இந்த அம்பலத்தாரின் லொள்ளைப் பாருங்கோ! கொஞ்சக்காலமாக விவஸ்த்தை இல்லாமல் அந்தமாதிரிக் கசமுசா கதைகளாக எழுதிக்கொண்டு என ஒருசிலர் கிசுகிசுப்பது எனது காதிலையும் விழுந்தது. இன்று கொஞ்சம் வித்தியாசமான ஒரு விடயத்தைப்பற்றிச் சொல்லவாறன்.
சுவாமி நித்தியானந்தாவும் மதம்பிடித்து அடக்கமுடியாமல்தான் அந்த.... வேலைகள் எல்லாம் செய்தவர். அதைப்பற்றியும் பின்னாடி எழுதுகிறேன். இப்ப இந்த விசயத்தைக் கேளுங்கோ.
அண்மையில் தமிழகம் கடையநல்லூரில் உள்ள ஒரு பிரதேசத்தில் வாழும் ஒரு இஸ்லாமியர் தனது மதத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார் என்பதற்காக அவரது சொந்த ஊரின் ஜமாத் அவரிற்கு கொடுமையான தண்டனையை வழங்கியது. அதனை இந்த செய்தியில் அறிந்துகொள்ளலாம்.
Atheist Muslim youth ostracised அதை அறிந்ததில் இந்த பதிவை எழுதும் எண்ணம் தோன்றியது.
இங்கு அந்த இளைஞர் கூறிய கருத்துக்கள் சரியா தப்பா என்பதற்கு அப்பால் அவரிற்கு தான் விரும்பிய கருத்து சுதந்திரம் உண்டு என்பதை நாங்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த அன்பரின் கருத்தைப்படிக்க இறையில்லா இஸ்லாம்
தாயகத்தில் புத்தரின் பெயரைச்சொல்லிக்கொண்டு தலைக்கு வெளியிலையும் ஒண்டுமில்லாமல் உள்ளுக்குள்ளையும் ஒண்டுமில்லாத காவியளின்ரை அட்டகாசங்களையும், இந்தியாவிலை சுவாமி நித்தியானந்தா, சந்திரசாமி போன்ற பம்மாத்துச் சாமியார்களையும் மற்றும் விஸ்வ இந்துப்பரிசத், ஆப்கானிலை தலைபான், பாலஸ்தீனத்திலை கமாஸ் போன்ற தீவிர சமய வெறி பிடிச்ச அமைப்புகளையும், இங்கு ஐரோப்பாவில் எங்களுக்குப் பக்கத்திலை இங்கிலாந்தின் கொல்லையில் நடந்த வட அயர்லாந்து கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து பிரச்சனை, மதமாற்றத்தை ஊக்குவிப்பதையே தமது முதற்கடமையாக செய்யும் சில கிறிஸ்தவ அமைப்புகள் என வஞ்சகமில்லாமல் எல்லாச் சமயகாரரும் மதம் மதமெண்டு மதம் பிடிச்ச யானைபோல நிற்பது வேதனையாக இருக்கிறது.
உண்மையிலேயே இந்த மதங்கள் எல்லாம் மக்கள் நல்வாழ்வுக்காகவா? அல்லது மதங்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள அப்பாவி மக்கள் மதபீடங்களினால் பயன்படுத்தப்படுகின்றார்களா?
நான் இங்கு மதங்களே வேண்டாம் என்று சொல்லவரவில்லை.
மதங்களின் பெயரால் இடம்பெறும் அநியாயங்கள் களையப்படவேண்டும்! மதபீடங்கள் தம்மை மறுசீரமைத்துக்கொண்டு மக்கள் நலனிற்காக செயற்படவேண்டும்!
மதங்களின் பெயரால் மக்கள் சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட கூட்டங்களாக உருவாக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும்!
மதங்களை தீவிரமாக ஆதரிப்பவர்களும், மதங்களை தீவிரமாக எதிர்ப்பவர்களும் மக்கள் நலனிற்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் செயற்படுத்துவதற்கு ஒதுக்கும் நேரத்தைவிட அதிகமான நேரத்தையும் சக்தியையும் ஒருவரை ஒருவர் திட்டித்தீர்ப்பதற்காகவே செலவு செய்வது வேதனைதரும் யதார்த்தம்.
கடவுளை முழுமையாக நம்புவதற்கும்,அதுபற்றிய போதனைகளை சொல்வதற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் அதே உரிமை, மதங்களை எதிர்ப்பவனுக்கும், எதிர்த்துக் கருத்துச் சொல்பவனுக்கும் இருக்கு என்பதனை ஏற்றுக்கொள்ள மறுப்பது தவறில்லையா?
மதங்களை ஆதரிப்பவர் அவற்றிலுள்ள நல்லதை சொல்லுங்கள் எதிர்ப்பவர்கள் மதமற்ற வாழ்வின் நன்மைகளை சொல்லுங்கள் மக்கள் தம் சுய சிந்தனையில் சரியெனப்பட்டதை ஏற்றுக்கொள்ளட்டும். அதை விடுத்து அகிம்சையையும் அன்பையும் போதிக்கும் மதங்களின் பெயரால் தீவிரவாதமும் கருத்துசுதந்திர மறுப்பும் அடாவடித்தனங்களும் வேண்டாம்.
மானிட மேன்மையுடன்கூடிய ஒரு உன்னத சமுதாயத்தை படைப்போம் வாருங்கள்
77 comments:
ஸலாம் சகோ.அம்பலத்தார்,
///அவரது சொந்த ஊரின் ஜமாத் அவரிற்கு கொடுமையான தண்டனையை வழங்கியது.///
---இதை நீங்களும் என்ன என்று விக்காததால்... என்ன என்று அறியும் ஆவலில் அந்த சுட்டிக்கு சென்று பார்த்தேன்... அதில் பொய்கள் நிறைந்து உள்ளன. ஏற்கனவே உண்மையான செய்திகள் சென்ற வாரமே வந்து விட்டன.
நாளை இதே நாத்திக கம்யுனிஸ்ட் ஷா,
அந்த குறிப்பிட்ட கம்யூனிச கட்சியில் இருந்துகொண்டே,
"மார்க்ஸ், எங்கல்ஸ், மாவோ, ஸ்டாலின், லெனின் இல்லாத கம்யூனிசம்"
---என்று ஒரு புதிய "கம்யுனிஸ(?)கொள்கை (?)வலைத்தளம்" ஆரம்பித்து, அதில் எல்லா தலைவர்களின் பெர்சனல் குடும்ப வாழ்க்கை பற்றி மிக மோசமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவதூறு எழுதி வந்தால், அவரை கம்யுனிஸ்டுகள் எல்லாரும் சேர்ந்து கட்சியில் இருந்து நீக்கி விடாமல்... அவரை கம்யுனிஸ்ட் அல்ல என்று சொல்லி விடாமல்... ஆதரிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி செய்தால் 'theist communist youth ostracised' (?!) என்று செய்தி வராதாம்..! இதான் மேட்டர்.
//Atheist Muslim//---சேர்ந்து இருக்கவே முடியாத...
இந்த ஒரு பதமே சொல்லி விடுகிறது...
அந்த செய்தி ஒரு "தலை இல்லாத மண்டை" (?!?!) என்று..!
அவர் 'கம்யுனிஸ்ட்' என்றால் முதலில் கம்யூனிசம் பற்றி எழுதட்டும்; நாம் அறிந்துகொள்வோம்..!
////////////////////////////////////////////////
எதிர்ப்பவர்கள் மதமற்ற வாழ்வின் நன்மைகளை சொல்லுங்கள்
எதிர்ப்பவர்கள் மதமற்ற வாழ்வின் நன்மைகளை சொல்லுங்கள்
எதிர்ப்பவர்கள் மதமற்ற வாழ்வின் நன்மைகளை சொல்லுங்கள்
எதிர்ப்பவர்கள் மதமற்ற வாழ்வின் நன்மைகளை சொல்லுங்கள்
எதிர்ப்பவர்கள் மதமற்ற வாழ்வின் நன்மைகளை சொல்லுங்கள்
////////////////////////////////////////////////
மிக மிக மிக மிக மிக அருமையாக நெத்தியடியாக சொன்னீர்கள்..!
நன்றி..!
மதஎதிர்வாதிகள் ஒருவர் கூட இதை பினபற்றியதோ பின்பற்றுவதோ கிடையவே கிடையாது..!
