தமிழீழத்தில் என்றுமே நிகழ்ந்திராத சில மணி நேரத்தில் வரலாறுகாணாத உயிர், உடமை பேரழிவுளை ஏற்படுத்தி மிகப்பெரும் அழிவுகளைத் தந்த சுனாமி பேரலை ஏற்பட்டு இன்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்
வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Sunday
மறக்கப்படும் ஆழிப்பேரலை அவலங்கள்
தமிழீழத்தில் என்றுமே நிகழ்ந்திராத சில மணி நேரத்தில் வரலாறுகாணாத உயிர், உடமை பேரழிவுளை ஏற்படுத்தி மிகப்பெரும் அழிவுகளைத் தந்த சுனாமி பேரலை ஏற்பட்டு இன்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
Thursday
என்னை செதுக்கியவள்
"ஓ! உங்கட மனுசி வலு கெட்டிக்காரிதானே அப்ப அவவே உங்கட கப்பலுக்குக் கப்டன்." என்று நான் வழமைபோலவே யோசிக்காமல் டக் என்று கேட்டன்......
"சீ! நல்ல கதையாக்கிடக்கு" .... அது வந்து எப்பவும் ஆம்பிளையள்தான் கப்டனாக இருக்கவேணும் என்றார் அவசர அவசரமாக.
Friday
சினிக்கவிஞரின் இலக்கியத்திருட்டுக்கள்.
அந்த ரசிகனின் ரசனைக்கேற்ப சினிமாப் பாடல்களை சிங்காரித்துக் கொடுக்கவே பாடலாசிரியரும்,இசையமைப்பாளரும் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள். இலக்கியத் துளிகளுக்கு எளிமைவண்ணம் பூசி பாமரனின் இதயத்தில் இடம்பிடிப்பதில் கவியரசு கண்ணதாசனும் வைரமுத்துவும் கைதேர்ந்தவர்களல்லவா?
ஐயகோ! வார்த்தைகளில் இதயத்தை வருடும் கலையை இவர்கள் எங்குதான் கற்றனரோ? அழகு தமிழ் அருவியாய்க் காது வழிப்பாய்ந்து நம் இதயத்தை நனைக்கும் மாயம்தான் என்ன?
"வாளொற்றிப் புற்கென்ற கண்ணும்
அவர் சென்ற நாளொற்றி தேய்ந்தவிரல்"என்ற
வள்ளுவரின் வரிகள் புரிந்ததோ இல்லையோ
"மாலை சூடும் தேதி எண்ணிப் பத்து விரலும் தேயும்"எனும் (பாலைவனச் சோலை) கவிஞரின் தேனாய் ஒழுகும் வரிகள் நம் நெஞ்சை என்னமாய்க் கொள்ளை கொண்டது.
Monday
ஈழவயல்.....ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்ப்ச்சிட்டாங்க...
ஈழவயல்.....செல்ல இங்கே அமுக்கவும்.
நெற்றிலை முழுக்க ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க! ஈழவயலிலை பதிவுகளின் அறுவடை ஆரம்பிச்சிடிச்சு என்பதுதான் பரபரப்பான செய்தியா பேசப்பட்டிட்டு இருக்கே என்று நானும் ஆகா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன் என்று போய்ப் பார்த்தால் உண்மையிலேயே நல்லபடியாகத்தான் ஆரம்பிச்சிருக்காங்க. நீங்களும் அங்கு போய்த்தான் பாருங்களேன்.
இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்! இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயலை வரவேற்று கரங் கொடுத்தால் நீங்கள் ஓர் வாசகர்! விரல் கொண்டு எம் படைப்புக்கள் மெருகேறிட மென்மையாக வருடினால் நீங்கள் ஓர் விமர்சகர்!
வாருங்கள் நட்புக்களே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்
ஈழவயல் குழுவினரில் ஓருவனாக
நேசமுடன் அம்பலத்தார்

இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்! இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயலை வரவேற்று கரங் கொடுத்தால் நீங்கள் ஓர் வாசகர்! விரல் கொண்டு எம் படைப்புக்கள் மெருகேறிட மென்மையாக வருடினால் நீங்கள் ஓர் விமர்சகர்!
வாருங்கள் நட்புக்களே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்
ஈழவயல் குழுவினரில் ஓருவனாக
நேசமுடன் அம்பலத்தார்
Wednesday
Subscribe to:
Posts (Atom)