எனக்கு ஒரு ஆசை எதிர்பார்ப்பு என்ரை ஒவ்வொரு பதிவுகளையும் தினமும் ஆயிரம்பேராவது படித்து ஆளுக்கு பத்து பின்னூட்டம் இடவேண்டும்.
இப்படி நான் சொன்னா என்ன சொல்லுவியள்.
கிறுக்குப்பய பிள்ளை அம்பலத்தான் எழுதுகிற திறத்தில பாவமே என்று பத்துப்பேர் பின்னூட்டம் எழுதுவதே பெரிய விசயம், அதற்குள் ஆசையைப்பார் ஆசையை, ஆசைக்கு அளவே இல்லையா? என்று திட்டாமல் விட்டியள் என்றால்
Somthing wrong என்றுதான் நினைக்கவேணும்.
இதற்கிடையில் நான் நேற்றுக்கூட குறைந்தது ஐம்பது பேருக்காவது பின்னூட்டம் இட்டனே! எனக்கு பத்துப்பேர்தான் பின்னூட்டம் போட்டாங்களே என்று சோகமோ சோகமாகி நான் மூஞ்சியை சோகமா வச்சிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து இருப்பன்.
என்ரை செல்லம்மாவுக்கு என்றால் நான் ஒவ்வொருமாசமும் ஐந்து பவுணில நகையும் இரண்டு சேலையும் வாங்கித்தரவேண்டும் என்ற ஆசை எதிர்பார்ப்பு.
இவை எங்களது ஸ்பெசல் அளவுக்கு மிஞ்சிய ஆசைகள்.
இதுபோலத்தான் ஒவ்வொருவருக்கும்....
சின்ன வயசில அம்மா என்னைய மட்டும்தான் தூக்கி திரியவேண்டும் தம்பியை தூக்கவோ கொஞ்சவோகூடாது.
அரும்பும்மீசை வளரத்தொடங்கிற வயசிலை ஊரில உள்ளதிலையே அழகான பொண்ணு என்னையத்தான் காதலிக்கணும். (என்ரை அழகைத்தான் நானே கண்ணாடியில பார்க்கமாட்டேனே அவ்வளவு மோசம்.) இல்லையின்னா வாழ்க்கையே சோகமான பீலிங்கில தாடிய வளர்த்துக்கொண்டு சோகமாக திரியிறது.
அப்புறம் கல்யாணம் கட்டினால் வாற பெண்டாட்டி எனக்குமட்டுமே சேவகம் செய்கிற இயந்திரமாக, நான் சொல்லுவதற்கெல்லாம் மறு பேச்சின்றி ஆமா போட்டுக்கொண்டு, அந்த மூன்று நாட்களில்கூட கூப்பிட்டால் முகம் சுழிக்காமல், உடல் வேதனையை வெளிக்காட்டாமல் ஓடிவந்து கூடப்படுத்துக்கணும்.
பிறக்கிற குழந்தை நான் விரும்புகிற படிப்பு படிக்கவேணும்.
நான் சொல்லுகிற பெண்ணையோ மாப்பிள்ளையையோ கட்டிக்கவேணும்.
காலம்பூராவும் என்னைய தலையிலதூக்கி கொண்டாடிட்டு இருக்கவேணும்.
இல்லையென்றால் நான் சோகமாகிவிடுவேன்.
இப்படியே மனிதரின் அளவுகடந்த எதிர்பார்ப்புக்களின் பட்டியல் நீண்டுகொண்டேபோகும்.
ஆனால் அம்மாவின்ரை மனநிலையை,
நான்சைட் அடிக்கிற அழகான பெண்ணின் ஆசையை எதிர்பார்ப்புக்களை,
கட்டின பெண்டாட்டியின் மனதை, அவளது விருப்பு வெறுப்புகளை,
பிள்ளையின் ஆசைகளை, எதிர்பார்ப்புக்களை எண்ணிப்பார்க்கவே மாட்டேன்.
அதற்கு மனது இடம்கொடுக்காது. எனக்கு வேண்டியது எனது எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வேண்டும்.
என்னைப்போலத்தானே மற்றவர்களுக்கும் ஆசைகள் இருக்கும் எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?
எனது பேராசைகளிற்காக அடுத்தவர்களை பலிக்கடா ஆக்குவது நியாயமா? எனது அளவுகடந்த ஆசைகளிற்காக என்னை சுற்றி உள்ளவர்கள் தங்கள் சந்தோசங்களை இழக்கவேண்டும். அல்லது இதுபோன்ற ஆசை நிறைவேறாதபோது நான் துக்கத்தில் தவிப்பேன். இவையெல்லாம் தேவைதானா? நானும் துக்கத்தில் வாடி என்னை சுற்றி இருப்பவர்களையும் கவலைகொள்ளவைக்கும் மனநிலை தேவைதானா?
ஒவ்வொருவரும் ஒருகணம் இதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் தானும் சந்தோசமாக வாழ்ந்து, தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோசமாக வாழவைக்கலாம் சிந்திப்போமா?
cheers cheers.......... கிடைத்திருக்கிற ஒரு வாழ்க்கையை ஜாலியாக வாழ்வோம்.
"யோவ் அம்பலம்! இதுக்கு மேலயயும் தத்துவம் பேசிட்டிருந்த, நாங்க தலைவர் ரஜனி பாட்டுக்கு மேல குத்து, கீழ துத்து ஆஆ அங்க குத்து ஈஈஈஈஈஈ இங்க குத்து என்று குத்தாட்டம் ஆடிட்டு இருக்கிறதை நிறுத்திட்டு உம்மூஞ்சியில் குத்திடுவம்" என்று கீழ ஆடிப்பாடிட்டு இருக்கிற பசங்க திட்டுறாங்க.
So now the show is coming to the final stage. climax.
பசங்க ஆடுகிற ஆட்டத்தையும் குத்துற குத்தையும் பார்த்திட்டு ஜாலியா உங்க உங்க ஜோலியை பார்க்கப்போங்கோ இப்ப நான் மேலே சொன்ன விடயங்கள் நன்றாக புரிந்திருக்கும் என நினைக்கிறன்.
வந்திருக்கிற வாசகர்ஸ் இந்த பதிவுக்குமட்டும் பின்னூட்டம் இடாம போனிங்க அப்புறம் எனக்கு ரொம்ப பீலிங் ஆகி நான் சோகத்தில அழுதிடுவன் மறந்திடாதையுங்கோ.
என்னோட சின்னவள் ஒண்ணாம் கிளாஸ் படிக்கிறப்பவே ரொம்ப சமத்து.
ஒரு நாள் என்கிட்ட ஓடி வந்து.
அப்பா உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்
கேளடா கண்ணு.
இந்தக்கண்ணாடியை போடாமல் படிக்கமுடியுமா?
இல்லடா கண்ணு.
அப்படின்னா கண்ணாடிபோடாம எழுதமுடியுமா அப்பா?
அது வந்து... ஒருமாதிரியாக சாளிச்சு எழுதிடுவன்ரா செல்லம்.
அப்பாடா...
எதுக்கு கேட்டேடா செல்லம்.
அது வந்தப்பா நாளைக்கு ரீச்சர் பரீட்சை ரிசல்ட்டு தாறாங்க....
அடங்கொய்யால என்னமா திங்பண்ணுறடி...
படங்கள் கூகிள் தேடலில் கிடைத்தவை.
103 comments:
எனக்கு ஒரு ஆசை எதிர்பார்ப்பு என்ரை ஒவ்வொரு பதிவுகளையும் தினமும் ஆயிரம்பேராவது படித்து ஆளுக்கு பத்து பின்னூட்டம் இடவேண்டும்.
இப்படி நான் சொன்னா என்ன சொல்லுவியள்.//
எதுக்கு வம்பு நாமளும் ஒரு கமண்ட் போட்டிடுவோம்......\;0
வணக்கம் அம்பலத்தார் ஐயா,
ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன் மேலே
என்று நமக்கு முன்னே ஒருவர் பாடிவிட்டு சென்றுவிட்டார்...
நம்மை நம் நிலையை உணர்ந்து, ஆசையின் அளவை சுருக்கிக் கொள்ள வேண்டும். அப்படி வைக்கும் ஆசை நமக்கு முன் நிற்பவரை எந்த ஒரு காரணத்திற்காகவும் புண்படுத்தி விடக்கூடாது
என்பதை மனதில் நிறுத்தினால் போதும் என்ற உங்கள் கருத்துரை
மிகவும் ஏற்புடையது ஐயா...
ஒரு தனி மனிதனால் தம்மை சுற்றி இருக்கும் எல்லோரையும் சந்தோசப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான ஒன்று..
ஆனால் முடிந்தவரை அந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்..
மனதிற்கு இதமளிக்கும் பதிவு.
ஆசையில பாத்திகட்டி நாற்று ஒன்று நட்டுவச்சேன் வா மூக்காயி என்று ராகுல் மிச்சம் பாடி முடிக்கவில்லைத் தொடரை என்று எனக்கும் தான் ஆசையிருக்கு !ஹீப்ஹீ
நீங்க 5புவன் சங்கிலி என் மனுசி 5 நிமிடம் உந்த பிளாக்கைவிட்டு பேசாம இருங்கோ என்ற ஆசையில் !விடமாட்டம் இல்ல நாங்க ஆம்பிள்ளை ஆனாதிக்கவாதிகள் என்று எவனாவது இனிச் சொல்லக்கூடாது என்று ஒரு வார்த்தை திருவார்த்தைப் பதிவு பிடித்திருக்கு!
ஓடி ஓடி கமெண்டு போட எனக்கும் விருப்பம் வேலை இடையில் ஆமைக்கறிக்கு என்ன சேர்த்தன் என்ற குழப்பத்தில் அடுத்த பில் வரும் !ஹீ
ஆசைகள் பல விதம் ஆனாலும் நடப்பது அவன் செயல் அறிவுரை சொல்லியிருக்கும் பதிவு கண்டு ஆனந்தம் அம்பலத்தார்!
ம்ம்ம்... புரியுது பாஸ்! :-)
நாம ஆசைப்படுறது கூட தப்பில்ல! அடுத்தவனைப் பாதிக்காதவரை..ஆனா இன்னொருத்தர்மேல திணிக்கிறதுதான் ரொம்பக் கொடுமை!
சிட்டுக்குருவி said...
//எதுக்கு வம்பு நாமளும் ஒரு கமண்ட் போட்டிடுவோம்......\;0//
அப்பாடா நான் அழவேண்டியதில்லை
என் மனம் கவர்ந்த அமபலத்தார் அழுதால்
என் மனசு தாங்காது
அருமையான அசத்தலான பதிவு
தொடர்ந்து தர வேண்டுகிறேன்
மகேந்திரன் said...
//ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன் மேலே
என்று நமக்கு முன்னே ஒருவர் பாடிவிட்டு சென்றுவிட்டார்...
நம்மை நம் நிலையை உணர்ந்து, ஆசையின் அளவை சுருக்கிக் கொள்ள வேண்டும். அப்படி வைக்கும் ஆசை நமக்கு முன் நிற்பவரை எந்த ஒரு காரணத்திற்காகவும் புண்படுத்தி விடக்கூடாது
என்பதை மனதில் நிறுத்தினால் போதும் என்ற உங்கள் கருத்துரை
மிகவும் ஏற்புடையது ஐயா...
ஒரு தனி மனிதனால் தம்மை சுற்றி இருக்கும் எல்லோரையும் சந்தோசப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான ஒன்று..
ஆனால் முடிந்தவரை அந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்..
மனதிற்கு இதமளிக்கும் பதிவு.//
மிகவும் இதமான வார்த்தைகளில் மகிழ்வுதரும் உங்க பின்னூட்டத்திற்கு நன்றி மகேந்திரன்
மனப் பக்குவப்பட்டால் ஆசை அலை அமைதி கொண்டுவிடும். உங்கள் பதிவு காலத்தின் தேவை அம்பலத்தாரே.....
தனிமரம் said...
//ஆசையில பாத்திகட்டி நாற்று ஒன்று நட்டுவச்சேன் வா மூக்காயி என்று ராகுல் மிச்சம் பாடி முடிக்கவில்லைத் தொடரை என்று எனக்கும் தான் ஆசையிருக்கு !ஹீப்ஹீ//
தனிமரம் ஆசைகள் துறந்தவன் என்றல்லவோ நினைத்திருந்தேன்.
தனிமரம் said...
//நாங்க ஆம்பிள்ளை ஆனாதிக்கவாதிகள் என்று எவனாவது இனிச் சொல்லக்கூடாது என்று ஒரு வார்த்தை திருவார்த்தைப் பதிவு பிடித்திருக்கு!//
ஹா ஹா ஆணாதிக்கவாதிகள்.
தனிமரம் said...
//ஓடி ஓடி கமெண்டு போட எனக்கும் விருப்பம் வேலை இடையில் ஆமைக்கறிக்கு என்ன சேர்த்தன் என்ற குழப்பத்தில் அடுத்த பில் வரும் !ஹீ//
ஹி ஹீ நேசன் ஆமைக்கறிக்கு மறந்திடாமல் ஆமை இறைச்சியை சேர்த்திடுங்கோ
என்ரை செல்லம்மாவுக்கு என்றால் நான் ஒவ்வொருமாசமும் ஐந்து பவுணில நகையும் இரண்டு சேலையும் வாங்கித்தரவேண்டும் என்ற ஆசை எதிர்பார்ப்பு.
