நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

ஈழத்தில் இந்திய அமைதிப் படை செய்த கொடுமைகளும் ஜெயமோகனின் அரைவேக்காட்டுப் பிசத்தல்களும்


அண்மையில் ஜெயமோகன் எழுதிய இரு பதிவுகள் என்னை இதை எழுதத்தூண்டியது. முதலாவது பதிவு இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை மனித நேய சேவைகளே செய்தது என்ற கருத்தை விதைக்க எழுதப்பட்டது. இதற்கு சாட்சியாக ஜெயமோகன் அமைதிகாக்கும் படையில் இருந்த சிப்பாய்களின் கூற்றையே ஆதாரமாக வைக்கிறார்.

இலங்கை அரசாங்கம் தங்கள் இராணுவம் செய்த மனித உரிமை மீறல்களை சர்வதேச பொறிமுறையொன்றின் மூலம் ஆராய வேண்டியதில்லை தாங்களே விசாரணைக்கமிசன் வைத்து விசாரிக்கிறோம் என்பது போன்ற ஒரு செயலே இது. குற்றம் இழைத்ததாக கூறப்படும் அமைதிப்படையை சேர்ந்த சிப்பாய்களே சொன்னதை வைத்து தீர்மானிப்பது.
ஐயா ஜெயமோகன் அவர்களே,
 
உங்கள்மீதும் உங்கள் எழுத்துக்கள்மீதும்  எனக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது.
சமுதாய அக்கறை கொண்ட ஒருத்தராக கருதப்படும் நீங்கள் ஒரு கருத்தை எழுதுவதற்குமுன் அதன் நம்பகத்தன்மையை, உண்மையை ஆராயாமல் பதிவுசெய்திருப்பது மிகவும் வேதனை தருகிறது. உங்களது கருத்துக்களில் பெரும் நம்பிக்கைகொண்டிருந்த ஈழத்தமிழர் பலரதும் பார்வையில் உங்களைப்பற்றிய நல்லதொரு எண்ணத்தை தவிடுபொடியாக்கிவிட்டீர்கள்.

 
இவரது பதிவை படித்த பலரும் பதிவுலகில் தமது ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த பதிவில் மழுப்பலான மன்னிப்புடன் தொடங்கி பின்வருமாறு முடிக்கிறார்.

//மனிதனைப்பற்றி, இன்றைய இந்தியாவைப்பற்றி மேலும் சங்கடமும் அவமானமும் கொள்பவனாக ஆக்குகிறது உங்கள் கடிதம்.ஆனாலும் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நெருங்கிவரவேண்டும் என்றே சொல்வேன்.
அத்தனை ரத்தத்தையும் மறந்து மெல்லமெல்ல அவர்கள் இந்தியாவை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இனிமேலும் வரலாற்றில் வேறு வழியே இல்லை. இந்தியாவின் அதிகாரபீடமோ ராணுவமோ அல்ல இந்தியா.//

ஈழத்தமிழர் இந்தியவை மன்னிக்கவேண்டும் என ஆலோசனைகூறும் அவரால் ஏன் இந்திய அரசே ஈழத்தமிழருக்கு நீங்கள் செய்த அநியாயங்களிற்கு பிராய்ச்சித்தமாக அவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்க வழிசெய்யுங்கள் எனக் கேட்க முடியவில்லை.
 
இந்திய அமைதிகாக்கும்படை ஈழத்தமிழருக்கு செய்த கொடுமைகளுக்கு இந்திய இராணுவம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் என ஜெயமோகனால் ஏன் கூறமுடியவில்லை.
 1975 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டக்காலத்தில் இந்தியாவில் நடந்த கொடுமைகளுக்கு      1980ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி மன்னிப்புக் கேட்டார்.

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்கள் படுகொலை நிகழ்ச்சிக்கு
2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.

1987 - 1990ம் ஆண்டுகளில் இலங்கைத்தமிழருக்கு இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்கு யார் எப்போது மன்னிப்பு கேட்பது? 
 
அவர் கூறுவதுபோல எமக்கு இனிவெறு வழியே இல்லை இந்திய அரசு செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்களுது காலில் மண்டியிட்டு அடிமையாக வாழவேண்டிய நிலை வருமாயின், இலங்கை அரசை மன்னித்து அவர்கள் காலைப்பிடித்து அவர்களது அடிமையாக வாழலாமே.

