வேர்களைத் தேடி............
ஈழத்துப் பரணியாய் இப்புவி உள்ளவரை நிலைத்திருக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே நம் கனவும். இனி..
அன்றொருநாள் வேர்களைத் தேட ஆரம்பித்தபோது சொன்ன அந்த எல்லைப்படை வீரனது கதை ஞபகமிருக்கும் என நினைக்கிறேன்.
களமாடச் சென்ற அந்த குடும்பத் தலைவன் எதிரிகளை புறமுதுகிட்டுப் பழைய நிலைகளுக்கே விரட்டியடித்த வெற்றிக் களிப்புடனும்இ தன் இல்லாளும் சிறிய வாரிசுகள் இரண்டும் எவ்வாறு உள்ளனரோ? என்ற ஏக்கத்துடனும் வீடு நோக்கி நடக்கின்றான். மிகவும் கடினமான சூழ்சிலைகளில் நின்று ஊன் உறக்கமின்றி போரிட்ட களைப்பை அவன் தளர்ந்த நடை சொல்லாமல் சொல்கிறது.
தலைவாசலில் தந்தையைக் கண்டு அப்பா என ஓடிவரும் தனையனை அள்ளி முத்தமிடுகிறான் தலைவன். அந்த இனிய கணத்தையும் தாண்டி அவன் மனதில் என்றுதான் இந்தப் போர்ச் சூழல் தணிந்து சுதந்திரக்காற்று வீசுமோ என்ற ஏக்கமும் பிரிவின் சலிப்பும் ஒருங்கே தோன்ற அவனையும் மீறி நீண்டதொரு பெரு மூச்சு வருகிறது.
தலைவன் வரவால் பூரிப்பு அடைந்த தலைவியின் மனமோ 8 5வனது உள்ளக் குமுறலை உணர்ந்து மறுபுறம் தவித்துப்போனது.
மகனை அள்ளி முகரும் கணவன் அருகே சென்று அந்த மௌனமான வேளையில் மெதுவாக பின்புறாய் அவனைத் தழுவி தன் ஸ்பரிசத்தால் தலைவனது மனதின் காயங்களுக்கு ஒத்தடமிடுகிறாள் தலைவி. இந்தக் காட்சியை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
"கண்டிசின் பாண பண்புஉடைத்து அம்ம
மாலை விரிந்த பசுவெண் நிலவின்
குறுந்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇப்
புதல்வன் தழீஇயினன் விறலவன்
புதல்வன் தாய் அவன் புறம்கவைஇ யினனே."
அந்தி வந்த நேரமதில் நன்கு பரந்த இனிய நுிலவின் ஒளியில் குறுகிய கால்களைக் கொண்ட கட்டிலில் நறுமணம் வீசும் மலர்களைப் பரப்பி அதில் பள்ளி கொள்ளும் யானையின் பெருமூச்சை போன்றதொரு பெருமூச்சை விட்டவாறு வெற்றி மிகு தலைவன் தன் புதல்வனை தழுவி மகிழ்ந்தான். இதனைக் கண்ட தலைவியோ பின்புறாய் தலைவனின் முத1கைத் தழுவி நின்றாள். இது நல்ல பண்புடைய செயலாகும் என்பதாக அமையும் இந்தக குறுந்தொகைப் பாடல் இன்றைய நம் தலைவனுக்கும் தலைவியுக்குமாய் எழுதப்பட்டதாய் அமைந்த மாயம் கண்டீரோ?
இனி குறுந்தொகையின்பால் சற்றே பார்வையை திருப்பினால் இதுவும் நம் முன்னோரின் காதல் நயத்தையும் வீரத்தையும் குறிஞ்சி மருதம் நெய்தல பாலை என நால்வகை நிலங்களின் நயம்படு வாழ்க்கை முறைகளையும் நமக்கெல்லாம் பறைசாற்றி நிற்கும் இனிய கவிநயம்மிக்க 401 பாடல்களின் தொகுப்பாகும்.
இப்பாடல்களையும் கோவூர்கிழார்இ ஒளவையார் பரணர் நக்கீரன் கபிலர் சீதலைச்சாத்தனார் போன்ற புலவர்களுடன் வேறு பல புலவர்களும் பாடியுள்ளார்கள். இங்கு சீதலைச்சாத்தனார் பற்றிய குறிப்பொன்று ஞாபகத்துக்கு வந்தது........ அவர் தான் பாடும் கவிகளில் தவறு ஏற்படும்போதெல்லாம் தன் தலையில் எழுத்தாணியால் குத்தி க ள்வாராம். இதனால் சாத்தனாருடைய தலையில் எப்பொழுதும் சீழ்படிந்த புண்கள் காணப்படுமாம். இது சீழ் தலை சாத்தனார் என்ற அடைமொழியை தந்து காலப்போக்கில் அதுவும் மருவி சீதலைச்சாத்தனார் ஆனாராம். இத்துடன் சிறைக்குடி ஆந்தையார் குப்பைக்கோழியார் வெள்ளி வீதியார் என வேடிக்கையான பெயர்களைக் கொண்ட புலவர் பலரும் குறுந்தொகைப் பாடல்களை பாடியுள்ளனர். புலவர் பட்டியலிலுள்ள மற்றுமொருவர் பெயர் நெஞ்சைத் தொட்டது. அவர்தான் ஈழத்துப் பூதன் தேவனார். இவர் ஒரு ஈழத்துக் கவியோ என்ற சந்தேகம் எழுந்தபோதும் அவர்தம் விபரங்கள் கிடைக்கப் பெறாதது வேதனையே.

No comments:
Post a Comment