///
உங்கட செல்லம்மாவும் இந்த பதிவை படிப்பாங்களா?:)
தனிமரம் said...
//ஆசைகள் பல விதம் ஆனாலும் நடப்பது அவன் செயல் அறிவுரை சொல்லியிருக்கும் பதிவு கண்டு ஆனந்தம் அம்பலத்தார்!//
நேசன் நீங்க இப்படி சொல்லுறியள் வேற சிலபேர் அம்பலத்தார் கொஞ்சநாளா பதிவு எழுதவில்லை அப்பாடா ஆனந்தம் என்று சொன்னது என்ரை காதில விழுந்தது.
ஜீ... said...
//ம்ம்ம்... புரியுது பாஸ்! :-)
நாம ஆசைப்படுறது கூட தப்பில்ல! அடுத்தவனைப் பாதிக்காதவரை..ஆனா இன்னொருத்தர்மேல திணிக்கிறதுதான் ரொம்பக் கொடுமை!//
ஜீ ரொம்ப தெளிவாக இருக்கிறிங்க.
எனக்கு ஒரு ஆசை எதிர்பார்ப்பு என்ரை ஒவ்வொரு பதிவுகளையும் தினமும் ஆயிரம்பேராவது படித்து ஆளுக்கு பத்து பின்னூட்டம் இடவேண்டும்.:///////
1000 ஐ 10 ஆல் பெருக்கினால், பத்தாயிரம் வரும்! ஒரு பதிவுக்கு 10000 பின்னூட்டமா?
அண்ணை, அவ்வளவுக்கும் பதில் போட்டால், அடுத்த பதிவை 2020 ல் தான் எழுதுவீங்க! ஹா ஹா ஹா !!!
இதற்கிடையில் நான் நேற்றுக்கூட குறைந்தது ஐம்பது பேருக்காவது பின்னூட்டம் இட்டனே! //////
அண்ணர் உதுக்கெல்லாம் எங்கால நேரம் கிடைக்குது! எனக்கு நேரம் ஒருகிலோ பார்சல்ல அனுப்பிவிடுங்கோ!
இப்படியே மனிதரின் அளவுகடந்த எதிர்பார்ப்புக்களின் பட்டியல் நீண்டுகொண்டேபோகும். ////////
ஸப்பா! இவ்வளவு ஆசைகளா? எனக்கு இதெல்லாம் புதுஷா இருக்கு! சத்தியமா!
எதிர்பார்ப்புக்களை எண்ணிப்பார்க்கவே மாட்டேன்.
அதற்கு மனது இடம்கொடுக்காது. எனக்கு வேண்டியது எனது எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வேண்டும்./////
மிகவும் சரி அண்ணை! இந்த அவசர உலகத்தில நாங்க எத்தனையோ விஷயங்களை மிஸ் பண்றோம்! எல்லாக் கணக்குகளையும் எண்டைக்குத் தீர்க்கப் போறோமோ?
http://www.facebook.com/Channel4.Fake.Video please comment here as a true tamilan
அம்பலத்தார் ஐயா...
qwertyuiopasdfghjklzxcvbnm
இந்த பின்னூட்டம் போதுமா?
என்ன பண்ணியிருக்கேன்னு சொல்லுங்க பார்க்கலாம்?
அத்தனைக்கும் ஆசைப்படுன்னு பெரியவர் யாரோ சொன்ன நினைவு...
குட்டிகுட்டியா ஆசை இருந்தா நடக்கும் தானே...
நான்தான் 25 ஆவது.வடை கோப்பி ஏதாச்சும் கிடைக்குமோ செல்லம்மா மாமிட்ட கேட்டுச் சொல்லுங்கோ அம்பலம் ஐயா.இதுவும் ஒரு ஆசைதானே !
என்ரை செல்லம்மாவுக்கு என்றால் நான் ஒவ்வொருமாசமும் ஐந்து பவுணில நகையும் இரண்டு சேலையும் வாங்கித்தரவேண்டும் என்ற ஆசை....
இது ஆசையோ பேராசையோ.அப்பிடியே வாங்கிக் குடுத்திட்டாஆஆஆஆஆஆலும்.சும்மா எழுதலாமெண்டு இப்பிடி அண்டப்புழுகு ஆகாசப் புழுகெல்லாம் எழுதக்கூடாது சொல்லிட்டன்.செல்லம்மா மா....மி சத்தம் போட்டுக் கூப்பிட்டாலும் கேக்குதில்ல அவவுக்கு.உங்களை மாட்டிவிட்டு கஞ்சி காய்ச்ச விடவேணும்.இது என்ர ஆசை !
கிடைத்திருக்கிற ஒரு வாழ்க்கையை ஜாலியாக வாழ்வோம் எண்டு எங்களுக்குச் சொல்லிப்போட்டு பிறகென்ன அழுகை.சரி சரி அழாதேங்கோ.நான் எப்பவும் வந்து பின்னூட்டம் போடுறனெல்லோ.பிறகென்ன.நேசனிட்ட சொல்லி ஆமைக்கறியும் புட்டும் வாங்கித் தாறன் சரியோ !
வணக்கம் மச்சான்!
உங்களுக்கு மனசுக்குள்ள ரெம்பத்தான் ஆசை இப்பிடி சொன்னா நாங்களும் பத்து கொமொன்ஸ் போடுவம் என்று பாக்கிறீங்க போல?
சரி அப்பிடி நான் பத்து கொமொன்ஸ் போட்டா அதுக்கெல்லாம் நீங்க மறுமொழி சொல்லி உங்க நேரத்த வேஸ்ட் ஆக்க விரும்பல.. ;-))
அவிழ்த்து விடப்பட்ட யானை மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுவது போலானதாம் ஆசை.அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது என்கிறார்கள் பெரியவர்கள்.
ஆனால் அதேநேரம் ஆசைகளை வளர்ப்பதும் நல்லதாமே.அது எப்போதோ ஒரு நேரத்தில் நடக்கக்கூடிய ஒரு சக்தியைத் தருமாம் என்றும் சொல்கிறார்கள் !
என்ரை செல்லம்மாவுக்கு என்றால் நான் ஒவ்வொருமாசமும் ஐந்து பவுணில நகையும் இரண்டு சேலையும் வாங்கித்தரவேண்டும் என்ற ஆசை எதிர்பார்ப்பு.//
ஆமா அக்காக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்தா என்ன குறைஞ்சோ போவிங்க? இததான் சொல்லுறது கிளிய வளர்த்து பூனை கையில கொடுக்கிறதுன்னு.. இப்ப கவலைப்பட்டு என்ன பிரயோசனம்.!!!!
