நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

மெல்ல தமிழ் இனி வாழும்

ரெவெரி என்ற பெயரில் ஒருவர் எனது பதிவு ஒன்றிற்கு சிலகாலங்களின் முன் பின்னூட்டம் இட்டிருந்தார். அப்பொழுதுதான் முதன்முதலாக ரெவெரி என்ற பெயரை அறிந்துகொண்டதில், என்ன இது இப்படி ஒரு வித்தியாசமான பெயராக இருக்கிறதே யாராக இருக்கும் என்ற ஆவலில் தேடத்தொடங்கியதில் மெல்ல தமிழ் இனி வாழும் வலைப்பூவில் போய் விழுந்தேன். அதற்கப்புறம் சிலகாலமாக தொடர்ந்து அங்கு உலாவியதில் மெல்ல தமிழ் இனி நிச்சயமாக புகுதிய மெருகுடன் வாழும் என்ற நம்பிக்கையுடன் உங்களிற்கு மெல்ல தமிழ் இனி வாழும் வலைப்பூவை அறிமுகப்படுத்துகிறேன்.

அம்மா பிள்ளை பாசத்திற்கு எத்தனையோ நல்ல சினிமாக்கள், கதைகள், கவிதைகள் என்று வந்திருக்கு அந்தவகையில் அன்புள்ள அம்மா  எனும் ஆக்கமும் படிப்பவர் மனதில் இடம் பிடிக்கிறது.

தந்தை மகன் உறவு பிணைப்பை சொல்லும் ஆக்கங்கள் மிகவும் குறைவு. வாரணம் ஆயிரம் படத்தை பார்த்துவிட்டு நானும் எந்து வாலிப வயது மகனும் கனத்த இதயங்களுடன் ஒருவர் கையை மற்றவர் இறுக பற்றிக்கொண்டு வெளியே வந்தோம். இப்பொழுது  அன்புள்ள அப்பாவுக்கு....   படைப்பு அதேபோன்ற ஒரு உணர்வை எனக்கு தந்தது. என்ன ஒரு வித்தியாசம்  இன்று உணர்வை பகிர்ந்துகொள்ள பையன் பக்கத்தில் இல்லை கல்யாணமாகி தனிக்குடித்தனம் போய்விட்டான்.
What a feeling What a feeling tell my heart....
Hats off revery!
ரெவெரி, நிச்சயமாக உங்க பொண்ணு இப்படி ஒரு அப்பா கிடைத்ததற்காக பின்னொரு காலத்தில் பெருமிதம் கொள்ளும்.

என் மார்பகம்...  இந்த தலைப்பை பார்த்துவிட்டு ஒகோ நம்ம ரெவெரிகூட கிளுகிளு கில்மா மாற்றர் எழுதியிருக்கிறாரே என்று அவசரம் அவசரமாக திறந்து பார்த்தால்.....
என்ன எழுதியிருப்பார் என்று அறிய உங்களுக்கும் ஆவல் வந்திவிட்டதா?


என் மார்பகத்தின் மேலே ஒருதடவை உங்கட எலியாலை அட அதுதான் உங்க கம்பியூட்டர் மவுசாலை அமுக்கி பாருங்கோ. அதிலும் இந்த ரெவெரி வித்தியாசமாகத்தான் எழுதியிருக்கிறார்.

ரெவெரி உங்க ஆக்கங்கள் என்னை கவர்ந்த அளவிற்கு வலைப்பூவின் முகப்பு பக்கத்தில் விடயங்களை தொகுத்துள்ள அமைப்பு ஏனோ என்னை கவரவில்லை.  இந்தவிடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்களேன் Please.

மெர்ஸி ஹோம், அழியப்போகும் இந்திய சிறு வணிகர்கள் , கூடங்குளம்..குடிமக்களின் குரல்... என சிறப்பான சமுதாய விழிப்புணர்வு பதிவுகளின் பட்டியல் நீண்டு செல்கிறது.

கவிப்பிரியர்களிற்கு சின்ன சின்ன வரிகளில் இளமை ததும்பும் கவிதைகளும் இங்கே நிறைந்துகிடக்கிறது


மொத்தத்தில் கில்மா, கிசுகிசு, அடுத்தவனை கிண்டல்பண்ணுவது போன்ற பதிவுகளை எழுதாமலும் ஒரு வலைப்பூவினால் வாசகர்களை கவரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு மெல்ல தமி இனி வாழும்.

6 comments:

Angel said...
This comment has been removed by the author.
Angel said...

மீண்டும் பதிவுலகம் பக்கம் பார்ப்பதில் மகிழ்ச்சி அண்ணா ..செல்லம்மா அண்ணி நலம்தானே :)

ரெவரியின் பதிவுகள் அனைத்துமே அருமைதான் ..சில காலமாக அவர் பதிவுகள் எழுதலை .மறுபடியும் எழுத வரவேண்டும் அவர்

Yarlpavanan said...

சிறந்த அறிமுகம்
மிக்க நன்றி

kowsy said...

எங்கே இந்த அம்பலத்தார் என்று நினைத்தேன். மீண்டும் ரெவரி கூட உங்களைப் போல் தோன்றுவார் என்று நினைக்கிறேன்.

தனிமரம் said...

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயாவுக்கும் செல்லம்மா அன்ரிக்கும்.விரைவில் மீண்டும் பதிவுலகம் நோக்கி வாருங்கோ.

Unknown said...

வணக்கம் நண்பரே.. !

உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது,

பார்வையிடவும். தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் பதிவுகள், உணர்வுகள், சுவாரசியங்கள், அனுபவங்கள் மற்றவர்களையும் சென்றடைய உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி