நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

வெற்றி நாயகன்





எங்கட கூத்தாடி குரூப் தயாரிச்ச  நாடகங்களிலையே எனக்கு பிடிச்ச நாடகங்களிலை ஒன்று.
என்ரை செல்லம் இந்த நாடகத்துக்காக என்னையும் பாலா அண்ணையையும் பெண்டுநிமித்தினதுபோல வாழ்க்கையிலையே வேர எதுக்கும் செய்யேல்லை.

 இதிலை என்னோட கூட நடிச்சது எங்கட குடும்ப நண்பர் பாலா அண்ணா. ஜேர்மனிக்கு வந்ததில எனக்கு கிடைச்ச புரிந்துணர்வுடன் கூடிய இனிய நண்பர் அவர். இரண்டுபேருக்குமே நாடகம் , தமிழ், கதை எழுதுவது, அரசியல் என ஒத்த ஈடுபாடுகள் இருந்ததாலை எங்கள் நட்பு  நிலைச்சிருக்குது. ஆனாலும் பல விசயங்களிலை முட்டிமோதி முரண்பட்டு நிற்பம். பாக்கிறவை சரி கதை கந்தல் இவையட நட்பு அவ்வளவுதான்  என்று நினைப்பினம். ஆனால் ஒருசில நாட்களுக்குள்ளையே ஜாலியா உக்கார்ந்து அரட்டையடிச்சுக்கொண்டிருப்பம்.
அவர் என்ரை மாமியார் எங்களுடன் இருந்தகாலத்தில அவவை தன்ரை Girl friend என்று கலாய்ச்சுக்கொண்டிருந்தவர்.
பிறகு என்ரை செல்லத்தை தன்ரை Girl friend என்று சொல்லினவர்.
இப்ப எங்கட மகளை தன்ரை Girl friend என்று    சொல்லுறார் .
ஒரே குடும்பத்தின்ரை மூன்று தலைமுறையை Girl friend என்று சொன்னது உலகத்திலை எங்கட பால அண்ணா ஒருவராகத்தான் இருக்கும். அதுக்காக அவரை கின்னஸ் சாதனைக்கு சிபார்சு செய்யலாம்.

நான் நினைக்கிறன் எங்கட மகள் கல்யாணம் செய்து அவவுக்கு ஒரு மகள் பிறந்தால், என்ரை அந்த பேத்தியையும் தன்ரை Girl friend என்றுசொல்லுவார். அதற்காகவே அவர் இன்னும் பல ஆண்டுகள் லமுடன் வாழ வேண்டும்.
 பாலா அண்ணா நீங்க என்ரை நண்பரில்லை………
 அதுக்கும்மேல.

5 comments:

நிலாமதி said...

பகிடி நல்லாயிருக்கு கட்டாயம் பரிசு உங்களுக்கு தான்.

Anonymous said...

AMPALATHARODA அத்திவாரம் பலம்தான் பேசாம ஒரு நகரும் நாடகக் கொட்டகை போட்டுடுங்களேன்

அம்பலத்தார் said...

நிலாமதி said...
//பகிடி நல்லாயிருக்கு கட்டாயம் பரிசு உங்களுக்கு தான்.//
OK. Thanks எப்ப பரிசை அனுப்பிவைக்கிறியள்.

அம்பலத்தார் said...

Anonymous said...
//AMPALATHARODA அத்திவாரம் பலம்தான் பேசாம ஒரு நகரும் நாடகக் கொட்டகை போட்டுடுங்களேன்//
ஓம்! அத்திவாரம் பலம்தான் ஆனால் மேலே கூரைதான் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கு அதுதான் யோசிக்கவேண்டியிருக்கு.

பராசக்தி said...

வெற்றி நாயகன் கல்லுளி மங்கன் என்று பெயரெடுத்தாலும், கடைசியில் எதிராளியை லூசாக்கி தன் பலத்தை நிலை நாட்டியுள்ளார். கல்லுளி மங்கன் என்றால் கல்லுப்போல ஒரே இடத்தில் இருக்கும் நபர் என்று மனதில் பதிந்த விடயத்தை பொய்யாக்கி விட்டியள் அம்பலத்தார். நீங்கதான் சிட்டுக்குருவியைபோல மேடையில் ஒரு இடத்திலேனும் நிக்காமல் stand-up comedy செய்து அசர வைத்ததற்கு, இதோ உங்களுக்கு இந்த பின்னூட்டம் பரிசாக!