இவ்விஷயத்தில் உண்மையை உறக்க சொன்னதற்கு மிகவும் நன்றி சகோ.அம்பலத்தார்.
வணக்கம் ஐயா,
நீண்ட நாட்களின் பின்னர் தங்களிடமிருந்து காத்திரமான ஓர் பதிவினை கொடுத்திருக்கிறீங்க.
மதத்தின் பெயரால் மதம் பிடித்துள்ளோர், தம்மைச் சூழ்ந்துள்ள் அழுக்குகளைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை என்பது யதார்த்தம்,.
அதே போல மாற்றங்களை எவர் விரும்பினாலும், மதங்களின் பிடியில் தீவிரமாக கட்டுண்டு கிடப்போர் அனுமதிப்பதே இல்லை!
எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு என்றும், மதங்களைப் பின்பற்றுவோர் மனிதர்களின் கருத்துக்களை மதிக்க்க வேண்டும் எனும் யதார்த்தத்தினையும் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் நிச்சயமாய் மதம் பிடித்த பிரச்சினைகள் எழாது என்பது என் கருத்து.
ஒருவனுக்கு தான் விரும்பிய மதத்தினைப் பின்பற்றுவதற்கு எங்கனம் உரிமை உள்ளதோ அதே போல தன் மதத்தின் தவறுகளைச் சுட்டவும் உரிமை இருக்கிறது என்பதனை உணர்ந்து அனைத்து மதங்களும் செயற்பட்டால் மதங்களால் வெறி கொண்டலையும் பிரச்சினைகள் தவிர்க்கப்படும் என்பது உண்மையே
ஒருவருக்கு தன் அப்பாவை, 'அப்பா' என்று நம்புவதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ... அதே உரிமை 'அவர் என் அப்பா இல்லை' என்று சொல்லவும் உரிமை இருக்கிறது.ஒப்புக்கொள்கிறேன்..!
ஆனால்,
நாம் ஒரு விஷயத்தை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் சகோ.அம்பலத்தார்,
"நான் இந்த அப்பா 'Mr.X'-க்கு பிறக்கவில்லை" என்று கூறும் 'y' என்ற ஒருவன்,
தன்னை
Mr.y,
s/o Mr.X
என்று ஆங்காங்கே அதிகாரபூர்வமாய் போட்டுக்கொள்வதை முதலில் நிறுத்த வேண்டும் அல்லவா..?
திராவிடர் கழக கட்சியின் அங்கதித்னணாக இருந்துகொண்டே...
திராவிடர் கழகத்தையும்,
திரு.பெரியாரையும்,
திரு.வீரமணியையும்,
அக்கட்சியினரையும்,
அவர்களின் குடும்பத்தினர்களையும்,
ஆபாசமாக அசிங்கமாக திட்டுபவன்...
போலி பெயர்களில் ஒளிந்து கொண்டு...
கள்ளப்பேர்வழியாக வாழ்பவன்,
முதலில் அக்கட்சியை விட்டு பகிரங்கமாக வெளியேறிவிட்டு அப்புறமாக திட்டவேண்டாமா..?
"பெரியார் அடிமை" என்ற கள்ளப்பெயரில் ஒளிந்து கொண்டு "பெரியார் இல்லாத பெரியாரிசம்" என்று ஒரு ஆபாச வக்கிர தளம் அமைத்துக்கொண்டு அவதூறு எழுதலாமா..?
இந்த கள்ளப்பேர்வழி நீண்ட நாள் கழித்து ஒருநாள் அகப்பட்டால்,
தி.க வினர் அவனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டால்... நானும் நீங்களும் எல்லோரும் அதை வரவேற்போமா... வேண்டாமா...?
முதலில் கடையநல்லூர் ஜமாத்தார்கள் தாங்களே போலிசை
கூப்பிட்டு பள்ளிவாசலில் தங்களுக்கு பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு, பிடிபட்ட அவரை விசாரித்து, 'அவர் தன்னை முஸ்லிம் இல்லை... நாத்திகர்' என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பின்னர், ஊரார் அனைவருக்கும் இதை அறிவித்து விட்டு, இத்தனை காலமும் ஹராம் கோழியை, தன் கோழிக்கடையில் 'ஹலால் என்று ஊராரை ஏமாற்றி விற்றவரை', 'முஸ்லிம் என்று மனைவி, குழந்தைகள், பிள்ளைகள் சொந்தங்கள் ஊராரை ஏமாற்றியவரை' போலீசில் பாதுகாப்பாக ஒப்படைத்த ஜமாத்தினரை நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுவோம்..!
கூடவே இணையத்தில் கள்ள பெயர்களில் புகுந்து கொண்டு மாற்று கொள்கையை அவதூறாக எழுதுவோருக்கு மிகச்சரியான பாடம். அது போன்ற சில தளங்கள் இப்போது அவர்களாலேயே மூடப்பட்டு இருப்பதும் ஆரோக்கியமானது..! வரவேர்கத்தக்கது..!
என்னுடைய தளத்தில் அனானி ஆப்ஷனை மூடிவிட்டேன். இருந்தும் சிலர் புது ஜி மெயில் ஐடி, ப்ராக்சி ஐபி இவற்றில் வந்து மாற்று சமய மக்களையும், சமய கடவுள்களையும் ஆதாரமின்றி அவதூறாக அசிங்கமாக பின்னூட்டம் இட்டால் நான் மட்டுறுத்தி விடுவேன்.இதுபோல அனைவரும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?
சிந்திக்க வேண்டிய பதிவு இந்த இடத்தில் வேறு மதங்களைப்பற்றி நான் பேசவில்லை. நான் ஒரு இந்து தீவிரவாதி இருந்தபோதும். இந்து மதத்தில் இருக்கின்ற பல மூட நம்பிக்கைகளை வெறுக்கின்றேன். இந்துக்களிடம் பல மூட நம்பிக்கைககள் இருக்கின்ற. அவை அகற்றப்பட வேண்டும். வறிய மக்களிடம் நிதி திரட்டி பெரும் கொவில் கட்டி வறிய மக்களின் நிதியை முடக்கி இன்னும் குட்டிச் சுவராக்க நினைக்கும் மதம் இந்து மதம்.
இப்போது நேரமில்லை பின்னர் பல விடயங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
மதம் பிடித்த யானை ஒன்று மேலே வந்துவிட்டது.
யானைக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும்....
ஒரு இஸ்லாமியர் தனது மதத்தை விமர்சித்தார் என்பதற்காக அவரிற்கு கொடுமையான தண்டனை மதவெறியர்களால் வழங்கபட்டது. இதற்க்கு எதிராக பதிவுவெளுதிய தங்களுக்கு தலை வணங்குகிறேன். இப்படியான கொடுமைகளை தடுப்பது மதசார்பற்ற இந்திய அரசின் அத்தியாவசிய உடனடி கடமை.
இந்து, புத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதம் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?
ஐயா,
மற்றய மதங்களில் இப்படியான கொடுமைகள் நடப்பதில்லையே!!
"இனி அவர் முஸ்லிம் இல்லை"
---என்ற ஒரு பொது அறிவிப்பு செய்ததுதான்....
"கொடுமையான தண்டனை" என்றால்...
இதைத்தானே அவரும் இத்தனை நாளாய் விரும்பி தானாக தம் வாழ்வில் தேர்ந்தெடுத்துக் கொண்டது..?
இந்த "கொடுமையான(?!)தண்டனைக்கு" அவரே கவலைப்பட போவதில்லையே..!
இங்கே நாம் எல்லோரும் ஏன் கவலைப்பட வேண்டும்..?
இனி இங்கே சொல்ல ஒன்றும் இல்லை..!
வணக்கம் அம்பலத்தார்..!
கத்தி மேலே நடப்பதை போன்றே இருக்கிறது இந்த பதிவு.
பக்க சார்பு இல்லாமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள் ..!!!!
