நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

மொழுமொழு, குளுகுளு தக்காளிஸ்.... போட்ட தக்காளிசாதம்


வணக்கம் வாசகர்ஸ்.... இனிய ஞாயிறு வாழ்த்துக்கள்.

என்ன எங்க வீட்டிலிருந்து ஏதோ நல்ல வாசனையடிக்கிறதே என்று எட்டி பார்க்கிறிங்களா?

Ok Ok No problem

யன்னலை நல்லா திறந்துவைக்கிறேன்  நன்றாக பாருங்கோ.
(தக்காளிப்பழம் எப்படி மொழுமொழு குளுகுளு என்று  இருக்கணும் என்றதை காமிக்கத்தான் குஸ்பு இங்க வந்திருக்காங்க
வணக்கம் குஸ்பு மேடம் வந்ததுதான் வந்திங்க நீங்களும் கொஞ்சம் உட்கார்ந்து தக்காளிசாதம் சாப்பிட்டுபோங்க.)

என்ன அம்பலத்தார் வீட்டிற்கு வந்தவங்களை உள்ளே வரச்சொல்லாமல் வெளியே நிற்கவைத்து  யன்னலை திறந்து பேசிட்டு இருக்கிறீர் கொஞ்சங்கூட நம்ம பண்பாடு தெரியாதவனா இருக்கிறீரே." என்று திட்டாதிங்க.

நாங்க எல்லாம் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா என்று புலம்பெயர்ந்த அப்புறம் இப்ப ரொம்ப முன்னேறிவிட்டம். முன்னாடியே தகவல் தெரிவிக்காமல் திடீரென்று வந்து அழைப்புமணியை அடித்தால் கதவு திறந்து
" வாங்கோன்னா அட வாங்கோன்னா".....  என்று பாடிட்டு,
வாங்கோ உள்ளே வாங்கோ சொல்லமாட்டம்.

சொன்னா புரிஞ்சுக்கணும்! ஞாயிற்றுக்கிழமை வேறு.

We are relaxing.

So உள்ளே வரப்போறம் என அடம்பிடிக்காம அப்படியே யன்னல் ஓரமாக நின்று கொஞ்சநேரம் புதினம் பார்த்திட்டு.....

 Bye Bye சொல்லிட்டு போயிண்ணே இருக்கணும்.


இங்க பாருங்கோ என்ரை இரண்டுகையிலையும் மொழுமொழு குளுகுளு என்று சிவப்பா இருக்கே. அதுதான் நானும் செல்லம்மவும் சேர்ந்து இப்ப செஞ்சிட்டிருக்கிற மாற்றருக்கே முக்கியமானது..... இரண்டு தக்காளிப்பழம்.










அடுத்த முக்கிய மாற்றர் தக்காளிஸ் பக்கத்தில கொலவெறியோட கத்தியும் கையுமா நிக்காங்களே அவ எவ என்று என்னைய கேட்டா நான் அழுதிடுவேன் ஏன்னா நிஜமாலுமே சொல்லுறன் அவ யாரென்று எனக்கு தெரியாது வாழ்க கூகிள் அதில சுட்டவதான் இவ









அப்புறமா விருந்து சாப்பிட்டிட்டு இருக்காங்களே அவங்க எங்க வீட்டுக்கு வந்த விருந்தளிங்க கிடையாது.  சிரிச்சு, ருசிச்சு, சந்தோசமா சாப்பிட்டிட்டு இருக்காங்களே, அதை பார்த்ததுமே புரிஞ்சிருக்கணும்.
இவங்களையும் கூகிளிலை தேடிப்பிடிச்சு இங்கே கூட்டிவந்து உட்காரவச்சிருக்கேன்.

ரொம்ப நேரமாக நிற்கவச்சுட்டே பேசிட்டிருக்கேனோ. சரி சரி விடயத்துக்கு வாறன்.

என் கையில இருக்கிறது - இரண்டு தக்காளி, பொண்டாட்டி கையில அரிவா.

"யோவ் அம்பலத்தார் ரொம்பவும் அறுத்திட்டே இருந்தீர் என்றால் உம்பொண்டாட்டி கையில இருக்கிற அருவாளை புடுங்கி உம்மட மெயின் சுவிச்சை ஆப்பண்ணிடுவன்."
அதுதான் குரவழைய அறுத்திடுவன் என்று எவனோ ஒருத்தன் திட்டுறது காதில விழுகிறது.

அதுதான்யா சொல்லவாறன். இந்த தக்காளிசாதத்தை செய்வதற்கு உங்கிட்ட முக்கியமாக இருக்கவேண்டியது. கோபத்தில குதிக்காமல் நான் சொல்லுறதை பக்குவமாக கேட்கிற பொறுமை.

 அது இருக்கிறவங்க இந்தப்பக்கம் நில்லுங்கோ இல்லாதவங்க..... எஸ்கேப்.

செல்லம்மா கத்திய வச்சிட்டு சமைக்கத்தொடங்கிவிட்டா பொறுமையோட நிற்கிறவங்க பார்த்து, படிச்சு, கேட்டுக்கொண்டு அவங்க அவங்க வீடுகளிற்கு போய் தக்காளிசாதத்தை செய்து சாப்பிடுங்கோ.



 
தக்காளிசாதம் பக்கத்தில வெள்ளையா இருக்கே அது என்ன என்று கேட்கப்படாது அதுதான் முன்னாடி ஒருவாட்டி செல்லம்மா செஞ்சுகாமிச்ச தேங்கா சாதம்.


தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:
பச்சை / பாசுமதி அரிசி  2 கப்
தக்காளி ( தசைபிடிப்பான பெரிய பழங்கள்) - 400 கிராம் (பொடியாக நறுக்கியது )
பெரிய வெங்காயம் - 2 ( நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 ( நீளமாக வெட்டியது )
இஞ்சி - ஒரு  துண்டு
பூண்டு - 5 பல்
 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் ( விரும்பினால் கூடிய சுவைக்கு ) 1 கப்
 
எண்ணெய் - 50 கிராம்
நெய் - 50 கிராம்
பட்டை/ கறுவா - 2 துண்டு
கராம்பு -  6
ஏலக்காய் - 6
கடுகு -சிறிது
கடலைப்பருப்பு -சிறிது
பிரிஞ்சி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கு

செய்முறை :

 அரிசியை  1 மணி நேரம் ஊற வைக்கவும் . தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு அரிசியை எடுத்து வைக்கவும் . இப்படி செய்தால் தனி தனி சாதமாக வரும் .

 இஞ்சி, பூண்டு ,உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.  ஒரு கடாயில்(pan ) எண்ணெய் ஊற்றி  கடுகு, கடலைப்பருப்பு  தாளித்து
வெங்காயம் , பச்சை மிளகாயை (சற்று மினுமினுப்பாக)வதங்கியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். ( நெயில் வதக்கினால்   கூடிய சுவை )  இவற்றுடன் சிறிதாக நறுக்கிய தக்காளி  சேர்த்து   (தக்காளி மணம்  போகும்வரை) நன்றாக வதக்கவும் . இவற்றுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள்  சேர்த்து  நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும் .   தேவையான தண்ணீர் ஊற்றி  அரிசியை ரைஸ் cooker இல் அவியவிடவும்  . அல்லது கனமான பாத்திரத்தில் கொதிதநீரில் அரிசியை போட்டு அவியவிடவும்   . தேங்காய்ப்பால் சேர்க்க விரும்பியவர்கள் தண்ணீரை குறைத்து  அளவாக தேங்காய்ப்பால் சேர்த்து அவியவிடவும் . அரை  அவியல் பதத்தில் குக்கரை / பாத்திரத்தை திறந்து  வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அவியவிடவும் .
பதமாக வெந்து இருக்கும்  தக்காளி சாதத்தில்  கடைசியில் கொஞ்சம் நெய்யும் ஊற்றி கிளறவும் .
சுவையான
கம கம மசாலா வாசனையுடன் தக்காளி சாதம்  ரெடி.


52 comments:

முத்தரசு said...

//தக்காளிப்பழம் எப்படி மொழுமொழு குளுகுளு என்று இருக்கணும் என்றதை காமிக்கத்தான் குஸ்பு இங்க வந்திருக்காங்க//

ஆப்பிளை தக்காளி என்று சொன்னமைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்

கூடல் பாலா said...

இது வரை நான் சமைக்கவேண்டிய நிலை வரவில்லை.....

முத்தரசு said...

அட, தக்காளி சாதம் இப்புடி...தான் சமைக்கணுமா? சர்தான்

காட்டான் said...

வணக்கம் மச்சான் என்ன நடந்தது உங்களுக்கு? சமையல் குறிப்போட கிளம்பீட்டிங்க? குஷ்பு படத்த பெரிசா போட்டா என்ன குறைஞ்சோ போடுவீங்க..;-))

ஹேமா said...

அம்பலம் ஐயா அவர்களே குஷ்புவை இட்லி எண்டெல்லோ சொல்றவை.ஏன் தக்காளி சாதத்தோட ஒப்பிட்டுப் பாத்தனீங்கள்.ப்ளீஸ் செல்லம்மா மாமியைச் சந்திக்கேலுமோ !

பாருங்கோ காட்டான் மாமான்ர ஆசையை.குஷ்புன்ர படம் இந்தளவு காணாதாம்.இருக்கிற ஒற்றை உடுப்பும் காத்தில பறக்கப்போகுது !

ஹேமா said...

மணியத்தார் தேத்தண்ணி.நீங்கள் சோறு.ஏதாவது வித்தியாசமா சமைச்சுக் காட்டுங்கோ !

அம்பலத்தார் said...

மனசாட்சி சைட்...
//ஆப்பிளை தக்காளி என்று சொன்னமைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்//
அடடா மனச்சாட்சி நீங்க குஸ்பு ரசிகரா? தெரியாம சொல்லிப்புட்டன் மன்னிச்சுங்க. ஆப்பிள்தான்.

அம்பலத்தார் said...

koodal bala said...
//இது வரை நான் சமைக்கவேண்டிய நிலை வரவில்லை.....//
கல்யாணமாகி அம்மாமெஸ்சை விட்டு வெளியே வந்தும் நீங்க சமைக்கவேண்டிய சந்தர்ப்பம் வரல்லையின்னா, ஆகா கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கு. உங்க ஆத்துக்காரி சொல்ல சொன்னதைத்தான் பின்னூட்டத்தில எழுதினிங்களா?

அம்பலத்தார் said...

மனசாட்சி said...

//அட, தக்காளி சாதம் இப்புடி...தான் சமைக்கணுமா? சர்தான்//
இப்படி சமைச்சிங்கன்னா மணம், குணம், காரத்தோட சாப்பிட ஒரு கிக்கு ஏறும்.

அம்பலத்தார் said...

காட்டான் said...

//வணக்கம் மச்சான் என்ன நடந்தது உங்களுக்கு? சமையல் குறிப்போட கிளம்பீட்டிங்க?//
என்ன மச்சான் இப்படி கேட்டுப்புட்டீக. உங்க அக்கா கைவண்ணத்தில தினமும் யாம் பெறும் இன்பம் இவ்வையகமும் பெறட்டுமே என்று இடைக்கிட செல்லம்மா கையை காலை பிடித்து எதாவது செய்முறையை உருவிட்டு வாறனான். ஹீ ஹீ

அம்பலத்தார் said...

காட்டான் said...
// குஷ்பு படத்த பெரிசா போட்டா என்ன குறைஞ்சோ போடுவீங்க..;-))//
அவ ஆளே...... பெரிசு அப்புறம் படத்தைவேறு பெரிசா போட்டால்.....

முத்தரசு said...

அம்பலத்தார் said...
மனசாட்சி சைட்...
//ஆப்பிளை தக்காளி என்று சொன்னமைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்//
அடடா மனச்சாட்சி நீங்க குஸ்பு ரசிகரா? தெரியாம சொல்லிப்புட்டன் மன்னிச்சுங்க. ஆப்பிள்தான்.

ஹே ஹே ஹே செம காமடி போங்கோ

அம்பலத்தார் said...

ஹேமா said...
//அம்பலம் ஐயா அவர்களே குஷ்புவை இட்லி எண்டெல்லோ சொல்றவை.ஏன் தக்காளி சாதத்தோட ஒப்பிட்டுப் பாத்தனீங்கள்.ப்ளீஸ் செல்லம்மா மாமியைச் சந்திக்கேலுமோ !//
ஹேமா, தப்பாக புரிந்துகொண்டதற்கு வன்மையான ஆட்சேபம் தெரிவிக்கிறேன். ஒப்பிடல்
only with தக்காளி not with தக்காளி சாதம்

//பாருங்கோ காட்டான் மாமான்ர ஆசையை.குஷ்புன்ர படம் இந்தளவு காணாதாம்.இருக்கிற ஒற்றை உடுப்பும் காத்தில பறக்கப்போகுது !//
வெள்ளைக்காரங்க one piece, two piece உடுப்பில வந்தா ரசிப்பிங்க என்ரை மச்சான் single piece கோவணத்தில் நின்றாமட்டும் கிண்டல் பண்ணுறிங்க. மச்சான் எங்கட பாரம்பரிய கலாச்சாரத்தை காப்பாற்றுறார்.

அம்பலத்தார் said...

ஹேமா said...
//மணியத்தார் தேத்தண்ணி.நீங்கள் சோறு.ஏதாவது வித்தியாசமா சமைச்சுக் காட்டுங்கோ ! //

வித்தியாசமா?

தேத்தண்ணி தக்காளி சாதம்

திரவம் - திண்மம்
ஊற்றுறது கப்பில்-போடுறது தட்டில்
குடிக்கிறது - சாப்பிடுறது.
இனிப்பு - மசாலா சுவை
தாகத்துக்கு - பசிக்கு-----

இத்தனை வித்தியாசம் இருக்கு இதைவிட வித்தியாசம் தேவையோ ஹி ஹி

தனிமரம் said...

அம்பலத்தார் உது என்ன தக்காளி சாதம் குஸ்பூ வந்ததும் நானும் இட்லி என்று ஓடிவந்தன் சோறா ஐயா வண்டி வைக்கும் என் பொட்டாட்டி தள்ளிவைக்கும்.ஹீ ஹீ சோற்றைச் சொன்னேன்! அவ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

சண்டே என்றால் நாங்களும் பிளாக் பக்கம் வரதில்லை வீட்டுக்காரி கத்தியோட நிற்கின்றா  சீனுவாக்காரி போல வீடு ஊத்தை ,சமையல் அறை ஊத்தை என்று ஹீ ஹீ

தனிமரம் said...

ஒரு டவுட்டு அம்பலத்தார் .என்ஜினியர் அம்பலத்தார் என்று பொய் சொல்லி செல்லம்மாக்காவின் தகப்பனிடம் சீதனம் கோடியில் வாங்கினதுக்கு இப்படி சமையல்காரன் ஆகனும் என்று தலைவிதி ஆகிவிட்டதே என்று எப்போதாவது புலம்பியதுண்டா???ஹீ ஹீ

தனிமரம் said...

குஸ்பூ இப்படி சின்னப்படம் போட்டால் சரியோ கோயில் கட்டினவங்கள் இருக்கும் தேசத்தில் கோயில் கோபுரம் போல பெரிய முழுப்படம் இல்லையா போடனும் இதுக்கு நாறின தக்காளி அடிக்கனும்.ஹீ ஹீ

தனிமரம் said...

சரி உங்க சமையலை விரைவில் சமைத்துப்பார்க்கின்றேன் பகிர்விற்கு நன்றி.செல்லம்மாக்கா சமையல் சாப்பிட்டுப்பார்ப்போம் விரைவில்.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//அம்பலத்தார் உது என்ன தக்காளி சாதம் குஸ்பூ வந்ததும் நானும் இட்லி என்று ஓடிவந்தன் சோறா ஐயா வண்டி வைக்கும் என் பொட்டாட்டி தள்ளிவைக்கும்.ஹீ ஹீ சோற்றைச் சொன்னேன்! அவ்வ்வ்வ்வ்//
குஸ்பு ரசிகருகள் நிறைய இருக்கிறியள். இன்றைக்குத்தான் விசயம் வெளியில தெரியவந்திருக்கு.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//வீட்டுக்காரி கத்தியோட நிற்கின்றா சீனுவாக்காரி போல வீடு ஊத்தை ,சமையல் அறை ஊத்தை என்று ஹீ ஹீ//
நேசன் சும்மா இப்படி புலம்பிக்கொண்டு நிற்காதையுங்கோ! என்ரை தங்கை சொன்னால் சரியாகத்தன் இருக்கும். வடிவாக கூட்டி துடைத்து சுத்தம் செய்துகொடுங்கோ.

அம்பலத்தார் said...

மனசாட்சி said...

//ஹே ஹே ஹே செம காமடி போங்கோ//
உங்க வீட்டையும் காலையில எட்டிப்பார்த்தன் ஒரே காமெடியாக இருந்தது.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//ஒரு டவுட்டு அம்பலத்தார் .என்ஜினியர் அம்பலத்தார் என்று பொய் சொல்லி செல்லம்மாக்காவின் தகப்பனிடம் சீதனம் கோடியில் வாங்கினதுக்கு இப்படி சமையல்காரன் ஆகனும் என்று தலைவிதி ஆகிவிட்டதே என்று எப்போதாவது புலம்பியதுண்டா???ஹீ ஹீ//

வயிற்றெரிச்சலை ஏத்தாதையுங்கோ நேசன். லவ் பண்ணேக்கை பொய் சொல்லிக்கட்டினது உண்மைதான். ஆனால் கோடியள் ஒன்றும் கிடைக்கேல்லை செல்லம்மா வீட்டுக்கோடியிலை இருக்க ஒரு இடம் கிடைச்சுது அவ்வளவுதான்.நான் இப்ப சொன்ன விசயத்தை செல்லம்மாவிடம் போட்டுக்கொடுத்து வீட்டுக்கோடியுக்கை ஒதுங்க கிடைத்த அந்த சின்ன இடத்துக்கும் வேடுவச்சிடாதையுங்கோ.

Yoga.S. said...

வணக்கம் அம்பலத்தார்!////தக்காளி ( தசைபிடிப்பான பெரிய பழங்கள்)///அத எப்புடிக் கண்டு புடிக்கிறது?நசிச்சுப் பாத்தா விக்கிறவன் முகரையப் பேத்துப்போடுவன்.மார்க்கெற்றில சில கடைக்காறர் தொடவே(தக்காளிய)விடமாட்டினம்,ஹி!ஹி!ஹி!!!!!

Yoga.S. said...

நன்றி அம்பலத்தார்!எப்புடியோ எங்கட திறமைய ஐரோப்பாவில(உலகம் முழுக்க?) கொடிகட்டிப் பறக்க விட்டிட்டீங்கள்.(ஆணாதிக்கவாதி எண்டு பேர் வந்தாலும் பறுவாயில்லை)

HOTLINKSIN.com திரட்டி said...

சூப்பர் சமையல்....


உங்கள் பதிவுகளை என்னிடம் பதிவு செய்யுங்கள்... இன்னும் ஏராளமான வாசகர்கள் உங்கள் பிளாக்கிற்கு வருவார்கள்...

தனிமரம் said...

நன்றி இந்த தனிமரத்துக்கும் உங்கள் வலையில் ஒரு இடம் தந்ததிற்கு[ மனசில் எப்போதும் இடம் உண்டு நான் அறிவேன்[

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//குஸ்பூ இப்படி சின்னப்படம் போட்டால் சரியோ கோயில் கட்டினவங்கள் இருக்கும் தேசத்தில் கோயில் கோபுரம் போல பெரிய முழுப்படம் இல்லையா போடனும் இதுக்கு நாறின தக்காளி அடிக்கனும்.ஹீ ஹீ//
என்ன நாறின தக்காளி அடிக்கப்போறியளோ. பொறுங்கோ பொறுங்கோ குஸ்புவுக்கு பின்னாலை அலையிற விசயத்தை தங்கைச்சியிடம் போட்டுக்கொடுக்காமல் விடமாட்டன் நேசன்.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//...செல்லம்மாக்கா சமையல் சாப்பிட்டுப்பார்ப்போம் விரைவில்.//
ஆமா விரைவில் சந்திப்போம்

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...
//அத எப்புடிக் கண்டு புடிக்கிறது?நசிச்சுப் பாத்தா விக்கிறவன் முகரையப் பேத்துப்போடுவன்.மார்க்கெற்றில சில கடைக்காறர் தொடவே(தக்காளிய)விடமாட்டினம்,ஹி!ஹி!ஹி//

ஹா ஹா யோகா அனுபவம் பேசுதுபோல. பதிவெழுதாமல் பின்னூட்டம் எழுதியே கலக்குகிற ஆட்கள் வரிசையிலை உங்களுக்கும் ஒரு தனி இடம் உண்டு.

Asiya Omar said...

சூப்பரான தக்காளி சாதம்.செய்முறையே டேஸ்ட்டை சொல்லுது.

Unknown said...

தக்காளி சாதம் எனக்கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன் குஷ்பு சாதம் என்று அழைக்கவும்...ஹிஹி!

திண்டுக்கல் தனபாலன் said...

தக்காளி சாதம் சூப்பர் !

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...
//நன்றி அம்பலத்தார்!எப்புடியோ எங்கட திறமைய ஐரோப்பாவில(உலகம் முழுக்க?) கொடிகட்டிப் பறக்க விட்டிட்டீங்கள்.(ஆணாதிக்கவாதி எண்டு பேர் வந்தாலும் பறுவாயில்லை)//
ஆகா, என்ன யோகா ஹேமா, அதிரா, ஆமினா....என்று தாய்க்குலங்கள் எல்லாரிடமும் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிற யோசனையோ?

அம்பலத்தார் said...

HOTLINKSIN.com திரட்டி said...

உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//நன்றி இந்த தனிமரத்துக்கும் உங்கள் வலையில் ஒரு இடம் தந்ததிற்கு[ மனசில் எப்போதும் இடம் உண்டு நான் அறிவேன்//
ஆமா என்றும் எப்பொழுதும் எனது அன்பு இருக்கும் நேசன்

அம்பலத்தார் said...

Asiya Omar said...
//சூப்பரான தக்காளி சாதம்.செய்முறையே டேஸ்ட்டை சொல்லுது//
ஹி ஹி எல்லாம் என் செல்லம்மாவின் கைவண்ணம்.

அம்பலத்தார் said...

வீடு K.S.சுரேஸ்குமார் said...
//தக்காளி சாதம் எனக்கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன் குஷ்பு சாதம் என்று அழைக்கவும்... ஹிஹி!//
ஒகோ சுரேஸ் நீங்களும் குஸ்பு ரசிகரோ. கோவிச்சுக்காதையுங்கோ இனிமேல் குஸ்பு சாதம் என்றே சொல்கிறேன்.

அம்பலத்தார் said...

திண்டுக்கல் தனபாலன் said...

// தக்காளி சாதம் சூப்பர் !//
நன்றி தனபாலன். அடேங்கப்பா திண்டுக்கல்வரை எங்க வீட்டு தக்காளிசாத வாசனை வீசியிருக்கே.

ஹேமா said...

பாருங்கோ பாருங்கோ என்னமாதிரி வித்தியாசம் கண்டுபிடிக்கிறார் எண்டு.இதையெல்லாம் ஆரும் கண்டுகொள்ள(ல்ல)மாட்டீங்களோ !

அப்பா யோகா....குஷ்புவை நினைக்கிறதுக்காகவே வெளில சொல்லமுடியாம தாக்காளியைத் தொட்டு வெட்டிச் சோறு சமைச்சிருப்பார்.நீங்க வேற ஆணாதிக்கம் எண்டு உசுப்பேத்துறீங்கள் !

ராஜி said...

தக்காளி சாதம் இப்படித்தான் செய்யனுமா? கத்துக்கிட்டேன் செஞ்சு பார்க்குறேன் பகிர்வுக்கு நன்றி

Yoga.S. said...

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...
//நன்றி அம்பலத்தார்!எப்புடியோ எங்கட திறமைய ஐரோப்பாவில(உலகம் முழுக்க?) கொடிகட்டிப் பறக்க விட்டிட்டீங்கள்.(ஆணாதிக்கவாதி எண்டு பேர் வந்தாலும் பறுவாயில்லை)//
ஆகா, என்ன யோகா ஹேமா, அதிரா, ஆமினா....என்று தாய்க்குலங்கள் எல்லாரிடமும் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிற யோசனையோ?/////ஏதோ என்னால முடிஞ்சா சின்ன உதவி!இதுக்குப்போய் பாராட்டுவிழா,கிழா வைக்கிறனெண்டு ஹோல்;கீல் புக் பண்ணிப்போடாதயுங்கோ,ஹ!ஹ!ஹா!!!!!

Anonymous said...

குஷ்பு = இட்லி <> தக்காளி ...அம்பலத்தாரே -:)

தக்காளி சாதம்...பிரியாணி போல ஆயிருமோ சகோதரி...

Jaleela Kamal said...

tomato biriyani super

அம்பலத்தார் said...

ஹேமா சைட்...
//அப்பா யோகா....குஷ்புவை நினைக்கிறதுக்காகவே வெளில சொல்லமுடியாம தாக்காளியைத் தொட்டு வெட்டிச் சோறு சமைச்சிருப்பார்...//
நீங்க இப்படியெல்லாம் சொன்னாலும் யோகா பயப்படமாட்டார். அவர் சிங்கிளாவந்த சிங்கமாக்கும்

அம்பலத்தார் said...

ராஜி said...

//தக்காளி சாதம் இப்படித்தான் செய்யனுமா? கத்துக்கிட்டேன் செஞ்சு பார்க்குறேன்....//
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. Ok OK செஞ்சு சாப்பிட்டிட்டு வாங்க

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...
//...இதுக்குப்போய் பாராட்டுவிழா,கிழா வைக்கிறனெண்டு ஹோல்;கீல் புக் பண்ணிப்போடாதயுங்கோ,ஹ!ஹ!ஹா!!!!!//
என்ன யோகா எல்லா ஏற்பாடும் செதப்புறம் இப்படி சுன்னா எப்படி.?

அம்பலத்தார் said...

ரெவெரி said..
//தக்காளி சாதம்...பிரியாணி போல ஆயிருமோ சகோதரி..//
ஹி ஹி கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்களே ரேவெரி

அம்பலத்தார் said...

Jaleela Kamal said...
tomato biriyani super
வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி சகோதரி

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) சமையல் குறிப்புமோ? கலக்கிட்டேள் போங்கோ... இத் தலைப்பு இப்போதான் கண்ணில பட்டுது, தேங்காய் சாதம் ஒருநாளைக்குச் செய்யத்தான் வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

அம்பலத்தார் said...

athira said...
//தேங்காய் சாதம் ஒருநாளைக்குச் செய்யத்தான் வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்:))//
அதிரா செய்யுங்க செய்து பார்த்திடுங்கோ. ஆனால் உங்க ஆத்துக்காரரையும் பக்கத்தில வச்சிட்டே செஞ்சாத்தான் ரேஸ்ற்று ஜாஸ்தி மறந்திட்டதையுங்கோ.

எம்.ஞானசேகரன் said...

தக்காளிக்கும் குஷ்பூவிற்கும் என்ன சம்பந்தம் அம்பலத்தாரே?