எங்கள் ஆசைகளை அடுத்தவர்களிடம் திணிப்பது எங்களவர்களின் ஒரு பழக்கம்.இதுவே பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம்.அவரவர்க்கென்று தனிப்பட்ட மனம்.அதற்குள் தனிப்பட்ட ஆசைகள்.பெற்றவர்கள்கூட அதைக் கலைக்க அனுமதி இல்லை.பெற்றவர்கள் என்கிற உரிமையில் அதைக்கூடக் கலைக்கிறார்கள்.எதிர்த்தால் பெற்றவர்கள் சொல் கேட்காத பிள்ளையாம் !
இனி ஏதாவது சொன்னால் தாற வடையும் கிடைக்காது.சரி நான் போறன்.வடையை பார்சலில அனுப்பிவிடுங்கோ !
எனக்கு ஒரு ஆசை எதிர்பார்ப்பு என்ரை ஒவ்வொரு பதிவுகளையும் தினமும் ஆயிரம்பேராவது படித்து ஆளுக்கு பத்து பின்னூட்டம் இடவேண்டும்.
இப்படி நான் சொன்னா என்ன சொல்லுவியள்.
பின்னூட்டம் அளிப்போம்..
வணக்கம் அம்பலத்தார்!நல்லா இருக்கிறியளோ?ஹேமா வீட்டில பாத்தன்.////வந்திருக்கிற வாசகர்ஸ் இந்த பதிவுக்குமட்டும் பின்னூட்டம் இடாம போனிங்க அப்புறம் எனக்கு ரொம்ப பீலிங் ஆகி நான் சோகத்தில அழுதிடுவன் மறந்திடாதையுங்கோ.///பாவமாக் கிடக்கு!இந்த ஒருபதிவுக்கு மட்டும் தான கேக்கிறார்,பின்னூட்டம் போடுவம்!சரி,என்ன எழுதுறது?இந்தப் பதிவில என்ன விஷயம் இருக்கெண்டும் விளங்கயில்லை!இவளவுமே ஒரு பின்னூட்டம் தான?எத்தினையோ பேர் பதிவைப் படிக்காமலே ஆஹா!அருமை!அற்புதம்!(பக்கத்து வீட்டு அன்ரி இல்ல!)எண்டு,சோகத்தைச் சொன்னாக் கூட பாராட்டுற இந்த வலையுலகத்தில......................இது காணும்!?Ha!Ha!Haa!!!!
Ramani said...
என் மனம் கவர்ந்த அமபலத்தார் அழுதால்
என் மனசு தாங்காது
அருமையான அசத்தலான பதிவு
தொடர்ந்து தர வேண்டுகிறேன்
உங்க மனந்திறந்த வார்த்தைகளிற்கு நன்றி ரமணி
கலைவிழி said...
//மனப் பக்குவப்பட்டால் ஆசை அலை அமைதி கொண்டுவிடும். உங்கள் பதிவு காலத்தின் தேவை அம்பலத்தாரே.....//
உங்க முதல் வருகைக்கும் அன்பான வார்த்தைகளிற்கும் நன்றியம்மா
கந்தசாமி. said...
/// உங்கட செல்லம்மாவும் இந்த பதிவை படிப்பாங்களா?:)//
உஸ்.......
சத்தமாக சொல்லாதையுங்கோ கந்து செல்லம்மா காதில் விழுந்திடப்போகுது.
Ideamani - The Master of All said...
1000 ஐ 10 ஆல் பெருக்கினால், பத்தாயிரம் வரும்! ஒரு பதிவுக்கு 10000 பின்னூட்டமா?
அண்ணை, அவ்வளவுக்கும் பதில் போட்டால், அடுத்த பதிவை 2020 ல் தான் எழுதுவீங்க! ஹா ஹா ஹா !!!//
ஹி ஹி மணிதான் கற்பூரமாச்சே கப்பென்று விசயத்தை பிடிச்சிட்டிங்க. அதுதான் தலைப்பிலையே சொல்லிவிட்டனே அளவுக்கு மிஞ்சின ஆசை என்று.
Ideamani - The Master of All said...
அண்ணர் உதுக்கெல்லாம் எங்கால நேரம் கிடைக்குது! எனக்கு நேரம் ஒருகிலோ பார்சல்ல அனுப்பிவிடுங்கோ!//
சும்மா ஒரு பில்டப்புக்கு சொன்னா பார்சல் செய்யச்சொல்லிட்டிங்களே. முதலில் எனக்கு உங்க கடையில் இருந்து இரண்டு மாலுபாண் அனுப்புங்கோ
Ideamani - The Master of All said...
// ஸப்பா! இவ்வளவு ஆசைகளா? எனக்கு இதெல்லாம் புதுஷா இருக்கு! சத்தியமா!//
ஹி ஹி நீங்க சொல்லுறத 100% நம்புகிறேன் தம்பி
Ideamani - The Master of All said...
எல்லாக் கணக்குகளையும் எண்டைக்குத் தீர்க்கப் போறோமோ?//
உண்மைதான் மணி.
Anonymous said...
http://www.facebook.com/Channel4.Fake.Video please comment here as a true tamilan
//
தகவலிற்கு நன்றி. அது சரி இதை சொல்ல எதற்கு முகமூடி போட்டுக்கொண்டு வந்திருக்கிறிங்க.
ரெவெரி said...
அம்பலத்தார் ஐயா...
qwertyuiopasdfghjklzxcvbnm
இந்த பின்னூட்டம் போதுமா?
என்ன பண்ணியிருக்கேன்னு சொல்லுங்க பார்க்கலாம்?//
ரொம்ப நேரமாக முடியை பிச்சும் கண்டுபிடிக்க முடியலையே ரெவெரி.
சொல்லிடுங்க
ரெவெரி said...
//அத்தனைக்கும் ஆசைப்படுன்னு பெரியவர் யாரோ சொன்ன நினைவு...
குட்டிகுட்டியா ஆசை இருந்தா நடக்கும் தானே...//
ஆமா ரெவெரி நீங்க சொல்லுறது சரிதான். நான் சொல்வது அடுத்தவங்களுக்கு கவலையை கொடுக்கும் ஆசைகளை.
உங்கட வீட்டை வாறவைக்கு தண்ணி,வென்னி குடுத்தியள் எண்டால்........................... நாலு பேர் வருவினம் போவினம் நீங்கள் என்னடாவெண்டால் அழுவன்,சிரிப்பநெண்டு????!!!!!!
ஹேமா said...
//நான்தான் 25 ஆவது.வடை கோப்பி ஏதாச்சும் கிடைக்குமோ செல்லம்மா மாமிட்ட கேட்டுச் சொல்லுங்கோ அம்பலம் ஐயா.இதுவும் ஒரு ஆசைதானே !//
இது நியாயமான ஆசைதானே செல்லம்மா தயார் செய்கிறா இருந்து சாப்பிட்டிட்டு போங்கோ
அம்பலத்தார், "அதிகமாக" ஆசைப்படுவது அழிவுக்கும் வழி வகுக்கும், அதே நேரம் அளவான ஆசை இருந்தால் தான் பெரிய இலட்சியங்களைக் கூட எட்ட முடியும் என்று தானே சொல்ல வாறீங்க, அதாவது உங்கள் அளவான ஆசைப்படி இம்முறை 100 பதிவுகளை எட்டிவிடுவீங்கள், என்பதாக பட்சி சொல்கிறது. இல்லாவிட்டால் "100 பதிவு" என்றாவது பதிவு போடுவமில்ல!
அதென்ன அடிவாங்குவது பெண்களும் குழந்தைகளும் மட்டும் தானா? எங்களின் அளவான ஆசைப்படி ஒரு ஆண்மகன் அடிவாங்குவதாக படம் போடக்கூடாதா?
காலை வணக்கம் அம்பலத்தார்!ராத்திரி நான் தான் சொதப்பிப் போட்டன்.கொம்பியூட்டரை மூடைக்குள்ள தான் கண்டு புடிச்சன்.எப்புடியோ,உங்கட"வேண்டுகோளை"நிறைவேற்றியாச்சு,ஹ!ஹ!ஹா!!!!!!
Ampalathaar iya vanakkam valthukkal
அச்சச்சோ அம்பலத்தார் பதிவு வெளியாகி 24 மணித்தியாலத்தைத் தொட முன் நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))... மே....மேஏஏஏஏஏஏஎ.. என்ன இது ஆடு கத்துதே எனக் கலைச்சிடாதையுங்கோ.. அது மே மாத்தைச் சொன்னேன்.... மே இலிருந்து ஒழுங்கா வரப்பார்க்கிறேன்... அதுவரை முன்னப்பினாதான் வருவன்... கோபிச்சீங்களெண்டால்.... உங்கட டார்லிங் செல்லம்மா அன்ரியிடம் சொல்லிக்கொடுப்பேன்... :)))
அவ்வ்வ்வ்வ்வ்வ் 50 தாவதைத் தொட்டிட்டேன்.. எனக்கு லைட் சூட்டில ஒரு தேங்காய்ப்பூச் சாதம் பார்ஷல் பிளீஸ்ஸ்:))..
ரெயினின் கார் பெட்டியில எண்டாலும் ஏறிட்டனே என சந்தோசமாக இருக்கு.
நகைச்சுவாயாகச் சொன்னாலும் நிறைய விஷயங்களை உள்ளடக்கி அழகான தத்துவத்தைச் சொல்லியிருக்கிறீங்க...
உண்மையேதான் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான்...
நம்மைப்போலவே பிறரையும் எண்ணினால் வாழ்க்கையில் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
ஆனால் இப்போ முந்தின காலம் மாதிரி இல்லை... நிறையவே மாறிவிட்டது விட்டுக்கொடுப்பு, அனுசரித்து நடத்தல், குடும்ப வேலைகளில் பங்கெடுத்தல், இப்படி ஆண்களும் நிறையவே மாறிவிட்டினம்....
அவரவரின் ஆசைகளுக்கு ஏற்ப விட்டுக் கொடுக்கவும் பழகிவிட்டிருக்கினம். ஆனா என்னதான் இருந்தாலும்.. சில இடங்களில் அளவுக்கு மீறி எதிர்பார்ப்பும் ஆசையும் இருப்பதனால்தானோ என்னவோ விவாகரத்துக்களும் வெளி நாட்டில் நம்மவரிடையே அதிகரித்துப் போவதாக அறிகிறோம்.
கடசி ஜோக் சூப்பர்... அதையே தான் சிறு மாறுதலோடு,,,
மகன்: அப்பா உங்களுக்கு இருட்டிலும் கண் நன்றாகத் தெரியும் என அடிக்கடி சொல்லுவீங்களே அது உண்மையா?
தந்தை: (மனதில்... இல்லை எனச் சொன்னால் , மகன் தன்னை மதிக்க மாட்டான் என நினைத்து)
பின்னைஎன்ன பொய்யே சொன்னனான்.. எனக்கு நல்ல வடிவாத் தெரியும்.
மகன்:
அப்படியெண்டால் கொஞ்சம் அந்த ரூமுக்கு வாங்கோ... என ஒரு இருட்டறைக்குள் கூட்டிப்போய்....
இந்தாங்கோ அப்பா என் ரிப்போர்ட்.... படிச்சிட்டு டக்கென சைன் வச்சுத் தாங்கோ.. நேரமாகிவிட்டதெனக்கு:).
ஹேமா said...
இது ஆசையோ பேராசையோ.அப்பிடியே வாங்கிக் குடுத்திட்டாஆஆஆஆஆஆலும்.சும்மா எழுதலாமெண்டு இப்பிடி அண்டப்புழுகு ஆகாசப் புழுகெல்லாம் எழுதக்கூடாது சொல்லிட்டன்.செல்லம்மா மா....மி சத்தம் போட்டுக் கூப்பிட்டாலும் கேக்குதில்ல அவவுக்கு.உங்களை மாட்டிவிட்டு கஞ்சி காய்ச்ச விடவேணும்.இது என்ர ஆசை !//
ஹா ஹா! நான் கஞ்சிகுடிக்கவேணும் என்றதில ஹேமாவுக்கு எவ்வளவு ஆசை என்று இப்பத்தான் தெரியுது. என்றாலும் ஹேமாவுக்கு இவ்வளவு நல்லமனது கூடாது
ஹேமா said...
//நேசனிட்ட சொல்லி ஆமைக்கறியும் புட்டும் வாங்கித் தாறன் சரியோ !//
என்ன ஹேமா புட்டு ஆமைக்கறி பார்சல் இதுவரை வந்துசேரவில்லை. நேசனிட்டை சொல்லி சீக்கிரம் அனுப்பியையுங்கோ.
காட்டான் said...
சரி அப்பிடி நான் பத்து கொமொன்ஸ் போட்டா அதுக்கெல்லாம் நீங்க மறுமொழி சொல்லி உங்க நேரத்த வேஸ்ட் ஆக்க விரும்பல.. ;-))//
வணக்கம் மச்சான் காட்டான் நான் சும்மா கதைக்காக சொன்னனான் தப்பித்தவறியும் அவ்வளவு பின்னுட்டம் எல்லாம் போட்டிடாதையுங்கோ. பிறகு நான் சம்பளத்திற்கு ஆள் வச்செல்லோ பதில் எழுதவேணும். என்ரை வேகத்துக்கு நாளுக்கு 10 பின்னூட்டம் எழுதுவதே பெரும் காரியம்.
ஹேமா said...
/ஆனால் அதேநேரம் ஆசைகளை வளர்ப்பதும் நல்லதாமே.அது எப்போதோ ஒரு நேரத்தில் நடக்கக்கூடிய ஒரு சக்தியைத் தருமாம் என்றும் சொல்கிறார்கள் !//
ஆம் ஹேமா நல்ல ஆசைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் நான் சொல்லுறது மற்றவர்களுக்கு கெடுதல் கொடுக்கும் ஆசைகளை...
காட்டான் said...
// ஆமா அக்காக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்தா என்ன குறைஞ்சோ போவிங்க? இததான் சொல்லுறது கிளிய வளர்த்து பூனை கையில கொடுக்கிறதுன்னு.. இப்ப கவலைப்பட்டு என்ன பிரயோசனம்.!!!!//
பாருங்கோ அக்காவின்ரை விசயம் என்ற உடனே ஓடிவந்திட்டியள் மச்சான். இதைத்தான் சொல்லுறது தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்று.
வணக்கம் அங்கிள் ..நலமா இருக்கீங்க தானே ...
பதிவு சுப்பரா இருந்தது ....நிறைய டவுட் டவுட்டா வந்ததது ...
முதல் நாளே சேட்டை பண்ண கூடாதல்லோ...அதனால் மீ கிட்னி கேக்கும் கேள்வி கெலைஎல்லம் கேட்டு சங்கடப் படுத்த மாட்டுவினம்
ரெவெரி said...
அம்பலத்தார் ஐயா...
qwertyuiopasdfghjklzxcvbnm
இந்த பின்னூட்டம் போதுமா?
என்ன பண்ணியிருக்கேன்னு சொல்லுங்க பார்க்கலாம்?//
/////////////////////////////////
கர்ர்ர்ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ....இதுலாம் ஜுஜிப்பி கேள்வி ரேறேவ்ரி அண்ணா ....
இந்த மாறி மொக்கை கேள்விகளுக்கெல்லாம் அங்கிள் பதில் சொல்ல மாட்டறாக்கும் ...
கி போர்டு இருக்கும் லெட்டர்ஸ் லைனா டைப் பண்ணி ஏமாத்தற கூட்டமா நீங்க
ஹேமா said...
சரியாக சொன்னியள் ஹேமா. நான் சுற்றி வளைத்து பதிவில சொல்லவந்ததை short & sweet ஆக சின்ன பின்னூட்டத்திலையே சொல்லிவிட்டியள்
//எங்கள் ஆசைகளை அடுத்தவர்களிடம் திணிப்பது எங்களவர்களின் ஒரு பழக்கம்.இதுவே பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம்.அவரவர்க்கென்று தனிப்பட்ட மனம்.அதற்குள் தனிப்பட்ட ஆசைகள்.பெற்றவர்கள்கூட அதைக் கலைக்க அனுமதி இல்லை.பெற்றவர்கள் என்கிற உரிமையில் அதைக்கூடக் கலைக்கிறார்கள்.எதிர்த்தால் பெற்றவர்கள் சொல் கேட்காத பிள்ளையாம் !//
Yoga.S.FR said...
பதிவுலகை நல்லாத்தான் எடைபோட்டு வச்சிருக்கிறியள் யோகா. ஹி ஹி இதை படிக்கிற யாராவது யோகா ஐயா உள்குத்து போட்டிட்டார் என்று சண்டைக்கு வரப்போகினம்.
//எத்தினையோ பேர் பதிவைப் படிக்காமலே ஆஹா!அருமை!அற்புதம்!(பக்கத்து வீட்டு அன்ரி இல்ல!)எண்டு,சோகத்தைச் சொன்னாக் கூட பாராட்டுற இந்த வலையுலகத்தில......................இது காணும்!?Ha!Ha!Haa!!!!//
இராஜராஜேஸ்வரி said...
// பின்னூட்டம் அளிப்போம்..//
ஆகா பார்த்தியளே நான் அழுதிடுவன் என்று மிரட்டியதும் ஓடிவந்து பின்னூட்டம் போட்டிட்டியள். வருகைக்கு நன்றி ராஜேஸ்வரி அம்மா.
Yoga.S.FR said...
நீங்க கொஞ்சம் சுணங்கி வந்திட்டியள் யோகா. கவிதாயினி ஹேமா என்ரை டார்லிங் செல்லம்மாவிடம் கோப்பி வடையெல்லாம் சாப்பிட்டிட்டு போனவ நீங்கள் காணவில்லையாக்கும். //உங்கட வீட்டை வாறவைக்கு தண்ணி,வென்னி குடுத்தியள் எண்டால்........................... நாலு பேர் வருவினம் போவினம் நீங்கள் என்னடாவெண்டால் அழுவன்,சிரிப்பநெண்டு????!!!!!!//
பராசக்தி said...
அடடா முதலே உங்க ஆசை தெரிஞ்சிருந்தால் என்ரை படத்தை போட்டே உங்கட ஆசையை நிறவேற்றியிருப்பனே.
//அதென்ன அடிவாங்குவது பெண்களும் குழந்தைகளும் மட்டும் தானா? எங்களின் அளவான ஆசைப்படி ஒரு ஆண்மகன் அடிவாங்குவதாக படம் போடக்கூடாதா?//
பராசக்தி said...
//உங்கள் அளவான ஆசைப்படி இம்முறை 100 பதிவுகளை எட்டிவிடுவீங்கள், என்பதாக பட்சி சொல்கிறது. இல்லாவிட்டால் "100 பதிவு" என்றாவது பதிவு போடுவமில்ல!//
வயிற்றெரிச்சலை கிளப்பாதையுங்கோ பரா இதுவரை வந்த பின்னூட்டங்களுக்கு பதில் எழுதவே நேரம் இல்லாம திணறிப்போய் இருக்கிறன்
Yoga.S.FR said...
//காலை வணக்கம் அம்பலத்தார்!ராத்திரி நான் தான் சொதப்பிப் போட்டன்.கொம்பியூட்டரை மூடைக்குள்ள தான் கண்டு புடிச்சன்.//
கவலையை விடுங்கோ யோகா சொதப்புறதுதானே எங்க ஸ்பெசல்.
yathan Raj said...
Ampalathaar iya vanakkam valthukkal//
வணக்கம் கவி அழகா நீண்ட நாட்களுக்கு அப்புறம் சந்திக்கிறம் நலமாக இருக்கிறியளா?
athira said...
//மே....மேஏஏஏஏஏஏஎ.. என்ன இது ஆடு கத்துதே எனக் கலைச்சிடாதையுங்கோ.. அது மே மாத்தைச் சொன்னேன்.... மே//
என்னது புதுமையாக பூசார் மே என்று கத்துறார்.
athira said...
//அவ்வ்வ்வ்வ்வ்வ் 50 தாவதைத் தொட்டிட்டேன்.. எனக்கு லைட் சூட்டில ஒரு தேங்காய்ப்பூச் சாதம் பார்ஷல் பிளீஸ்ஸ்:))..//
சீ சீ தேங்காய் சாதம் நீங்களும் உங்க வீட்டுக்காரரும் சேர்ந்து செய்தால்தான் நல்லா இருக்குமென்று My darling chellama சொல்லுறா. இப்ப வடை காப்பி தாறன்.
கலை அக்கா...
ஐன்ஸ்டீன் தங்கச்சி (மன்னிக்கவும்)
இங்க வருவாங்கன்னு தெரியாம போய்ட்டு....
ரெவெரி said...
கலை அக்கா...
ஐன்ஸ்டீன் தங்கச்சி (மன்னிக்கவும்)
இங்க வருவாங்கன்னு தெரியாம போய்ட்டு..//////////////
avvvvvvvvvvvvvvvvvv ...
எப்புடி சரியா சொன்னீங்க நான் ஒரு இயற்பியல் அறிஞி எண்டு ....
என்னை முன்னாடியே தெரியுமா உங்களுக்கு ...
ஆமா என்னை மாறி பெரிய அறிவாளிகள் ல்லம் தெரிந்து கொள்ளுவதில் இன்னா ஆச்சரியம் இருக்கு சரி தான அண்ணா ...
நாலு நாள் எங்க மாம்ஸ் இல்ல்லை ...என்னானாலும் தைரியமா பேசலாம் ...கேக்குறதுக்கு தான் அங்கிள் இல்லையேஎஎ எ எ எ
கலை said...
// நாலு நாள் எங்க மாம்ஸ் இல்ல்லை ...என்னானாலும் தைரியமா பேசலாம் ...கேக்குறதுக்கு தான் அங்கிள் இல்லையேஎஎ எ எ எ //
என்ன அறிஞி கலை அங்கிள் இல்லையென்றதும் ஜாலியா அரட்டையடிக்க புறப்பட்டாச்சா யோகா வராட்டும் நல்லா வத்திவைக்கிறேன்.
athira said...
//நகைச்சுவாயாகச் சொன்னாலும் நிறைய விஷயங்களை உள்ளடக்கி அழகான தத்துவத்தைச் சொல்லியிருக்கிறீங்க...//
ரொம்பவும்தான் ஐஸ் வைக்காதிங்க எனக்கு குளிர் ஒத்துக்காது அதிரா
athira said...
அவரவரின் ஆசைகளுக்கு ஏற்ப விட்டுக் கொடுக்கவும் பழகிவிட்டிருக்கினம். ஆனா என்னதான் இருந்தாலும்.. சில இடங்களில் அளவுக்கு மீறி எதிர்பார்ப்பும் ஆசையும் இருப்பதனால்தானோ என்னவோ விவாகரத்துக்களும் வெளி நாட்டில் நம்மவரிடையே அதிகரித்துப் போவதாக அறிகிறோம்.//
நிறைய மாறுதல் வந்திருக்கு ஒத்துக்கொள்கிறேன் அதிரா. ஆனால் மறுபுறத்தில் My car my petrol நீ யார் கேட்கிறது என்ற மனநிலையும் அதிகமாகிவருகிறது. ஒவ்வொருவருக்கும் நான் என்ற அகந்தை அதிகரிக்கிறது. குடும்ப உறவினர்கள் மத்தியில் பிணைப்பு அருகிவருகிறது. மாறிவரும் இந்தப்போக்கு நல்லதல்ல
athira said...
கடசி ஜோக் சூப்பர்... //
அம்மாடி சங்கிலித்திருட்டு வழக்கில எதிர்ச்சாட்சி சொன்ன அம்பலத்தாருக்கு, பூசார் வீட்டில இருந்து பாராட்டு வந்திருக்கு நம்பமுடியலையே!
athira said...
நம்மைப்போலவே பிறரையும் எண்ணினால் வாழ்க்கையில் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.//
Yes Madam 100% correct.
அதிரா மேடம் சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்
கலை said...
//வணக்கம் அங்கிள் ..நலமா இருக்கீங்க தானே ...
பதிவு சுப்பரா இருந்தது ....நிறைய டவுட் டவுட்டா வந்ததது ...//
வணக்கம் கலை, நலம் நலமறிய ஆவல்.
என்ன உங்களுக்கு நிறைய டவுட்டா... வருகுதா? தாராளமாக கேளுங்கோ. சொதப்புறதிலதான் நான் கில்லாடியாச்சே எப்படியாவது உங்க டவுட்ட கிளியர்பண்ணிடுவேன்.
கலை said...
ரெவெரி said...
அம்பலத்தார் ஐயா...
qwertyuiopasdfghjklzxcvbnm
இந்த பின்னூட்டம் போதுமா?
என்ன பண்ணியிருக்கேன்னு சொல்லுங்க பார்க்கலாம்?//
/////////////////////////////////
கர்ர்ர்ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ....இதுலாம் ஜுஜிப்பி கேள்வி ரேறேவ்ரி அண்ணா ....
இந்த மாறி மொக்கை கேள்விகளுக்கெல்லாம் அங்கிள் பதில் சொல்ல மாட்டறாக்கும் ...
கி போர்டு இருக்கும் லெட்டர்ஸ் லைனா டைப் பண்ணி ஏமாத்தற கூட்டமா நீங்க//
அதுதானே என்ரை மருமகள் அறிவுக்கடல்ல்ல்ல்ல்ல்.... கலை இருக்க என்னை யாரும் ஏமாத்திடமுடியுமா என்னா?... பாவம் நம்ம ரெவெரி நல்ல பையனாச்சே இந்த ஒருதடவை கண்டுக்காம விட்டிடும்மா.
நான் ரெவெரி கீழே இணைத்திருக்கிற முகப்புத்தக பக்கத்தோட சேர்த்து எதோ சொல்லவாறார் என்று நினைத்தேன்.
http://www.facebook.com/pages/Qwertyuiopasdfghjklzxcvbnm/55139636993
நலமா இருக்கீங்களா?
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே பாட்டு நினைவுக்கு வருதுங்க எனக்கு.,
//ஒவ்வொரு பதிவுகளையும் தினமும் ஆயிரம்பேராவது படித்து ஆளுக்கு பத்து பின்னூட்டம் இடவேண்டும்//
பார்ரா..........ம்
உமது கேள்விகளில் ஒரு நியாயம் இருக்கய்யா..
சிந்திக்க வேண்டிய விடயம்.
அப்புறம்.. ஆசை படுவதில் தவறில்லை ஆனா அதில் ஒரு அர்த்தம் இருக்கோணும்
அடி வாங்குவது நீங்கள் சரி, அடிப்பது யார் செல்லம்மாவோ?....... என்பதையும் வாசகர்களின் பார்வைக்குத் தெரிவது போல camera வில் கோணம் வையுங்கோ,
அதுசரி, வாசகர்கள் எல்லாருமாக பிரயத்தனம் எடுத்து உங்களை "100 பின்னூட்டம் கண்ட தங்கத் தலைவர் " பட்டம் வாங்கித்தர ஓடுப்பட்டுக்கொண்டிருக்கிறோம். உங்கட செல்லம் செல்லம்மாவும் வந்து ஒருக்கால் எட்டிப் பார்க்கலாம் தானே. ஆசையாய் ஒரு வார்த்தை, அள்ளிவிடலாமே? இந்த விடயத்தில் நீங்கள் பாவம் அம்பலத்தார்
ஆஹா, இதோட 86 பதிவாச்சு, இன்னும் ஒரு 14 தான் இருக்கு
ரெவெரி said...
கலை அக்கா...
ஐன்ஸ்டீன் தங்கச்சி (மன்னிக்கவும்)
இங்க வருவாங்கன்னு தெரியாம போய்ட்டு....//
அடபோங்க ரெவெரி நம்ம கலை ஐன்ஸ்டீனிற்கே ஆப்பு வச்சிடுவா அம்புட்டுகில்லாடி
கலை said...
எப்புடி சரியா சொன்னீங்க நான் ஒரு இயற்பியல் அறிஞி எண்டு ....
என்னை முன்னாடியே தெரியுமா உங்களுக்கு ...
ஆமா என்னை மாறி பெரிய அறிவாளிகள் ல்லம் தெரிந்து கொள்ளுவதில் இன்னா ஆச்சரியம் இருக்கு சரி தான அண்ணா ...//
ஆமா அது சரி கலை உங்களை தெரியாம இருக்கமுடியுமா என்ன
கோகுல் said...
//நலமா இருக்கீங்களா?
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே பாட்டு நினைவுக்கு வருதுங்க எனக்கு.,//
அடடா கோகுல் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறிங்க எப்படி சௌக்கியமாக இருக்கிறியளா?
மனசாட்சி said...
//பார்ரா..........ம்//
பார்த்திட்டேன்.. ம்.....
மனசாட்சி said...
//உமது கேள்விகளில் ஒரு நியாயம் இருக்கய்யா..
சிந்திக்க வேண்டிய விடயம்.//
அப்பாடா! மனச்சாட்ட்சி திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிட்டார்.
மனசாட்சி said...
அப்புறம்.. ஆசை படுவதில் தவறில்லை ஆனா அதில் ஒரு அர்த்தம் இருக்கோணும்//
ஆமாம் சாமி
பராசக்தி said...
அடி வாங்குவது நீங்கள் சரி, அடிப்பது யார் செல்லம்மாவோ?....... என்பதையும் வாசகர்களின் பார்வைக்குத் தெரிவது போல camera வில் கோணம் வையுங்கோ,//
கோணம் பார்த்து கமெராவை வச்சிட்டு அப்புறம் அதுக்காக கிடைக்கிறதை வாங்கிறதுக்கு என்ரை உடம்பு தாங்காது பரா.
பராசக்தி said...
// உங்கட செல்லம் செல்லம்மாவும் வந்து ஒருக்கால் எட்டிப் பார்க்கலாம் தானே. ஆசையாய் ஒரு வார்த்தை, அள்ளிவிடலாமே? இந்த விடயத்தில் நீங்கள் பாவம் அம்பலத்தார்//
என்ன பரா எப்படியும் என்ரை டார்லிங் செல்லம்மாவிடம் சிண்டு முடிந்துவிடவேணும் என்று முடிவுபண்ணிக்கொண்டுதான் வந்திருக்கிறியளோ?
பராசக்தி said...
ஆஹா, இதோட 86 பதிவாச்சு, இன்னும் ஒரு 14 தான் இருக்கு//
அப்பாடா இவ்வளவுக்கு பதில் எழுதவே மூன்றுநாளாச்சு.
இப்படியே வலை பூவிலையும் முகப்புத்தகத்திலையும் இருந்தா தொழில் என்ன ஆகிறது என்று இங்க பக்கத்தில ஒரு ஆள் முறாய்க்கிறா நான் எஸ்கேப்பாகிறன் Bye.
ஆசைப் படப் பட துன்பமே. அளவோடு எதையும் வைத்துக்கொள்ளலாம் . நல்ல நகைச் சுவையாகப் பதிவுகளைக் கொண்டு போகின்றீர்கள். பின்னூட்டத்தை நினைத்துப் பதிவுகளை போட்டால் கவலையே. அது எப்படி வந்து சேருகின்றது என்று அறியாமலா எதிபார்க்கின்றீர்கள். சுற்றி வந்தால்தால் சூடு பிடிக்கும். இல்லை என்றால் யாருமே கண்டுகொள்ளமாட்டார்கள்
ரொம்ப பீலிங் ஆகி விடாதேங்கோ!
அழுதிடாதேங்கோ!
இப்ப, இப்ப நூறாச்சுதுங்கோ!
வணக்கம்! மகிழ்ச்சிதானே.
மகிழ்வுடன் வாழ எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்றும் சொல்கிறார்களே.
அண்ணே வணக்கம். ஒரு சின்ன diversion. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். தவில் கலைஞர்கள் பாவிக்கும் மேளம் அடிக்கும் தடிக்கு புறம்பான சொல் உண்டா?
எனது தனி மடல் sakthis23@yahoo.com
(தவில் கலைஞர்களைப் பற்றி ஒரு பதிவு எழுதும் எண்ணம் உண்டு)
ம்ம்ம் நீங்கள் கோண்டாவில்/அளவெட்டி பக்கம் என்று தவறாக எண்ணிவிட்டேன். வேறு பதிவர்களிடம் கேட்கின்றேன்.
Post a Comment