அவர் சொல்வதுபோல இந்திய அரசோ அல்லது இந்திய ராணுவமோ அல்ல இந்தியா. ஆம் சரியாகத்தான் கூறியிருக்கிறார் அதனால்தான் நாங்கள் இன்னமும் இந்திய மக்களை விசேடமாக தமிழக மக்களை எமது உறவுகளாக கருதுகிறோம். ஆனால் இந்தியாவின் அயலுறவுக்கொள்கையை வகுப்பவர்கள் - இந்திய மத்திய அரசு. அதற்கு உதவியாக இருப்பது இந்திய இராணுவம். ஆதலால் எமக்கு எதிராக செயற்படும் இவை இரண்டையும் வெறுக்கிறோம்.
 
தயவுசெய்து வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலைகள் செய்யவேண்டாம் எமக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் வேதனைகளையும் வலிகளையும் உங்கள் பெயருக்கும் புகழுக்குமாக வியாபாரமாக்காமல் இருந்தால்போதும்.

 
இந்திய அமைதிகாக்கும் படையினர் செய்த கொடுமைகளில் சில.

இந்திய ராணுவத்தினர் திட்டமிட்டே பல செயல்களை செய்தனர் அவற்றில் ஒன்று கற்பழிப்பு, அடுத்தது மக்களை மிரட்டி அடிபணிய வைப்பதற்காக அநியாயத்திற்கு செய்த பொதுமக்களின் படுகொலைகள்.

ஜெயமோகன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ரமன்ட்ன் சர்மா என்ற வீரர் பணியாற்றியதாக கூறும் பாயிண் பேட்ரோ எனும் பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்தவந்தான் நானும். எனது வீட்டிற்கு அண்மையில் ஒருதடவை குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றது. சிறிதுநேரத்தில் அங்கு வந்த இந்திய ராணுவத்தினர். பக்கத்து தெருவிலிருந்த ஒருவீட்டில் குடியிருந்த ஒரு வயோதிபரையும் அவரது மகன் மற்றும் திருமணமாகி சில வாரங்களேயான மகளது கணவர் ஆகியோரை வீட்டு வாசலிறகு இழுத்துவந்து எதுவித சம்பந்தமும் இல்லத அந்த மூவரையும் சுட்டுக்கொன்டறுவிட்டு விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இடம்பெற்றால் இதுபோல இன்னும் பலரை நீங்கள் இழக்கவேண்டிவரும் என்று மிரட்டிச்சென்றார்கள். இது யாரோ சொன்ன கதையல்ல எனது வீட்டுக்கு அண்மையில் இடம்பெற்ற விடயம்.

ஹா ஹா இதுவும் இவங்க சொல்லுவதுபோல இந்திய அமைதிகாக்கும் படையின் மனிதநேயப்பணிகளில் அடக்கம் போலும்.

1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ என்ற இரண்டு நாளேட்டின் அலுவலகர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தது; அதுமட்டுமல்ல அச்சு இயந்திரத்தையும், அலுவலகத்தையும் வெடி வைத்து தகர்த்தனர்.
‘New saturday review’ என்ற கொழும்பு ஏடு வெளியிட்ட விரிவான செய்தி இது. (1987, நவம்பர் 7)

“அக். 21 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய ராணுவம் கைப்பற்றியது. அன்று தீபாவளி நாள். ராணுவத்தினர் உடனடியாக 50நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அவரது உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தரையில் வீசப்பட்டன. அடுத்த இரண்டு நாளில் அக்.23 ஆம் தேதி 83 நோயாளிகள், ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். எல்லா நடவடிக்கைகளையும் யாழ்ப்பாண கோட்டை தலைமை ராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு (இந்தப் படுகொலைகளில்) உதவியாக செயல்பட்டவர்கள் டாக்டர் கனகராஜா, டாக்டர் பன்சாரி. இவர்களும் இந்திய “அமைதிப்படை” அதிகாரிகள்தான். கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்த உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் செய்யப்படவில்லை; விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

யாழ் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கு நினைவாஞ்சலி செய்யும் பொதுமக்கள்.

இறந்தவர்களில் 20 பேர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள். மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றவர்கள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் உடல் அழுகிய நிலையில் சவக்கிடங்கில் கிடந்தது. 12 பேர் உடல், அடையாளங்களை காண முடியில்லை. மருத்துவமனை ஊழியர்கள் 20 பேரின் சடலங்கள் ஏனைய ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டன. 11 பேர் உடல்கள், அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து அடையாளம் காணப்பட்டன. மருத்துவ மனையில் மின்சாரத்தை ராணுவத்தினர் துண்டித்ததால், மூச்சு சுவாசத்துக்கான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நோயாளிகளும் தீவிர மருத்துவ கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 நோயாளிகளும் இறந்தனர். யாழ்ப்பாண மருத்துவமனை முற்றிலும் நாசமடைந்தது. மின்சாரமோ தண்ணீரோ இல்லை. சவக்கிடங்கு நிரம்பி வழிந்தது. ஒரு வயதிலிருந்து 85 வயது வரையுள்ள 85 சடலங்கள் 3 நாட்களில் குவிந்து கிடந்தன. ‘நர்சு’களின் குடியிருப்புகள் ஷெல் வீச்சுக்கு உள்ளாயின.
 
இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி ஐக்கியநாடுகள்சபையின் மனித உரிமை குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 1987, பிப்.1 மதல் மார்ச் 11 வரை ஜெனிவாவில் நடந்த அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிக் கண்டித்தனர். அந்தக் கண்டனங்களை ‘தமிழ் இன்டர்நேஷனல்’ விரிவாகப் பதிவு செய்திருந்தது;
 
பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, உலகம் முழுதும் ஆக்கிரமிப்பு, ராணுவத்தினர் செயல்பாடுகளாகவே உள்ளன. இலங்கை ராணுவமும் அதை செய்தது. இந்திய அமைதிப் படையும் அதை செய்தது.
 இந்திய அமைதிகாக்கும் படையை இப்படித்தான் அன்புடன் வரவேற்றோம். 


 அவர்கள் எமக்குச் செய்ததுவோ...

1988 ஜூலை வரை இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்கள் - 5700.

 பாலியல் வன்கொடுமைக்கு உள்ளடாக்கப்பட்ட பெண்கள் - 780. (ஆதாரம்: Tamil voice international, ஜூலை 1988)

இவையும் அமைதிகாக்கும் படை செய்த மனிதநேயப்பணிகள்தானோ?
நேசமுடன் அம்பலத்தார்
 
தொடர்புடைய பதிவுகள்.
கற்பழித்ததா இந்திய ராணுவம்?
அமைதிப்படை திருமாவளவன் கடிதம் 
 

 படங்கள் நன்றியுடன் கூகிள் தேடுபொறியில் பெற்றுக்கொண்டது.
 

28 comments:

sarujan said...

((அவர் கூறுவதுபோல எமக்கு இனிவெறு வழியே இல்லை இந்திய அரசு செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு)சரியான கேள்வி

முற்றும் அறிந்த அதிரா said...

அரசியலோ? நான் இப்போ போட்டுப் பிறகு வாறேன்ன்ன்ன்......

பி.அமல்ராஜ் said...

தயவுசெய்து வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலைகள் செய்யவேண்டாம் எமக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் வேதனைகளையும் வலிகளையும் உங்கள் பெயருக்கும் புகழுக்குமாக வியாபாரமாக்காமல் இருந்தால்போதும்.
//

உண்மைதான்... அதை வாசிக்கும் போது ஜெயமோகன் மேல் என்றும் இல்லாத ஒரு கடுப்புத்தான் வருகிறது.. நல்ல பதிவு.. உங்கள் பதிவு என்னையும் கொஞ்சம் சாந்தப்படுத்தியிருக்கிறது. வாழ்த்துக்கள் அம்பலத்தார்.

K said...

மிக ஆணித்தரமாக எழுதப்பட்டுள்ள பதிவு அண்ணர்! இந்திய இராணுவம் இழ மண்ணில் என்ன செய்தது என்பதை நாம் புதிதாக ஆதாரங்கள் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை என் நினைக்கிறேன்!

அங்கு நடைபெற்ற கொடுமைகளை உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் விளங்கி வைத்திருக்கிறார்கள் தமிழக / இந்திய தலைவர்களும் மக்களும்!

அப்படி இருக்கும் போது ஜெயமோகன் சொன்ன கருத்து எந்தளவு தூரத்துக்கு எடுபடப் போகிறது????

Unknown said...

இந்திய அரசு நேர்மையாக இருப்பின் அமைதிப்படையில் சீக்கியர்கள், மலையாளிகள் அதிகம் பயன்படுத்தியதின் காரணம் என்ன? ராஜீவ்மேனன் என்கிற இயக்குனர் இயக்கிய ஒரு திரைப்படத்தில் இந்திய அமைதிபடை வீரராக மம்முட்டியை வைத்து.....அமைதிப்படையின் செயலை நியாயப்படுத்த முயற்சித்தார்....அந்த திரைப்படத்தில் ஆழ்ந்த ஆழமான கருத்தாக நல்லவர்கள் போலவும் அங்கு இந்திய அமைதிபடை பாதிக்கப்பட்டதாகவும் சித்தரிக்கப்பட்டது!

இன்று ஜெயமோகன் எழுதியது அத்தகைய கருத்துடையதாக இருந்தாலும் மழுப்பலாக மன்னிப்பு கேட்கும் தோரணையில் இருக்கிறது. அவருக்கு புரியவைக்கும் கட்டுரையாக இது இருக்கும்...

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார்.
இந்தியப்படையின் இன்னொரு முகம் இவருக்குத் தெரிந்து இருக்காது பாவம் தன் எழுத்தின் மீது ஈழத்து வாசகர்கள் வைத்திருக்கும் ஆர்வத்தை தானே தவிடுபொடியாக்கி சீரலித்துவிட்டார்! இவர்களுக்கு எப்படிச் சொன்னாலும்  எங்கள் உணர்வை புரிந்துகொள்ள முடியாது  வழிகாட்டாவிட்டாலும்  வலிகள் கொடுக்காமல் இருந்தால் சிறப்பு விஸ்ணுபுரம் படைத்தவர்!

Anonymous said...

படைப்பாளிக்கே உள்ள அகந்தையின் வெளிப்பாடு தான் இது அம்பலத்தாரே...

அறியாமையின் விளைவு இல்லை...நாட்டுப்பற்று தேவை தான்...இது கண்மூடித்தனமோ என்று தான் தோன்றுகிறது ...

தான் தவறு செய்ததை அறிந்த அறிவாளி அவர்...

விட்ட வார்த்தையை விழுங்க வழியின்றி விழி பிதுங்கி நிற்கிறார் இன்று...

ம.தி.சுதா said...

////ஈழத்தமிழர் இந்தியவை மன்னிக்கவேண்டும் என ஆலோசனைகூறும் அவரால் ஏன் இந்திய அரசே ஈழத்தமிழருக்கு நீங்கள் செய்த அநியாயங்களிற்கு பிராய்ச்சித்தமாக அவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்க வழிசெய்யுங்கள் எனக் கேட்க முடியவில்லை.//////

ஐயா இது ஒரு மக்கியமான கேள்வி... நடுநிலமையான ஒரு எழுத்தாளரானால் இதை எழுதுவதற்ஷகு என்ன?

ம.தி.சுதா said...

ஐயா வரலாற்றை சரியான ஆதாரத்துடன் தந்தமைக்கு கோடி நன்றி..

அம்பலத்தார் said...

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

((அவர் கூறுவதுபோல எமக்கு இனிவெறு வழியே இல்லை இந்திய அரசு செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு)சரியான கேள்வி//

வணக்கம் சாருஜன் உங்க வரவிற்கும் கருத்துப்பகிர்விற்கும் நன்றி.

அம்பலத்தார் said...

athira said...

அரசியலோ? நான் இப்போ போட்டுப் பிறகு வாறேன்ன்ன்ன்......//

ஆதிரா ஓடாமல் கொஞ்சம் நில்லுங்கோ. அரசியல் ஒன்றும் தீண்டத்தகாத சாச்சாரம் இல்லையே. ஒவ்வொருவரும் கட்டாயமாகத் தன்னைச்சுற்றி இடம்பெறும் அரசியலை அறிந்திருப்பது அவசியம்.

அம்பலத்தார் said...

பி.அமல்ராஜ் said...
//உண்மைதான்... அதை வாசிக்கும் போது ஜெயமோகன் மேல் என்றும் இல்லாத ஒரு கடுப்புத்தான் வருகிறது.. நல்ல பதிவு.. உங்கள் பதிவு என்னையும் கொஞ்சம் சாந்தப்படுத்தியிருக்கிறது. வாழ்த்துக்கள் அம்பலத்தார்.//

வணக்கம் அமல் சௌக்கியமா? உங்கள் ஆதங்கம் புரிகிறது. பெரும்பான்மையான ஈழத்தமிழரின் மனநிலையும் இந்தவிடயத்தில் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

அம்பலத்தார் said...