யாரும் யாரையும் வற்புறித்திக் கட்டாயத்தின்பேரில் எந்த ஒரு கருத்தையோ கொள்கையையோ திணிக்கக்கூடாது அது தனிமனித சுதந்திரத்தை மீறும் செயலாகும். நான் இங்கு மதங்களை தீவிரமாக ஆதரிப்பவர்களையும் அல்லது எதிர்ப்பவர்களையும் கேட்டுக்கொள்வது என்ன என்றால் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டும் வசைபாடிக்கொண்டும் இருப்பதை விடுத்து மானிட மேன்மை நோக்கி உங்கள் செயற்பாடுகளை செய்யுங்கள். மக்கள் தாமாக தீர்மானிக்கட்டும் எந்த வழி சரியானது என்பதை
எப்பொழுதும் காத்திரமான பதிவுகளைமட்டுமே எழுதி சாதாரண மக்களில் இருந்து அந்நியப்பாட்டிருக்காமல் சமுதாயத்தின் சகலதரப்பிலும் உள்ள மக்களுடனும் கைகோர்த்து அனைவருடனும் ஒன்றிணைந்து பயணித்து ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்பவேண்டுமென்பதே எனது அவா நிரூபன்.
ஆம் உங்கள் கருத்து புரிகிறது. ஒவ்வொரு மனிதனும் சகமனிதரை மதிக்கவும், அன்புசெலுத்தவும், அவர்களது கருத்துக்களை பொறுமையாக கேட்கவும் பழகினால்போதும். பல முரண்பாடுகளும் மெல்ல மறையும்.
\\\மதபீடங்கள் தம்மை மறுசீரமைத்துக்கொண்டு மக்கள் நலனிற்காக செயற்படவேண்டும்!\\\ நல்ல கருத்து !
//ஒரு இஸ்லாமியர் தனது மதத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார் என்பதற்காக அவரது சொந்த ஊரின் ஜமாத் அவரிற்கு கொடுமையான தண்டனையை வழங்கியது.//
appadiya?
Enna thuku tandanai'ya koduthu vittargal?
மதங்களில் மட்டுமன்றி அரசியல், குடும்பம், உறவுகள் என அனைத்துமட்டத்திலும் திறந்த விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களுமே தீர்வுகளை கொண்டுவரும்
நீல நிறத்தில் கொடுக்கப்பட்டவற்றை அழுத்தி விபரங்களை அறியலாம்
சகோ.ஜாபர் கான்,
உங்களுக்கு விஷயமே தெரியாதா...
இதை அந்த ஹைதராபாத் காரரிடம் படித்து அறிவதைவிட...
இந்த செய்தியை அன்றைக்கே அதே ஊரை சார்ந்த இந்த தளத்தில் புகைப்படங்களுடன் விரிவாகவே செய்தியை போட்டு விட்டார்கள்; படித்து அறிந்து கொள்ளுங்கள் சகோ..!
சகோ ஆஷிக் நான் இந்தப்பதிவில் மட்டுமன்றி எந்த ஒரு பதிவிலும் தனிப்பட்ட எந்த ஒருவரையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் தாக்கி எழுதுவது இல்லை. தனிமனித சுதந்திரம் எழுத்து, பேச்சு, சுதந்திரங்களையும் மதிப்பவன். ஆதலால் எனது பதிவுகளை படிப்பவர்களும் தவறான அவதூறுகளை எழுதி தங்களை தரம் தாழ்த்திக்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆதலால் எனது பதிவுகளில் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரத்தை கொடுத்துள்ளேன். எவரோ ஒருவர் எப்பொழுதாவது ஒருதடவை தவறு செய்யக்கூடும் என்பதற்காக கருத்துக்கூறுபவர்களுக்கு தணிக்கை முறைகளை வைத்து இங்கு பின்னூட்டம் இடவரும் ஏனைய புரிந்துணர்வுடன்கூடிய உங்களைப்போன்றவர்களையும் அவமதிக்க விரும்பவில்லை. என்னை மதிப்பவர்களையும் என்னை எதிர்ப்பவர்களையும்கூட நான் மதிக்கிறேன். கருத்துக்களை கருத்துக்களால் மோதி தெளிவோம்
தாராளமாக உங்களது கருத்துக்களை நாகரிகமானமுறையில் தெரிவியுங்கள் சந்ரு
நண்பரே தயவுசெய்து தனிமனித தாக்குதல்களையும் அவமதிப்புகளையும் தவிர்த்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்
சகோ முஹம்மத் ஆஷிக்கின் கருத்துக்களை முழுமையாக வழிமொழிகிறேன்..
அம்பலத்தார் அவர்களே நீங்கள் நினைப்பது போன்று அங்கு எந்த கொடுமையான தண்டனையும் வழங்கப்படவில்லை..
'இனி அவர் முஸ்லிம் இல்லை' என்று சொன்னதைத்தவிர..
முதலில் சகோதரம் நிரூபனை உரிமையோடு கிண்டல் செய்ததுக்கு என் கண்டனங்கள்..அம்பலத்தாருக்கு...
கூடவே வலையின் அமைப்பு பற்றி சொன்ன விசயங்களை திருத்திக்கொள்கிறேன் அய்யா...
என் எழுத்தை மதித்து..படித்து...விமர்சனம் செய்ததுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்...உங்கள் ஊக்கம் அதை கண்டிப்பாய் மெருகூட்டும் என்று நம்புகிறேன்...இந்த விமர்சனத்தை தாங்கிய சகோதரத்துக்கும் என் மனமார்ந்த நன்றி...
ரெவெரி ன்னா பகல் கனவுன்னு சின்ன வயசுல படிச்சேன்...பிடிச்சது...மனதில் நின்னுது...தொத்திக்கிச்சு அம்பலத்தாரே...
அம்பலத்தாரே...நான் கண்டவரை எவனொருவன் மதத்தை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறானோ அவன் வாழ்க்கையை உலகில் வாழ தவறுகிறான்...அகந்தையால் மற்றவர்களை தரம் குறைத்து நினைக்கிறான்...இது எல்லா மதத்தவர்களுக்கும் பொதுவானது... இது என் வாழ்வில் பல முறை அனுபவப்பட்டது...
புதிதாய் வலை முகவரி மாற்றினீர்களா...என் டாஷ்போர்டில் கொஞ்ச நாட்களாய் உங்கள் பதிவுகள் வரவில்லை...
அவசரம் இல்லை நிதானமாக வந்து கருத்திடுங்கள்
சந்ரு, தயவுசெய்து கருத்துப் பகிர்வுக்கு அப்பாற்பட்ட, விடயத்தை திசைதிருப்பும் கருத்துக்களிற்கு பதில் சொல்வதைவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
அட...நீங்களுமோ சாமி.வீட்டில மாமி இன்னும் இந்தப் பதிவைக் காணேல்லப்போல.இருங்கோ சொல்லிக் குடுக்கிறன்.அப்ப சாமியாடும் !
எவனொருவன் மதத்தை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறானோ அவன் வாழ்க்கையை உலகில் வாழ தவறுகிறான்./
சரியான வார்த்தை
அப்படி சொல்லமுடியாது ஏனைய மதங்களும் தவறுகள் செய்கின்றன. சில கிறிஸ்தவ மதப்பிரிவுகள் மதமாற்றத்திற்காக எப்படியெல்லாம் செயல்படுகின்றன, இந்துசமயத்தில் பிராமணர்களையும், அடுத்ததாக வேளாளரையும் முன்னிலைப்படுத்தி தலித்துக்கள் போன்ற பிற்பட்ட சாதியினர் எனப்படுவோர் ஒடுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் இழிவுபடுத்தப்படுகின்றனரே.அகிம்சையை போதிக்கவேண்டிய புத்துபிக்குக்கள் இலங்கையில் எப்படியெல்லாம் செயற்படுகிறார்கள் இவையெல்லாம்கூட தவறுதானே. மொத்தத்தில் அனைத்து மதபீடங்களும் ஏதோ ஒருவிதத்திலாவது தவறுகின்றன. இவற்றையெல்லாம் ஆரோக்கியமான விவாதங்கள்மூலம் மக்களிற்கு புரியவைக்கவேண்டும்.
உண்மையிலேயே அவரிற்கு வேறு தண்டனைகள் வழங்கப்படாமல் அவர் விரும்பியபடி மத நீகம் மட்டுமே செய்யப்பட்டிருந்தால் சந்தோசம்.
முதலாவதாக அந்த கடையநல்லூர் ஜமாத் செய்தது தவறு. ஏனெனில், ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறினாலோ வெளியேற்றப்பட்டாலோ அவர் பெயர் காபிர் அல்ல. முர்த்தத்
ஒரு காலமும் முஸ்லீமாக இல்லாதவரே காபிர். இஸ்லாமிலிருந்து வெளியேறினால் முர்த்தத்.
