண்பான் அதியமான் எனப் பொருள் தரும் இப் பாடல் வரிகள்.
மது அருந்தும் பண்பால் ஒளவ்வையார் நாமெல்லாம் எண்ணுவது போலப் பெண் புலவரல்ல ஆண் கவியோ என்ற ஐயத்தைத் தருகிறது.
அன்றி நாம் அறிந்தது போல ஒளவ்வை பெண் கவியே ஆயின் அன்றைய நாளில் பெண்கள் மது அருந்தும் கலாச்சாரம் எமக்கு இருந்ததோ என்ற அடுத்த கேள்வியைத் தோற்றுவிக்கிறதே!
இந்த ஊகமும் தவறாயின் ஒளவ்வை என்ற பெயரில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு புலவர்கள் வாழ்ந்தார்கநுோ என்ற மற்றுமொரு கேள்வி எழுகிறதே.

இவ்வாறு சர்ச்சைகள் பலவற்றையும் அன்றைய நம் கலாச்சார விழுமியங்களையும் கூறி நிற்கும் புறநானூற்றின் மற்றொரு பாடல்.
எந்தப் புலவாரால் எந்தச் சந்தர்ப்பத்தில் பாடப்பட்டது என்பது கூட அறியப்படாமலும் பாடலின் சில வரிகள் கிடை க்கப்பெறாமலும் உள்ள இப்பாடலின் வரிகள் கூறும் சேதியைச் சற்றே நோக்கினால் ..........

பகைவர்களால் வீசப்பட்ட வேலொன்று நெஞ்சிலே பாயவும்
அவன் இவ்வுலகில் பிறந்த கடனை தன் நாட்டிற்காகவே வாழ்ந்து தீர்த்துக் கொண்டான்.
அவன் எங்கே உள்ளான் என்று கேட்டால்......................... எதிரிகள் பலரகும் ஒன்று சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவனோ அவர்களை வீரமுடன் உக்கிரமாய் எதிர்த்து விரட்டிச் சென்றான். அவன் மார்பில் வில்லும் வேலும் பாய்ந்தன. அவன் உடல் அழிய ஆரம்பித்துவிட்டது. அவன் கேடயம் சிதைவுபட்டுச் சிதறிக் கிடைப்பதைக் கண்டோம். அவன் புல ர்கள் பாடுகின்ற சிறப்பைப் பெற்றுவிட்டான். எல்லாத் திசைகளிலும் தன் புகழ் பரவச் செய்துவிட்டான். அவன் அமரனாகிவிட்டான். என்ற பொருள்படும் அப்பாடல்

எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
யாண்டுள னோவென வினவுதி ஆயின்
.......................(இடை வரிகள்ஸ்ரீ2 0கிடைக்கப் பெறவில்லை.)
வருபடை தாங்கிய கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
.......................(இடை வரிகள் கிடைக்கப் பெறவில்லை.)
அலகை போகிச் சிதைந்துவேறு ஆகிய
பலகை அல்லது களத்துஒழி யாதே
சேண்விள ்கு நல்லிசை நிறீஇ
நாநவில் புலவர்வாய் உளானே.

ஈழத்தின் எல்லைகளிலுள்ள ஏதோ ஒரு பொருது களத்தில் எதிரிகளுடன் கடுமையாகச் சமர் செய்து பல எதிரிகள் கதை முடித்து முன்னேறுகிறான் புலி வீரன் ஒருவன். எதிர்பாராத விதமாக கூட்டமாக சூழ்ந்து கொண்ட எதிரிகள் செலுத்திய த8 டீட்டாக்களை மார்பில் தாங்கி வீரமரணமடையும் முகம் தெரியா அப்போராளி மாவீரனான சேதி எம்மனதை வாட்டுவதில்லையா? அவன் வீரத்தை நம் தமிழ்க் கவிகள் புகழ்ந்து பாடுவதும்இ மண்ணுக்கு வித்தான அந்த மாவீரனை மாவிரர் துயிலகத்தில் மட்டுமன்றி நம் மனதிலும் வைத்துப் பூசிக்க1ம் இன்றைய எம் பண்பின் ஆணி வேராக இப்பாடல் தென்படவில்லையா என்ன?

என்ன நேயர்களே வேர்களைத் தேடி அகழ்ந்ததில் உடலெங்கும் சேற்றையும் மண்ணையும் பூசிக்கொண்ட சலிப்பு உண்டாகிறதா? அல்லது தேடுதல் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை என்பது சரிதானா? அப்பட யாயின் தொடர்ந்தும் வேர்களைத் தேடுவோம். எங்கள் சமுதாய விழுமியங்களின் வேர்கள் மட்டுமன்றி புதையல்களும் கிடைக்கலாம்.

No comments: