நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Saturday

ஆகா கிடைச்சிடிச்சு.





களுகங்கையில் குளிக்கிற சுதுநோனா நயினாதீவு நாகவிகாரை செல்ல சுதந்திரம்

காலி பஸ்நிலையத்தில் பிச்சை எடுக்கும் புஞ்சிமண்டா யாழ்ப்பாண பஸ்நிலையத்திலும் பிச்சை எடுக்க சுந்திரம்.

கொழும்பு காமினி தெமிழ படு காண்ட யாப்பண யண்ட (காமினிக்கு தமிழ்
சரக்கடிக்க யாழ். செல்ல) சுதந்திரம்

மட்டக்களப்பு மரிக்கார் மருதனாமடச் சந்தியிலை கடை வைக்க சுதந்திரம்



அனுராதபுர அப்புகாமி வடபகுதி தெருவெல்லாம் சுற்றி "மகே படுனங் ஒந்த படு, ஒறிஜனல் படு" ( என்ரை பொருள் நல்ல பொருள், ஒறிஜனல் பொருள்)
என்று சொல்லி கண்டகண்டபொருளையெல்லாம் விற்க சுதந்திரம்.

வங்கிகளெல்லாம் வடபகுதியில் தெருவுக்கு தெரு கிளை பரப்பி இஸ்டத்துக்கு கடனட்டைகளை அள்ளிக்கொடுத்து நம்மவரையெல்லாம் கடனாளியாக்க சுதந்திரம்.

ராஜபசவிற்கும் யாழ் சென்று தமிழில் பேச சுதந்திரம்.

எல்லாருக்கும் சுதந்திரம் கிடைச்சிட்டுதாம்.



ஈழத்தமிழா உனக்கும் கிடைச்சிருக்கு சுதந்திரம்.

இதையெல்லாம் கைகட்டி,
வாய் பொத்தி வேடிக்கைபார்க்கும் சுதந்திரம் கிடைத்திருக்கு.
விரும்பினால் நீயும் ஜயவேவா கோசம் போடலாம்.

நேசமுடன் அம்பலத்தார்

29 comments:

பி.அமல்ராஜ் said...

சரியாகச் சொன்னீர்கள் அம்பலத்தார். இவற்றையெல்லாம் பார்க்க, கேள்வி கேக்காம கேட்க சுதந்திரம் இருக்கே தவிர வால் ஆட்டப்படாது. அறுத்துடுவாயிங்க. கேட்டா சுதந்திரத்திற்கு பங்கம் விளைவித்தோம் என கேச வேற திருப்பி விட்டிடுவானுங்க.. வேணாம் சாமி.. இதுகள கதைக்கையாவது சுதந்திரம் தந்திருக்காங்களே(???). தந்ததை வச்சுக்கிட்டு பொத்திக்கிட்டு இருக்கணும். (இதுதான் சிங்களத்தில சுதந்திரத்திற்கு சரியான மொழி பெயர்ப்பு..???) அதை விடுத்து அதிகம் ஆசைப்படப் படாது. பிகாஸ் வீ ஆர் தமிழ்ஸ்.

காட்டான் said...

ம் எங்களுக்கும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்க சுதந்திரம் உண்டுதான்... ;-(

ஆமினா said...

:-(

Riyas said...

என்னது சுதந்திரம் கிடைச்சிடுச்சா..?

Admin said...

நீங்கள் குறிப்பிட்ட சுதந்திரங்கள்தான் உண்டு போல நினைக்கவே வேதனையாக இருக்கிறது..

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
முதலில் இக் கவிக்கு ஓர் சல்யூட்,

ஈழத் தமிழனின் யதார்த்த நிலமையினை உலகினுக்கு உணர்த்துகின்ற கவிதையினைக் கொடுத்திருக்கிறீங்க.

நிரூபன் said...

ராஜபசவிற்கும் யாழ் சென்று தமிழில் பேச சுதந்திரம்.

எல்லாருக்கும் சுதந்திரம் கிடைச்சிட்டுதாம்.
//

ஹே...ஹே..

தமிழ்க் கொலை செய்யவும் அவருக்கு சுதந்திரம் கிடைச்சிருக்கில்லே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அம்பலத்தார் said...

ஆமா அமல்ராஜ் தற்காலிகமாக வீ ஆர் தோத்துப்போன தமிழ்ஸ்

அம்பலத்தார் said...

ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வராமலேபோகும்.

அம்பலத்தார் said...

அட ஆமா ரொம்ப தாமாஸ்பண்ணிட்டனோ

அம்பலத்தார் said...

இதுதான் இன்றைய இலங்கையின் நிஜவடிவம்.

அம்பலத்தார் said...

என்னது இதுக்கு பெயர் கவிதையோ அப்படியென்றால் கவிதைக்குப் பெயர் என்ன? நிரூ கிழவனை வச்சு ரொம்ப காமடிபண்ணாதையுங்கோ.

நிரூபன் said...

ஐயா உங்களை வைச்சு காமெடி பண்ணலை
வசனங்கள் எல்லாம் கவி நடையில வந்து விழுந்திருக்கு
சில வேளை நீங்கள் அவரசத்தில
கவிதைக்குரியது மாதிரி வசனப் பகுப்பு செய்யலையோ என்று எண்ணினேன்.

அம்பலத்தார் said...

ஹீ ஹீ இப்படியெல்லாம் கிண்டல்பண்ணக்கூடாது நிரூ, அவர் தமிழரையும் தமிழையும் காக்க என்றே அவதரித்த ரட்சகர்.

அம்பலத்தார் said...

நிரூ உங்களைக் கலாய்க்கிறதுக்குத்தான் என்னை வச்சு தமாஸ்பண்ணாதையுங்கோ என்று அப்படி பதில் எழுதினனான் சீரியசாக சொல்லவில்லை.

அம்பலத்தார் said...

கவலைப்படாதையுங்கோ சகோதரி உலகில் எதுவும் நிரந்தரமில்லை.
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வப்போமே.

தமிழ்த்தோட்டம் said...

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம் said...

பாராட்டுக்கள்

ஹேமா said...

ஐயோ...ஐயோ நல்ல கூத்துத்தான் இது.உந்தச் சுதந்திர தினத்தை மறந்தே எவ்வள்வோ காலம்.உங்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கே அம்பலத்தார் !

போனகிழமை ஒரு செய்தி வாசிச்சன்.18 வயதுப் பெண் போரளி ஒருவரும் 22 வயது சிங்கள் இராவப் பெடியணும் கல்யாணம் செய்துகொண்டிச்சினமாம்.சிவப்புச் சால்வைகளின் வாழ்த்துகள் வேறயாம்.என்னவெண்டா நாடு ஒற்றுமைப்படுதாம்.உந்தக் கல்யாணம் எத்தனை காலம்
என்கிறத்திலதானே ஒற்றுமை தெரியும் !

பராசக்தி said...

"மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ!" -- என்கிற பாரதியார் கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

அம்பலத்தார் said...

Thanks.
அடேங்கப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறிங்க. பெயரிலையே "வந்து பார்த்து செல்லுங்க" என்று எழுதிட்டா அப்புறம் யாரும் விளம்பரத்திற்காக பின்னூட்டம் போடுறார் என்று சொல்லமுடியாதுதானே. நல்லா பிழைக்கத்தெரிஞ்ச ஆளுதான்.

அம்பலத்தார் said...

நன்றி நண்பா

எஸ் சக்திவேல் said...

நெத்தியடி!

kowsy said...

நித்தம் நித்தம் செத்துப் பிழைத்த மக்களுக்கு இப்போதைக்கு இது மட்டும் போதும். மற்றதைப் பிறகு பார்ப்போம். அழகாக தந்திருக்கின்றீர்கள்,

அம்பலத்தார் said...

ஹா ஹா, நாங்க எல்லாம் சீக்கிரமே எதையும் மறந்திடுவம். நடந்ததை நடக்கிறதை மறக்கக்கூடாது என்றுதானே பதிவிட்டனான்.

அம்பலத்தார் said...

சில சிறு சிறு இன்பங்களை தேடி சுதந்திரத்தை அடவு வைப்பதும், கண்களை விற்று சித்திரம் வாங்குவதையும்தான் பலரும் செய்திட்டிருக்கிறாங்கள். பாரதியின் கவி வரிகளை நினைவூட்டியதற்கு நன்றிகள் பரா.
உங்க பெயரிலையே சக்தியை வச்சிட்டு ஊக்குவிக்கும் கருத்துகளை சொல்வதுடன் நிற்காமல் உங்க எண்ணங்களையும் ஆக்கபூர்வமான பதிவுகளாக எழுதி உங்க சக்தியையும் சமுதாய மேம்பாட்டிற்கு கொஞ்சம் அற்பணிக்கலாமே. பல கை சேர்ந்தால்தான் பலத்த ஓசைவரும்

அம்பலத்தார் said...

நன்றி சக்திவேல்

அம்பலத்தார் said...

கருத்துப்பகிர்விற்கு நன்றி சந்திரகௌரி

வேகநரி said...

//ஹேமா said...
போனகிழமை ஒரு செய்தி வாசிச்சன்.18 வயதுப் பெண் போரளி ஒருவரும் 22 வயது சிங்கள் இராவப் பெடியணும் கல்யாணம் செய்துகொண்டிச்சினமாம்.சிவப்புச் சால்வைகளின் வாழ்த்துகள் வேறயாம்.என்னவெண்டா நாடு ஒற்றுமைப்படுதாம்.உந்தக் கல்யாணம் எத்தனை காலம்
என்கிறத்திலதானே ஒற்றுமை தெரியும் !//

ஹேமா நீங்க ஒரு கிணற்று தவளையாகவே இருந்திருக்கிங்கள்.
புலி நடேசனது மனைவியும் ஒரு சிங்கள பெண்.போரளி என்று எழுதி பெருமை சேர்க்கும் உங்க தொடர்புடைய சொல் நடைமுறையில் எப்படிபட்டது? பெண் போரளி ஒருவரை திருமணம் செய்ய உங்க தம்பியோ அண்ணணோ ஒருபோதும் தயாரில்லை. காரணம் புலி போராளியை மணம் முடிப்பது வெட்கம் அவமானமா செயல். ஆனால் இலங்கையை சேர்ந்த இன்னொரு இனத்தவன் அந்த பெண்ணுக்கு வாழ்வழித்தால் உங்களுக்கு கேவலம் அவமானம்.