முர்த்தத் என்று ஒருவரை ஜமாத் அறிவித்தால் அவரை கொல்ல வேண்டியது மற்ற முஸ்லீம்களின் மதக்கடமை. அந்த வகையில் கடையநல்லூர் ஜமாத் ஒரு மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டுள்ளது. இருந்தாலும் இஸ்லாமிய நீதிப்படி அது செய்தது தவறு.
இரண்டாவது இந்த நேரத்திலும் அவர் அங்கஹீனம் செய்யப்பட வேண்டும் என்றுதான் கூறியது. போலீஸ் தலையிட்டதால் அது மாற்றப்பட்டது. இஸ்லாமிய அரசாங்கம் இருந்திருந்தாலோ, அல்லது போலீஸ் முழுவதும் முஸ்லீம்களாக இருந்திருந்தாலோ அங்கஹீனம் நடந்திருக்கும். அதனால்தான் முஸ்லீம்கள் இருக்கும் இடங்களில் முஸ்லீம்களே போலீஸ்காரர்களாக இருக்க வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்கள் (சாதாரண முஸ்லீம்கள் அல்ல) கோருகிறார்கள்
மூன்றாவது காபிர் என்றால், அவரது கடையில் எந்த முஸ்லீமும் வாஙக்க்கூடாது, அவரது மனைவி அவருக்கு தானாக விவாகரத்து செய்யப்படுகிறார். அவரது குழந்தைகள் இனி அவரது குழந்தைகள் அல்ல என்று பொருள். இதனால்தான் காபிரை ஒரு முஸ்லீம் திருமணம் செய்துகொள்வதில்லை. அப்படி திருமணம் செய்தால் அவர் முஸ்லீமாக ஆகவேண்டும் என்று கோரப்படுகிறது.
நன்றி காட்டான், உங்களைப்போன்றவர்களது உற்சாகம்தரும் வார்த்தைகளும் நேர்மையான விவாதங்களை முன்வைக்கும் வாசகர்களும்தான் இதுபோன்ற விடயங்களை பொதுவெளியில் பேசும் தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறார்கள்.
புரிதலிற்கு நன்றி நண்பரே!
ஏன் ஐயா நான் நாகரிகமற்ற முறையிலா கருத்து இட்டிருக்கிறேன். உங்கள் கருத்துரையை பார்ப்பவர்கள் நான் நாகரிகமற்ற முறையில் கருத்துரை இடுபவன் என்று எண்ணத் தோன்றும் நான் தற்போது எவருக்கும் கருத்துரை இடுவதில்லை. ஒருசில அவசியமான பதிவுகளுக்கு மட்டுமே கருத்துரை இடுவதுண்டு. இப்பதிவிலும் சில விடயங்களை கருத்துரையிடலாம் என்று நினைத்திருந்தேன்.... பிழையிருந்தால் மன்னிக்கவும்
சந்ரு உங்களது பின்னூட்டத்திற்கு நான் எழுதிய பதில் உங்களை பற்றிய தப்பான அபிப்ராயம் ஏற்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. நீங்கள் இங்கு தப்பான விதத்தில் எதுவும் சொல்லவில்லையே. எனது பதில் தப்பான அர்த்தம் உண்டுபண்ணி இருந்தால் மன்னிக்கவும்
கீழே பின்னூட்டம் இட்டவர் உங்களை உசுப்பேத்திவிடும் நோக்கில் எழுதியிருந்ததால் உங்களை நிதானப்படுத்தவே அவ்வாறு எழுதினேன். நீங்கள் தாராளமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். அறிய ஆவலாக இருக்கிறேன்
தங்கள் கருத்திற்கு பகிர்விற்கு நன்றி நண்பரே
தகவலிற்கு நன்றி ரியாஸ்
//அப்படி சொல்லமுடியாது ஏனைய மதங்களும் தவறுகள் செய்கின்றன. சில கிறிஸ்தவ மதப்பிரிவுகள் மதமாற்றத்திற்காக எப்படியெல்லாம் செயல்படுகின்றன, இந்துசமயத்தில் பிராமணர்களையும், அடுத்ததாக வேளாளரையும் முன்னிலைப்படுத்தி தலித்துக்கள் போன்ற பிற்பட்ட சாதியினர் எனப்படுவோர் ஒடுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் இழிவுபடுத்தப்படுகின்றனரே.அகிம்சையை போதிக்கவேண்டிய புத்துபிக்குக்கள் இலங்கையில் எப்படியெல்லாம் செயற்படுகிறார்கள்//
மற்றய மதங்களில் இப்படியான கொடுமைகள் நடப்பதில்லையே என்று நான் சொன்னது மற்றய மதங்களில் தங்கள் மதங்களை விமர்சிப்பவர்களுக்கு கடையநல்லூரில் இஸ்லாமியருக்கு நடந்தது போல் தாக்குதல் நடக்காது.
வணக்கம் ரெவெரி நிரூபன் உங்களிற்கு சகோதரம், எனக்கு என் பையன்போல அப்படியாயின் உரிமையுடன் கிண்டல்பண்ணலாம்தானே. எனது கருத்துக்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டது சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் சிறப்புடன் பதிவுலகில் வலம்வர வாழ்த்துக்கள். உங்கள் பெயர்பற்றிய விளக்கத்திற்கு நன்றிகள்.
ஆம் சரியாக சொன்னீர்கள் ரெவெரி. மதங்களில் மட்டுமல்ல அரசியலில், சினிமா நட்சத்திரங்களில் தீவிர ரசிகராக என எதிலும் கண்மூடித்தனம்மான ஆதரவு அல்லது எதிர் நிலை தவறானது. நிதானமான பகுத்தறிவுடன் கூடிய நிலைப்பாடே சிறந்தது
ஆம் சிலகாலங்களின் முன் மாற்றி இருந்தேன்.
ஹேமா இப்படியா போட்டுக்கொடுப்பது. இதற்காக ஏற்கெனவே கொடுத்த பட்டங்களுடன் நாரதரையும் சேர்த்துக்கொள்ளவேணும்.
மிகவும் தெளிவாக இஸ்லாமிய மதக்கொட்பாடுகளுடனான விளக்கங்களுடன் நடுநிலையாக உங்கள் கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள். உங்களது பெயர் குறிப்பிடாததால் உங்களை சகோதரன் எனவா சகோதரி எனவா எப்படி அழைப்பது என தெரியவில்லை. மனம் திறந்த உங்கள் கருத்துப்பகிர்விற்கு நன்றிகள் பெயரிலி. தொடர்ந்தும் உங்கள் காத்திரமான கருத்துக்களை பதிவிடுங்கள்.
ஆஷிக், உண்மைதான் எந்த ஒரு விடயத்திலும் ஒருவர் ஒழிந்துகொண்டும் மறைத்துக்கொண்டும் கருத்து கூறுவது தவறுதான். ஆனால் அவர்களுக்கும் வெளிப்படையாகவே தமது கருத்துக்களை கூறும் சூழ்நிலையை நாம் வாழும் இந்த சமுதாயம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் அல்லவா? அப்படியான ஒரு காலம் வரும்போது யாரும் பயப்படாமல் தமது தரப்பு நியாயங்களை நேரடியாகவே கூறுவார்கள்.
இந்த சண்டைகளுக்கெல்லாம் முதற்காரணம் மனிதனின் பயம்தான். தன்னுடையதுதான் பெரியது சிறந்தது என்பதைவிட எங்கே தங்களுடையதைவிட மற்றவரது பலம் வாய்ந்ததாக இருந்து கடைசியில் தம்மையும் தன் சார் சமூகத்தையும் அழித்துவடுமோ என்கிற ஐய்யமே பெரிதாக வளர்ந்து நிற்கிறது.
நான் சொன்ன இந்த பயம் அறியாமையின் அடிப்படையில் அமைந்தது. அறிந்த பின்பும் தொடர்ந்து சண்டை போட்டால் அது சகிப்புத்தன்மை இல்லாத மனப்பக்குவமற்ற குணத்தையே காட்டுகிறது.
உண்மையை அறியாமல் ஒரு அர்த்தமில்லாத வார்த்தைகளை சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பதிவு அருமை.
பதிவில் சொல்ல பட்ட செய்திகள் உண்மைதானா, அதில் அர்த்தம் இருக்கிறதா என்று சோதித்து பார்த்தல், உண்மை கலந்த பொய்.முதலில் கருத்து சுதந்திரத்திற்கு வருவோம்.
உங்கள் பார்வையில் எது கருத்து சுதந்திரம்?
தி.க வினரும் தான் பல காலமாக இஸ்லாத்தை விமர்சிகின்றனர், அவர்களை முஸ்லீம்கள் கருத்தால் சந்திதார்களா இல்லை அடி உதை என்று இறங்கினார்களா? ஆனால் அவர்களுக்கு நாகரீகம் இருந்தது, ஆனால் கமுசிச வாதிகளிடம் அது இல்லை. அந்த கொள்கையை பின்பற்றினால் மற்றவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம போய்விடும் போல.
லூஸ் என்று அவர் குறிப்பிட்டதை பார்த்திருப்பீர்கள், இது போன்ற வார்த்தைகள் விமர்சிக்க உதவுமா திட்ட உதவுமா. இது போன்ற வார்தைகளிளிருந்தே தெரியவில்லை அந்த நபரில் நாகரிகமும் அருவருக்கத்தக்க செயலும்.அவரின் முழு பதிவிற்கு போகவில்லை, ஒரு வார்த்தை தலைப்பு மட்டும் அதுவே நாகரீகமாக இல்லை, பிறகு மற்றவைகளை சொல்ல வேண்டுமா?
இது போன்று கூறி கொண்டிருந்தாள் வேடிக்கை பார்க்க வேண்டுமா.உதாரணத்திற்கு லூஸ் என்ற வார்த்தையை உங்களுக்கு பயன்படுத்தினால் கருத்து சுதந்திரம் என்று கூறுவீர்களா அல்லது திரும்ப திட்டுவீர்களா?. சரியாக சிந்தித்து கூறுங்கள். ஜாமத்தின் செயல்பாடுகள் முழுமையாக சரியானதே. அந்த மன்னாங்கட்டியின் கருத்துக்களை கூறிய பிறகே எதிர்ப்பு வந்தது, கருத்துகளை கூற அனுமதிக்க வில்லை என்று கூறியதும் தவறு.
இந்த கருத்து சுதந்திரம் என்பதும் அளவுகொளுடன் இருக்க வேண்டும். அந்த கிறுக்கு குணம் கொண்டவர் செய்தது கருத்து அல்ல. அவதூறு.
உங்களுக்கு முதலில் கருத்திற்கும் அவதூருக்கும் வித்தியாசம் தெரியும் என நினைக்கிறன்.
நீங்களும் மேற்குலக அடக்குமுறை சிந்தனை கொண்டவர் என்பதை வெளிப்படுத்தி விட்டீர்.
தன் சுதந்திரத்திற்காக போராடும் ஹமாஸ் என்ற இயக்கத்தை கொச்சை படுத்தி விட்டீரே, அவர்கள் மத பிரச்சாரம் செய்யவில்லை அடக்குமுறைகளை எதிர்த்து போர் புரிகின்றனர்,
ஹமாஸ் இயக்கம் எந்த வகையில் மத பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை கூற கடமை பட்டுல்லீர்கள்.
//தனது மதத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார் என்பதற்காக அவரது சொந்த ஊரின் ஜமாத் அவரிற்கு கொடுமையான தண்டனையை வழங்கியது.//
என்ன கொடுமையான தண்டனை, ஜெயலலிதா சசிகலாவ நீக்கியது கொடுமையான தண்டனையா? என்ன சார் அர்த்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்.
இதனை தெளிவு படுத்த கடமை பட்டுள்ளீர்கள்.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது மதங்களும், காப்புறுதிக்கூட்டுத்தாபனங்களும் மனிதனது பயம் எனும் இயல்பை மூலதனாமாக்கியே தமது இருப்பை நிலைநிறுத்திக்கொள்கின்றன.
நிச்சயமாக அறியாமையினால் ஏற்படும் பயத்தை போக்க அறிவூட்டல் அவசியம். தூங்குபவனை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குவதுபோல நடிப்பவனை எழுப்பமுடியாது. மதம் சார்பாக மட்டுமன்றி எந்த ஒரு விடயத்திலும் (உதாரணத்திற்கு கணவன் மனைவியிடையேகூட) தவறை தவறு என்று தெரிந்தும் சகிப்புத்தன்மை இல்லாமையினால் அல்லது மாற்றுக்கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமையால் ஏற்க மறுப்பவர்கள் தமது வாழ்வையும் தம்மை சுற்றியிருப்பவர்களது வாழ்வையும் சிக்கலும் சிதைவுகளும் நிறைந்தது ஆக்குகிறார்கள்.
வணக்கம் கார்பன் கூட்டாளி, நான் அந்த நபர் சொன்னது சரி தவறு என்பதை ஆராயவில்லை. கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தினேன். நாய் குரைத்தால் நாமும் பதிலுக்கு குரைத்தால் பகுத்தறிவுடைய மனிதர் நாம் என்பதில் அர்த்தமில்லாதுபோய்விடும். ஒரு தவறை மற்றொரு தவறால் நியாயப்படுத்தி ஈடு செய்வது நியாயமல்லவே. அவர் செய்தது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதற்காக அவரை இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற்றியது மட்டுமே செய்திருந்தால் சந்தோசம் என ஆஷிக் அவர்களுக்கு பதில் கூறும்போதே எழுதியிருந்தேன்.
இந்த விடயத்தில் ஒருசிலர் விலத்தியதை தவிர எதுவுமே நடக்கவில்லை என்கிறீர்கள், பத்திரிகை கருத்து வேறுவிதமாக உள்ளது, உங்களுக்கு முன் மேலே கருத்திட்ட Anonymous அன்பர் சற்று வேறுபட்ட விதமாக கருத்துரைக்கிறார்.
வழமையாக இதுபோன்ற விடயத்திற்கு
//இஸ்லாமிலிருந்து வெளியேறினால் முர்த்தத்.
முர்த்தத் என்று ஒருவரை ஜமாத் அறிவித்தால் அவரை கொல்ல வேண்டியது மற்ற முஸ்லீம்களின் மதக்கடமை.//
//இரண்டாவது இந்த நேரத்திலும் அவர் அங்கஹீனம் செய்யப்பட வேண்டும் என்றுதான் கூறியது. போலீஸ் தலையிட்டதால் அது மாற்றப்பட்டது. இஸ்லாமிய அரசாங்கம் இருந்திருந்தாலோ, அல்லது போலீஸ் முழுவதும் முஸ்லீம்களாக இருந்திருந்தாலோ அங்கஹீனம் நடந்திருக்கும்.// என்று கூறுகிறார்.
இதுபோன்ற தண்டனைச் சட்டங்கள் மனித நேயத்திற்கு அப்பாற்பட்டதல்லவா. பெரும்பாலும் அனைத்து மத கோட்பாடுகளும் மத சட்டங்களும் பல நூற்றாண்டுகளிற்கு முன் அன்றைய வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை.
நாம் தினமும் உணவிற்காக கொல்லும் கோழியையும் ஆட்டையும், பலி என்ற பெயரில் கோவில்களில் கொல்வதை மனிதாபிமானம் இல்லாத செயல் என எதிர்க்கிறோம். கொலை செய்தவனிற்குக்கூட மரணதண்டனை கொடுப்பது தவறு மனித உரிமையை மீறும் செயலாகும். தவறுகளிற்கான தண்டனை தவறு செய்தவன் திருந்தி வாழ்வதற்குரிய வழிமுறைகளுடன் சேர்ந்ததாக அமைய வேண்டுமென வாதிடுகிறோம்.
ஆனால் ஒருவன் குற்றம் செய்ததாக ஜமாத் அறிவித்தால்... குற்றத்திற்கு ஏற்றாற்போல குற்றம் செய்தவரை கொல்வதுவும் அங்கவீனமாக்குவதுவும் முஸ்லீம்களின் மதக்கடமை என்று இப்பொழுதும் கூறுவது மிகவும் பிற்போக்குத்தனமானது அல்லவா. நாம் இன்னமும் கருத்தியல்ரீதியாக வளர்ச்சி அடையாத கற்கால மனிதர்களா? மதக்கோட்பாடுகளிலும் காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவை.
நீங்கள் விஞ்ஞான பூர்வமான விடயங்களையும் நவீன கண்டுபிடிப்புகளையும் தத்துவங்களையும் சரி பிழைகளயும் அலசி ஆராய்ந்து எழுதுபவர். உங்களது பதிவுகளை நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் இங்கு கூறிய கருத்துக்கள் ஆச்சரியம் தருகிறது.
தவறான புரிந்துகொள்ளலிற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பரே!
இங்கு சில இஸ்லாமிய சகோதரர்கள் அந்த நபரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றியதை தவிர அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள்.
ஆனால் அவர் செய்த குற்றத்திற்கு அங்கவீனமாக்கப்படவேண்டும் என ஜமாத் அறிவித்து மக்களும் அவரை தாக்கியிருந்தால் அது மிகவும் தவறான செயல் குற்றத்திற்கு ஏற்றாற்போல குற்றம் செய்தவரை கொல்வதுவும் அங்கவீனமாக்குவதுவும் முஸ்லீம்களின் மதக்கடமை என்று இப்பொழுதும் கூறுவது மிகவும் பிற்போக்குத்தனமானது. நாம் இன்னமும் கருத்தியல்ரீதியாக வளர்ச்சி அடையாத கற்கால மனிதர்களா? சைவ சமயத்தில்கூட ஆடு கோழிகளை கோவில்களில் பலியிடுவது நிறுத்தப்பட வேண்டும்.
மதக்கோட்பாடுகளிலும் காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவை.
ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதை நம் சமூகம் மறுக்கத் துணிந்ததின் தண்டனையே இச்சண்டைகள். சமுதாய சமூக கட்டமைப்பினுள் நம் ஒவ்வொருவருக்கும் உண்டான அந்தஸ்துக்கு அப்பால் "மனிதம்" என்கிற மகத்தான சக்தியின் வெளிப்பாடான அன்பு, நேசம், மதிப்பு, மரியாதை போன்ற எண்ணற்ற உணர்வுகளை மதிக்க கற்றுக்கொண்டாலே போதுமானது.
ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கிற அல்லது இருந்த மனிதம் எனும் நற்பண்பை இக்காலங்களில் பலாதரப்பட்ட மதங்கள் எனும் தனியார் கூட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து தரகு வேலைகளில் இறங்கியதும் இச்சண்டைகளின் மற்றுமொரு அசிங்கமான காட்சி.
தலைப்பில் புத்தமதம், ஜைனமதம் -இரண்டையும் சேர்த்தால் என்ன?
(சில அரைவேக்காடுகள் எல்லோரும் புத்தசமயத்தில் சேர்ந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என்றமாதிரி எழுதுவதை வாசித்து வெறுத்துவிட்டது. அவர்கள் போகவேண்டியது இலங்கை அல்லது மியான்மார்)
//இந்த விடயத்தில் ஒருசிலர் விலத்தியதை தவிர எதுவுமே நடக்கவில்லை என்கிறீர்கள், பத்திரிகை கருத்து வேறுவிதமாக உள்ளது,//
பத்திரிக்கை கருத்தும் அதே போன்று தான் இருக்கிறது சகோ.
//உங்களுக்கு முன் மேலே கருத்திட்ட Anonymous அன்பர் சற்று வேறுபட்ட விதமாக கருத்துரைக்கிறார். //
anony எனும் போதே தெரியவில்லையா, அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்க கூடாதுன்னு.
//இரண்டாவது இந்த நேரத்திலும் அவர் அங்கஹீனம் செய்யப்பட வேண்டும் என்றுதான் கூறியது. போலீஸ் தலையிட்டதால் அது மாற்றப்பட்டது. இஸ்லாமிய அரசாங்கம் இருந்திருந்தாலோ, அல்லது போலீஸ் முழுவதும் முஸ்லீம்களாக இருந்திருந்தாலோ அங்கஹீனம் நடந்திருக்கும்.// என்று கூறுகிறார்.//
இதேவேல்லாம் பொய். அங்கிருந்த மக்கள் தான் கோவத்தில் இருந்தார்களே தவிர, ஜாமாத் தான் போலீசிற்கு தெரிவித்தது. முஸ்லீம்களை கெட்டவர்கள் என சித்தரிக்க அவர்கள் கையாண்ட வழிமுறைகள், கவின் மலர் என்ற நபர் பேஸ்புக்கில் பொய் தகவலை பரப்பி அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என பார்த்துள்ளார்.
எல்லாம் forgery க்ரூப்.
//இதுபோன்ற தண்டனைச் சட்டங்கள் மனித நேயத்திற்கு அப்பாற்பட்டதல்லவா. பெரும்பாலும் அனைத்து மத கோட்பாடுகளும் மத சட்டங்களும் பல நூற்றாண்டுகளிற்கு முன் அன்றைய வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. //
தண்டனையே இல்லை என்று கூறுகிறேன், அதற்குள் மனித நேயத்திற்கு சென்று விட்டீர்கள்.
//கொலை செய்தவனிற்குக்கூட மரணதண்டனை கொடுப்பது தவறு மனித உரிமையை மீறும் செயலாகும். தவறுகளிற்கான தண்டனை தவறு செய்தவன் திருந்தி வாழ்வதற்குரிய வழிமுறைகளுடன் சேர்ந்ததாக அமைய வேண்டுமென வாதிடுகிறோம். //
இதில் எனக்கு உடன்பாடு இல்லை.காசுக்காக அல்லது சுய தேவைக்காக கொலை செய்பவன் திருந்துவான் என நினைகிரீர்களா? நினைத்து கொண்டே இருந்தால் அதற்குள் அவன் பல உயிர்களை எடுத்து விடலாம். அது போன்றவர்களுக்கு மரண தண்டனையை அவசர படுத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
//ஆனால் ஒருவன் குற்றம் செய்ததாக ஜமாத் அறிவித்தால்... குற்றத்திற்கு ஏற்றாற்போல குற்றம் செய்தவரை கொல்வதுவும் அங்கவீனமாக்குவதுவும் முஸ்லீம்களின் மதக்கடமை என்று இப்பொழுதும் கூறுவது மிகவும் பிற்போக்குத்தனமானது அல்லவா. நாம் இன்னமும் கருத்தியல்ரீதியாக வளர்ச்சி அடையாத கற்கால மனிதர்களா? மதக்கோட்பாடுகளிலும் காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவை.//
மாறுதல்கள் இருந்தால் அது மனிதனால் உருவாக்க பட்டது என்று பொருள், பிறகு எதற்கு மத கோட்பாடு அரசியல் சட்டத்தையே வைத்து கொள்ளலாமே.
மதம் மாறினால் மரண தண்டனையா?
http://tamilmuslimway.blogspot.com/2011/05/blog-post_26.html
இதை பார்த்தல் உண்மையில் மதம் மாறினால் மரண தண்டனையா என்பது புரியும்.
இது போன்று பொய் பிரச்சாரம் செய்து பிழைப்பு நடத்துபவர்களை கூறும் கருத்துக்களை அலசாமல் ஏமாந்து விடாதீர்கள். அந்த கும்பல் விளம்பரம் தேட முயற்சிக்கிறது.
//நீங்கள் விஞ்ஞான பூர்வமான விடயங்களையும் நவீன கண்டுபிடிப்புகளையும் தத்துவங்களையும் சரி பிழைகளயும் அலசி ஆராய்ந்து எழுதுபவர். உங்களது பதிவுகளை நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் இங்கு கூறிய கருத்துக்கள் ஆச்சரியம் தருகிறது.//
நான் கூறிய கருத்துக்களில் என்ன பிழை என்று தெளிவாக கூறலாமே.
உண்மையை அழகாக உங்கள் பாணியில் சொல்லி உள்ளீர்கள் சார் ! நன்றி !
நன்றி.இதற்கெல்லாம் மன்னிப்பு எதற்க்கு.
//மதக்கோட்பாடுகளிலும் காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவை//
முழுமையாக ஏற்க்கிறேன். ஒரேஒரு மதத்தை தவிர இதர மதங்கள் தங்களை சீர்திருத்தியே வருகின்றன. சீர்திருத்தமில்லாவிடில் விஞ்ஞானம் கதைப்பவனும் மதவெறியனாகிவிடுவான்.
அன்புள்ள சகோதரர் அம்பலத்தார் அவர்களே,
**||**
முர்த்தத் என்று ஒருவரை ஜமாத் அறிவித்தால் அவரை கொல்ல வேண்டியது மற்ற முஸ்லீம்களின் மதக்கடமை.
**||**
என்று நான் சொல்லிவிட்டு,
**||**
இஸ்லாமிய அரசாங்கம் இருந்திருந்தாலோ, அல்லது போலீஸ் முழுவதும் முஸ்லீம்களாக இருந்திருந்தாலோ அங்கஹீனம் நடந்திருக்கும்.
**||**
என்று உடனே வேறு ஒன்றை கூறி உங்களை குழப்பி விட்டுட்டேன்.
தவறுக்கு என்னை தயவு செய்து மன்னிக்கவும் அம்பலத்தார்.
காரணம்,
'அங்கஹீனம்' என்பதை
'மரண தண்டனை'
என்று தவறாக விளங்கி விட்டேன்.
//இது போன்று பொய் பிரச்சாரம் செய்து பிழைப்பு நடத்துபவர்களை கூறும் கருத்துக்களை அலசாமல் ஏமாந்து விடாதீர்கள்.//
சொல்பவருக்கே பொருந்துகிறதே..
http://www.youtube.com/watch?v=ZGQKU_39m6U&feature=player_embedded#!
சவுதி அரேபிய ப்ளாக் எழுதுபவர் ஹம்ஸா கஷ்காரி தனது ட்விட்டர் பக்கத்தில் மிலாதுன் நபி (நபி பிறந்தநள் கொண்டாட்டத்தின் ) போது சில ட்விட்டுகளை எழுதினார்.
“நீங்கள் செய்த சில விஷயங்களை பாராட்டுகிறேன். சில விஷயங்களை வெறுக்கிறேன். பல விஷயங்களை புரிந்துகொள்ளவில்லை”
”உங்களுக்காக நான் தொழ மாட்டேன்”
On the occasion of the Muslim prophet's birthday last week, 23-year-old Hamza Kashgari tweeted: "I have loved things about you and I have hated things about you and there is a lot I don't understand about you."
"I will not pray for you," he added.
இதற்காக அவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சவுதி அரேபிய ஷேக்குகள் அழுகிறார்கள்.
அரேபியனின் மலம் கூட கூட சந்தனமாக மணக்கிறது என்று தமிழில் பிரச்சாரம் செய்யும் சுவனப்பிரியன் போன்றவர்கள் இதனையும் பாராட்டுவார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து அரேபியா வரைக்கும் ஒரே இஸ்லாம்தான்.
கார்பன் கூட்டாளி, முஹம்மது ஆஷிக் போன்றவர்கள் இஸ்லாம் அமைதியான மார்க்கம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
எப்படிப்பட்ட அமைதி என்பதை நீங்கள்தான் முடிவு செய்துகொள்ளவேண்டும்.
அன்பர்களே நண்பர்களே,
நான் எனது கருத்துக்களை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள்.
குரான்-4:137
"நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை."
இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம். ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார். பின்னர் மதம்
மாறி விடுகிறார். இப்போது 'அவர் கொல்லப்பட வேண்டும்' என்பது சட்டம் என்று இருந்திருக்குமேயானால்,
அடுத்து அவர் இறை நம்பிக்கை கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்.........
இப்படி எதற்குமே வழியில்லாமல் போய் விடும்.
நம்பிக்கைக் கொள்கிறார்
பிறகு மறுக்கிறார்
மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
அதையும் மறுத்து வெளியேறுகிறார்
பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார் என்று இறைவன்
சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது. "கொல்லப்பட வேண்டும்" என்ற
புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.
குரான்-3:91
(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை (மறுமையில்-நரகில்) உண்டு. அவர்களுக்கு (அங்கே) உதவுவோர் யாருமில்லை.
நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த
வசனத்தையும் முன் வைத்துள்ளார். நம்பிக்கை கொண்டபின் நிராகரிப்பவர்கள் கொல்லப்பட
வேண்டும் என்றால் "நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ.." என்ற வார்த்தைக்கு
அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே இஸ்லாத்தை ஏற்று பிறகு மதம் மாறி
போனவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டமல்ல என்பதை நான் விளங்கிக்கொண்டேன்.
தவறான என் கருத்துக்கு அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.
அருமை அம்பலத்தார்
மதத்திற்கும் கடவளுக்கும் உள்ள வேறுபாடு அறியாமல் போய்விட்டோம். இந்து மதம் இந்துசமவெளி வழிதோன்றல்களின் மதம்.
மதம் மனிதனை செம்மை படுத்துகிறது.கடவுள் இடைசொருகல் மதத்தின் மீது பயம் அல்லது பற்று கொண்டுவர கையாள பட்டிருக்கலாம்.
சுயக்கட்டுப்பாடு புத்தி உள்ளவனுக்கு மதம் தேவையில்லாத ஒன்று.
மதம் விட்டு மனிதம் வளர்ப்போம் மனிதம் காப்போம்.
வணக்கம் கார்பன் கூட்டாளி, சில அன்பர்கள் E.Mail மூலம் அனுப்பியிருந்த கீழே இணத்திருக்கும் தொடுப்புக்களை படித்ததில், நீங்கள் இஸ்லாமிய மதக்கோட்பாடுகள் பற்றி கூறி அறியும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறான கருத்துக்களை அல்லவா தெரிவிக்கின்றன
மத அடிப்படைவாதம் பேசுவோர் சிந்திக்க வேண்டாமா? இதையும் படிச்சு பாருங்க
இந்த youtube செய்தி படத்தையும் பாருங்கோ
saudi-writer-detained-after-tweets-about-muhammad
காத்தான்குடி இஸ்லாமிய அடிப்படைவாதம், முஸ்லீம் சிறுமிகளைக் குதறியது
why-i-am-not-muslim தமிழ் வடிவம்
இதையும் படிச்சு பாருங்க
மனிதம் பற்றியும் மதங்கள் பறியும் சுருக்கமாகவும் தீர்க்கமாகவும் கருத்துரைத்திருக்கிறீர்கள் நன்றி.
உங்கள் கருத்திற்கு நன்றி. நீங்கள் தலைப்பை சரியாக கவனிக்கவில்லைபோல தெரிகிறது புத்த மதமும் அதில் சேர்க்கப்பட்டே இருக்கிறது
உங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் நன்றி தனபாலன்
தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களையும் ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி. உங்களது கருத்துக்கள் உங்களுக்கு இஸ்லாமிய மதக்கோட்பாடுகளில் இருக்கும் அறிவை உணர்த்துகிறது. அநேகமாக நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருக்கக்கூடும். நீங்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கும் செய்திகள், நீங்கள் உங்களை மறைத்துக்கொண்டு எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தை புரியவைக்கிறது.
அனைத்து மக்களுக்குமான கருத்துச்சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் கிடைக்க குரல் கொடுக்கவேண்ண்டியது அனைவரது கடமை.
சுருக்கமான அருமையான விளக்கத்திற்கு நன்றி அபி
+++அநேகமாக நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருக்கக்கூடும்.+++
இல்லை, தோழர் அம்பலத்தார். முற்றிலும் தவறான கணிப்பு உங்களுடையது.
+++மறைத்துக்கொண்டு எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தை புரியவைக்கிறது.+++
நிர்பந்தம் ஒன்றும் இல்லை தோழர். நாம் இப்போதுதான் கற்றுக்கொண்டு இருக்கிறோம். தவறு ஏதும் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால், அடுத்து என்ன நாம் எழுதினாலும் அதை தவறாக இருக்குமோ என்று நினைப்பார்கள்.
இங்கே பெயர் இல்லாமல் சொன்னதை, அது சரி என்று ஆகிவிட்டால், இன்னொரு தளத்தில் பெயரோடு சொல்வேன். ஹி..ஹி..ஹி..
//சில அன்பர்கள் E.Mail மூலம் அனுப்பியிருந்த கீழே இணத்திருக்கும் தொடுப்புக்களை படித்ததில், நீங்கள் இஸ்லாமிய மதக்கோட்பாடுகள் பற்றி கூறி அறியும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறான கருத்துக்களை அல்லவா தெரிவிக்கின்றன //
இதே போன்று ஆயிரம் ஈமெயில் வரும், இது போன்று பல சுட்டிகளை கூட என்னால் காண்பிக்க முடியும்.
முஸ்லீம்களை நல்லவர்கள் என்றோ ஒன்றும் அறியாதவர்கள் என்றோ நான் இங்கு சான்றிதல் கொடுக்க வரவில்லை, பாத்வா க்கள் கூட சரியாகத்தான் கொடுப்பார்கள் என்றும் கூறவில்லை, அனைவரும் மனிதர்களே தவறுகள் வரும்தான். திரித்தி கொள்வது தான் சரியாக இருக்கும்.
இதுவல்லாமல் இஸ்லாத்தில் குறை கண்டு பிடிப்பதற்காகவே ஒரு பெரும் கூட்டம் பொய் சொல்லி கொண்டு திரிகிறது, லாவகமாக பொய் கூறும் கூட்டம்.
நீங்கள் கூறுவது படி முஸ்லீம்கள் தவரிளைக்கிரார்கள் என்றால் முஸ்லீம்களை பற்றியல்லவா நீங்கள் கூறி இருக்க வேண்டும், எதற்காக உங்கள் தலைப்பில் இஸ்லாம் வருகிறது???????????????????????????????
உலகை ஏமாற்றும் கருப்பு ஆட்டு கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளாதீர்கள். தாளிபான்கலையோ பாகிஸ்தானையோ என்றுமே நாம் ஆதரித்தது இல்லை, அவர்கள் செய்வது தவறுதான். ஆனால் தாலிபான்களை வசைபாடும் கூட்டம் அமெரிக்க அட்டுழியங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் வேதனையாக உள்ளது. தாலிபான்கள் கொலை செய்ததாக ஒருவரை காண்பிக்கும் போது வெகுண்டு எழும் கூட்டம், அமெரிக்காவின் லட்சகணக்கான படுகொலைகளை கண்டுகொள்ள வில்லையே என்று தான் ஆதங்கம்.
மேலும் சகோ. தருமி அவர்களின் பதிவுகளை ஆதாரமாக காட்டாதீர்கள், அது தகுதி இல்லாத பதிவுகள். வேண்டுமென்றால் அவைகளை படித்து பாருங்கள், பிறகு நீங்களாகவே உண்மையில் அவைகள் புத்தகத்தில் இருக்கின்றதா என்று ஆராய்ந்து பாருங்கள், அதிலயே அதிகபட்சம் புரிந்து விடும், அதன் பிறகு ஏதேனும் தவறு இருந்தால் என்னிடம் கேளுங்கள், முழுமையாக விளக்க கடமை பட்டுள்ளேன். என்னால் விளக்க முடிய வில்லை எனினும், விளக்கம் கேட்டாவது உங்களுக்கு விளக்கமளிக்கிறேன்.
யார் கூறுவதையும் அப்படியே ஏற்று கொண்டு அதை பரப்ப வேண்டாம். சரி பார்த்த பின்னர் பரப்பவும்.
"கடவுளை முழுமையாக நம்புவதற்கும்,அதுபற்றிய போதனைகளை சொல்வதற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் அதே உரிமை, மதங்களை எதிர்ப்பவனுக்கும், எதிர்த்துக் கருத்துச் சொல்பவனுக்கும் இருக்கு என்பதனை ஏற்றுக்கொள்ள மறுப்பது தவறில்லையா?"
மனதைத் தொட்ட வரிகள் அம்பலத்தார். மதம் என்பதை மட்டும் ஏன் ஒரு வட்டத்துக்குள் சமூகம் வைத்திருக்கிறது என்பது புரியவில்லை. மனிதன் தன் வயிற்றுப்பசியை ஆற்ற உண்ணும் உணவிற்கு கொடுக்கும் மதிப்பை மரியாதையைக் கூட, மதத்திற்கு கொடுப்பதில்லை. தமக்கோ அல்லது ஒரு விருந்தாளிக்கோ சமையல் செய்யும் போது அவரவர் விருப்பங்கள் முன்னிலைப் படுத்தப் படுகின்றன. மதம் மனிதனின் மனத்தை வெளிப்படுத்தும் அல்லது பிரதிபலிக்கும் கண்ணாடி, தவிர ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவுக்குப் பாலம் - பலமாகக் கட்டப்படவேண்டியது - மதம் பற்றிய சிந்தனை, அவரவர் பிறப்பு, சூழ்நிலை, மதம் சார்ந்த அறிவின் தரம் உட்பட வித்தியாசப்படும். தன் பசியை விடுத்து, அடுத்தவர் பசியை உணர முடியாத பிறப்பாக மனிதன் இருக்கும் வரை இவ்வாறான இழிவான செயல்கள் இம்சை தான்
காபிர் என்று அறிவிக்கப்பட்டு அப்புறம், கட்டி வைத்து அடித்து உதைத்து கைகால் வெட்டப்பட்டு அங்கஹீனம் செய்யப்பட்டதாக, போலிசால் உயிர் காப்பாற்றப்பட்டு பின்னர் மனிதநேய கம்யூனிச நாத்திகர்களால் தலைமறைவாக பாதுக்கக்கப்படுவதாக அனைவராலும் கூறப்பட்ட அந்த நபரின் தற்போதைய நிலை! இதோ, இந்த சுட்டியில் தெளிவாக உள்ளது!
http://kadayanallur.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA/
//உலகை ஏமாற்றும் கருப்பு ஆட்டு கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளாதீர்கள். தாளிபான்கலையோ பாகிஸ்தானையோ என்றுமே நாம் ஆதரித்தது இல்லை, அவர்கள் செய்வது தவறுதான். ஆனால் தாலிபான்களை வசைபாடும் கூட்டம் அமெரிக்க அட்டுழியங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் வேதனையாக உள்ளது. தாலிபான்கள் கொலை செய்ததாக ஒருவரை காண்பிக்கும் போது வெகுண்டு எழும் கூட்டம், அமெரிக்காவின் லட்சகணக்கான படுகொலைகளை கண்டுகொள்ள வில்லையே என்று தான் ஆதங்கம்.//
//முஸ்லீம்களை நல்லவர்கள் என்றோ ஒன்றும் அறியாதவர்கள் என்றோ நான் இங்கு சான்றிதல் கொடுக்க வரவில்லை, பாத்வா க்கள் கூட சரியாகத்தான் கொடுப்பார்கள் என்றும் கூறவில்லை, அனைவரும் மனிதர்களே தவறுகள் வரும்தான். திரித்தி கொள்வது தான் சரியாக இருக்கும்.//
வணக்கம் சகோ கார்பன் கூட்டாளி இப்பொழுது நீங்க சரியான கருத்திற்கு வந்திருக்கிறீகள். ஒவ்வொரு சமுதாயத்திலும் சரியும் தவறும் இருக்கிறது அவற்றை ஆரோக்கியமான முறையில் விவாதித்து ஆவன செய்ய வேண்டும். நான் இஸ்லாமிய உலகை அமெரிக்காவும், மேற்குலகும் தமது நலன்களுக்காக மோசம் செய்வதை எதிர்க்கிறேன். சுரண்டலுக்கு எதிராகவும் அமெரிக்க ஐரோப்பிய தில்லுமுல்லுகளிற்கு எதிராகவும் போராடுபவர்கள் சுரண்டப்படும் இஸ்லாமிய மக்களிற்காகவும் போராட வேண்டும் என்பதே எனது அவா ஆனால் அதற்கு இஸ்லாமிய சமுதாயத்திடமிருந்தும் மற்றவர்கள் பற்றிய புரிதல் வேண்டும்.
பரா மதம்பற்றிய உங்கள் விரிவான ஆணித்தரமான கருத்துக்களுக்கு நன்றி. ஆம் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலுள்ள உறவு சம்பநதாமான எண்ணங்களிலுள்ள மாறுபாடு இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம்
Today is documentation weather, isn't it?
ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதை நம் சமூகம் மறுக்கத் துணிந்ததின் தண்டனையே இச்சண்டைகள். சமுதாய சமூக கட்டமைப்பினுள் நம் ஒவ்வொருவருக்கும் உண்டான அந்தஸ்துக்கு அப்பால் "மனிதம்" என்கிற மகத்தான சக்தியின் வெளிப்பாடான அன்பு, நேசம், மதிப்பு, மரியாதை போன்ற எண்ணற்ற உணர்வுகளை மதிக்க கற்றுக்கொண்டாலே போதுமானது. ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கிற அல்லது இருந்த மனிதம் எனும் நற்பண்பை இக்காலங்களில் பலாதரப்பட்ட மதங்கள் எனும் தனியார் கூட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து தரகு வேலைகளில் இறங்கியதும் இச்சண்டைகளின் மற்றுமொரு அசிங்கமான காட்சி.
Post a Comment