நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

வேர்களைத் தேடி...1


இலகு தமிழில் இலக்கிய இனிமை

கலிங்கத்துப் பரணியும் வன்னியில் எம் போரியல் வாழ்வும்

நம் பழந்தமிழ் இலக்கியங்களாம் கலிங்கத்துப்பரணி, நந்திக் கலம்பகம், புறநானூறுஇ குறுந்தொகை .. .. .. இவற்றில் காணப்படும் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத தேனாய் இனிக்கிறதோ இல்லையோ பலநூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இவ்வினிய கவிவரிகள் இன்றும் எவ்வாறு எம் வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகின்றன என்பதுவும் வியப்பைத் தருகின்றது.


இதில் நான் படித்தது பொருளுணர்ந்து வியந்து நின்றது சொற்பமே ஆயினும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்ததில் எழுதுவதே இந்த வேர்களைத் தேடி.

பரணி உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்தபெயரென நினைக்கிறேன். இப்படிச் சொன்னவுடன் இது எங்களது களத்தில் எழுதுகிற கரவை பரணி பற்றிய விசயமாக்கும் என எண்ணவேண்டாம். நான் கூற வருவது கலிங்கத்துப் பரணி எனும் பழந்தமிழ் நூல் பற்றிய சிறுவிளக்கமாகும்.
போர்க்களத்தில் நின்று களமாடி ஆயிரம் யானைகளுக்குமேல் கொன்று குவித்து வெற்றிபெறும் மாவீரனைப் புகழ்ந்து பாடுவதே பரணியாகும். தமிழிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களில் இதுவும் ஒன்று. இன்று களத்தில் நின்று போராட யா ைப்படையும்இ குதிரைப்படையும்இ தேர்ப்படையும்இ நாகாஸ்திரங்களும் இல்லாவிட்டாலும்கூடஇ தேர்களை ஒத்த டாங்கிப்படைகளும்இ இலக்கைத் தேடிச்சென்று அழிக்கும் நாகாஸ்திரங்களை நம் மனக்கண் முன் கொண்டு நிறுத்தும் ஏவுகணைகளும் நிறைந்த இன்றைய பொருது களத்தில் பல ஆயிரம் யு நுகை ஒழித்தும்இ டாங்கிகள் பல சிதறடித்தும்இ எரிகுண்டுகள் பல உமிழ்ந்த இயந்திரக் கழுகுகள் சிறகு ஒடித்து வானம் நம் வசப்படுத்தியும் வெற்றிமேல் வெற்றிகள் படைத்து இமயமாய் உயர்ந்து நிற்கும் நம் தலைவன். அவன் விழியசைப்பில் எதிரியில் இடியாய் இறங்கக் காத்திருக்க ம் பல ஆயிரம் புலிவீரர். நவீன பரணிகள் பல பாட வேண்டிய இவர்தம் வீரம். இன்றைய இந்த யதார்த்தத்தில் கலிங்கத்துப் பரணியை நோக்கி ஒரு சிறு கடைக்கண் பார்வையேனும் செலுத்துவது சாலச் சிறந்ததாகும்.

களம்பல கண்டு வெற்றிகள் குவித்த நந்திவர்மனுக்கோர் தெள்ளாற்றுப் போர்போல...

வீரத்தாலும் விவேகத்தாலும் போர்பல வென்று பரந்த தன் சாம்ராஜ்ஜியமெங்கும் புலிக்கொடி பறக்கவிட்ட முதற்குலோத்துங்கனுக்கு ஒரு கலிங்கத்துப் போர் போல....

நூற்றாண்டுகளாய் தமிழனுக்கோர் தலைகுனிவாய் அந்நியன் வசப்பட்டிருந்த ஆனையிறவுக்கான போரும் காலத்தடீ நுல் அழியாது என்றும் நம் தலைவன் வீரம் சொல்லும். நந்திக்கலம்பகமும்இ கலிங்கத்துப் பரணியும் போல நம் கவி புதுவை இரத்தினதுரையும்இ உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தனும்இ அம்புலியும் தரும் கவிகளும் ஈழத்துப் பரணியாய் இப்புவி உள்ளவரை நிலைத்திருக்கும் நிலைத்திருக்க டீ 5ேண்டும் என்பதே நம் கனவும்.

இனி..

அழகிய மணலாற்றுப் பகுதியின் பசுமைகள் நிறைந்த வனப்புமிக்கதொரு சிறிய கிராமம். வளங்கள் பல இருந்தும் போரின் அனர்த்தங்களால் ஏழ்மையில் வாடும் சூதுவாதற்ற அம்மண்ணின் மைந்தர்கள்.

குருவிக்கும் தன் கூடென்பதுபோல நேர்த்தியாய் வேயநு்பட்டு அழகுறச் சாணியால் மெழுகப்பட்ட சிறுகுடில். அழகிய தன் மனைவிக்கும்இ வாழ்வின் சோகங்கள் எதுவும் புரியாது சிட்டாய் சிறகடித்துத் திரியும் தன் சின்னஞ்சிறு வாரிசுகள் இரண்டுக்குமாய் தோட்டம் துரவு என ஓடியோடி உழைக்கும் அதன் தலைவன். அன்பிலும் காதலிலும் கடஸ்ரீநு 0டுண்ட அச்சிறு கூட்டின் தலைவனுக்கு அன்றொருநாள் ஓர் சேதி வந்தது. எம்மண் பறிக்க வருகிறது நம் பகை. எல்லைப்படை வீரனாய் புகுக களம். மறத்தமிழன் பண்டாரவன்னியன் வழித்தோன்றல் அல்லவா? என்னதான் கஸ்டங்களும் சோகங்களும் வந்தாலும் அவன் வீரம் சோடைபோகுமா என்ன? புறப்படகுடான் குடும்பத்தின் தலைவன் களம் நோக்கி...

பிழைநினைந்து உருகி அணைவுறா மகிழ்நர்

பிரிதலல் அஞ்சிவிடு கண்கள்நீர்

மழைததும்ப விரல் தரையில் எழுதும்

மடநலீர் கடைகள் திறமினோ.

உங்கள் கணவர் உங்களைவிட்டுப் பிரிந்து நாட்டுக்காய் அவர் மேற்கொண்ட கடமையில் செல்ல மு ையும்போது உங்களால் அவரைத் தடை செய்யவும் முடியாமல் இனிதாக வழியனுப்பி வைக்கவும் முடியாமல் மௌனமாய் கண்ணீர் வடித்தும்இ கால்களால் தரையில் கீறியும் நின்ற பெண்ணே உன் கணவன் பகை வென்று வருகிறான் உங்கள் வீட்டின் கதவுகளைத் திறவுங்கள் என்பதாய் அமையும் இப்பாடல ் வரிகள்இ இச்சிறு குடிலின் தலைவியை நோக்கிப் பாடுவதாய் கன கச்சிதமாய் இன்றும் நம் கள நிலைக்குப் பொருந்தவில்லையா என்ன?

No comments: