நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Saturday

மாவீரர் மாதத்தில் நாமொரு உறுதிகொள்வோம்.


தாயக மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் அவலங்களை வியாபாரமாக்குபவர்கள் மத்தியில் அபூர்வமாக இப்படியும் சிலர்.




 அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல் 

ஈழ வியாபாரி விகடனுக்காக ஈழத்திலிருந்து சில ஆதாரங்கள்  

விபரமறிய மேலே நீலக்கட்டத்தில் உள்ள தலைப்புக்களில் கிளிக்கவும்



தாயகச்செய்திகளையும் முன்னாள்போராளிகளின் இன்றைய வாழ்க்கையையும் வெளிக்கொண்டுவாறம் என்று சொல்லிக்கொண்டு சிறுவிடயங்களையும் கற்பனையையும், இல்லாததையும் சேர்த்து எழுதிப் பரபரப்புச்செய்தியாக்கி தங்கள் இணையத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் வாசகர் வருகையை அதிகரிக்கவும், தாங்கள் பெரிய மேதாவிகள் என்று காட்டிக்கொள்ள முனைபவர்கள்மத்தியில்  நேசக்கரம் சாந்தி, மதியோடை மதிசுதா  போன்றவர்கள் செய்துவரும் ஆக்கபூர்வமான பணிகள் பெரிதாக வெளியுலகிற்கு தெரியாமல் இருப்பது வேதனையே. மதி சுதா & சாந்தி உங்க மனிதாபிமானமிக்க சேவைக்குத் தலைவணங்குகிறேன்.

 


வெற்றுப்பேச்சுப் பேசிக்கொண்டிருப்பதைவிடுத்து, தாயகத்தில் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்காக உண்மையாகவும், நேர்மையுடனும் குரல்கொடுப்பதுடன் அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கும், அவர்கள் தங்கள் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குரிய வருவாய்களை பெற்றுக்கொள்வதற்குமான உதவிகளைச் செய்வோம்.


 

போலிமுகங்களைக்காட்டி நல்லவர்கள் பெரியவர்கள் மேதாவிகள் என்று வேசம்போடுவதை விடுத்து மனிதாபிமானம்மிக்கவர்களாக மாறுவோம்.
  போரினால் பாதிக்கப்பட்ட எம்முறவுகளின் வாழ்வில் ஒளிபிறக்க வழியமைப்போமென மாவீரர் மாதத்தில் நாமொரு உறுதிகொள்வோம்.



நேசமுடன் அம்பலத்தார்

படங்கள் நன்றியுடன் கூகிள் தேடலில் பெற்றவை

5 comments:

மகேந்திரன் said...

ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உறுதிமொழிகள் அய்யா...
பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத் தேவைகளை
நிறைவேற்ற முயல்வதே நமது தலையாய கடமை...
அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்வது
நயவஞ்சகத் தனமே...

Anonymous said...

நிச்சயமாய் முதலில் நாம் செய்ய வேண்டிய செயல் பாதிக்கப்பட்டவர்கள் துயரங்களைத் துடைப்பதே. இந்த மாவீரர் நாளிலாவது சபதமெடுத்து அவர்கள் துயரங்களைக் களைவோம்.

தனிமரம் said...

வணக்கம் ஐயா நலமா! இந்த அரசியல் வியாபாரம் நாலாவது தூணான பத்திரிக்கையும் தரம் தாழ்ந்த நிலையை என்ன சொல்வது அப்பாவிகள் வாழ்வில் வெளிச்சம் வரட்டும் முதலில்!

Anonymous said...

மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

kowsy said...

உடன் உதவி செய்தவர்களை எதிர்த்து இப்போது பெரிதாகப் படம் போடுபவர்கள் அதிகம். இன்றைய நாள் நல்ல செய்தி ஒன்று தந்தீர்கள் . போலி முகங்கள் அடையாளம் காட்டப் பட்டு உதவிகள் தொடர வேண்டும்