மாத்தியோசி - மணி said...

மிக ஆணித்தரமாக எழுதப்பட்டுள்ள பதிவு அண்ணர்! இந்திய இராணுவம் இழ மண்ணில் என்ன செய்தது என்பதை நாம் புதிதாக........//
ஆமா மணி இவரைப்போன்ற ஒருசிலரைத்தவிர பெரும்பான்மையான தமிழகமக்களும் எமது பிரச்சனையை நன்கு புரிந்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

"உண்மையான கருத்துடன் ஒரு பதிவு ! நன்றி சார் !"

அம்பலத்தார் said...

வீடு சுரேஸ்குமார் said...
//இந்திய அரசு நேர்மையாக இருப்பின் அமைதிப்படையில் சீக்கியர்கள், மலையாளிகள் அதிகம் பயன்படுத்தியதின் காரணம்
என்ன?..............//

உங்கள் நீண்ட விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சுரேஸ்

அம்பலத்தார் said...

தனிமரம் said...
///...... இவர்களுக்கு எப்படிச் சொன்னாலும் எங்கள் உணர்வை புரிந்துகொள்ள முடியாது வழிகாட்டாவிட்டாலும் வலிகள் கொடுக்காமல் இருந்தால் சிறப்பு விஸ்ணுபுரம் படைத்தவர்!//
ஆம் நேசன் சரியாகச் சொன்னீர்கள்.

அம்பலத்தார் said...

ரெவெரி said...

//தான் தவறு செய்ததை அறிந்த அறிவாளி அவர்...

விட்ட வார்த்தையை விழுங்க வழியின்றி விழி பிதுங்கி நிற்கிறார் இன்று...//
மிகவும் சரியான வார்த்தைகள் ரெவெரி.

Yoga.S. said...

காலை வணக்கம்,அம்பலத்தார்!சுகமா?

Anonymous said...

அங்கிள் நீண்ட நாட்களுக்கப்புறம் வரேன் ...சுகமா ...

ஹேமா said...

அம்பலம் ஐயா...உப்புக்கஞ்சி கிடைச்சுதோ.வேற ஏதாவது நல்ல விஷயம் சொல்லுங்கோ.இவங்களையெல்லாம் ஒரு பக்கமா குப்பைக்க தூக்கிப் போடுங்கோ.எங்களை வச்சு வியாபாரம் செய்றாங்கள்.ச்சீ....!

போன பதிவுக்கு நிறைய நினைச்சிட்டு சொல்லாமப் போய்ட்டன்.வேண்டாம்....!

Yoga.S. said...

இந்த ஆள் எழுதிறதெல்லாம் "அந்த" ஆள் எழுதுறது போலவே இருக்கு!"அந்த" ஆளுக்கு,இந்த ஆள் உறவோ,என்னவோ????

Yoga.S. said...

காலை வணக்கம் அம்பலத்தார்!நலமா?வீட்டில் எல்லோரும் நலம் தானே?

Yoga.S. said...

காலை வணக்கம்,அம்பலத்தார் !நலமாக இருக்கிறீர்களா?இன்றைய பொழுது நன்றாக அமைய பிள்ளையார் துணை இருப்பார்!

Yoga.S. said...

இரவு வணக்கம்,அம்பலத்தார்!பிறந்த நாள் வாழ்த்துக்கள்!வெகு நாட்களாக காணவில்லை.நலமே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,வீட்டிலும் கூட!

Anonymous said...

அங்கிள் நலமா ....


உங்களுக்கு இனிய இனிய அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

நம்பள்கி said...

ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...

அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_14.html

அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html

அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html

என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!

அன்புள்ள,
நம்பள்கி!
www.nambalki.com

”தளிர் சுரேஷ்” said...

இந்திய அரசாங்கம் ராஜிவ் செய்த மாபெறும் தவறு அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது! அமைதிப்படையின் அட்டூழியங்கள் மன்னிக்க முடியாதவை!

அம்பாளடியாள் said...

ஆதாரங்களுடன் சமர்பிக்கப்பட்ட ஈழ மக்களின் துயர் படிந்த கேள்விக் குறிகள் இதற்கு பதில் சொல்ல யாரால்தான் முடியும்?....!.....
உண்மை என்றும் அழிவதில்லை.அதிலும்
தன்மானமும் தமிழனுக்கு அதிகம் இதில்
யார் யாரிடம் மன்னிப்புக் கேட்ப்பது!......
பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .