இன்று எழுத்தின் சிகரம் சுஜாதாவின் நினைவு நாள்.
மண்ணுலகைவிட்டு நீங்கியது ( 27-02-008).
சுஜாதா நான்கு வருடங்களின்முன் தன் உடலால் இவ்வுலகைவிட்டு மறைந்துபோனார். ஆனாலும் இப்புவி உள்ளவரை தமிழ் உள்ளவரை அவரது படைப்புக்களினூடாக வாழ்ந்துகொண்டே இருப்பார்.
என்னையும் எழுதத்தூண்டிய, எனது எழுத்துக்களின் முன்மாதிரி, ரோல் மாடல் எழுத்தாளர் சுஜதா என்று சொல்லிக்கொள்வதில் என்றும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நினைவாக....
அவரது எழுத்துக்களின் தாக்கம் பற்றி முன்பொருதடவை எழுதிய பதிவொன்றை அவரது நினைவாக இன்று மீள்பதிவு செய்கிறேன்.
எழுத்து
ஒரு தவம்
ஒரு பிரசவம்
ஒரு ஊற்று.
ஒரு சிறந்த எழுத்தாளரின் படைப்புக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அடிக்கடி என்மனம் அசைபோடும்
ஒரு எழுத்தாளனது படைப்பு எப்படி இருக்க வேண்டுமென்றால்................
அவனது ஆக்கமொன்றை வாசகன் படிக்கத் தொடங்கினால் படிப்பவனது சிந்தனை அந்தப்பக்கம் இந்தப் பக்கம் போகக்கூடாது!
அதைப் படித்து முடிக்காமல் புத்தகத்தை மூட மனம் வரக்கூடாது!
படித்து முடிச்சிட்டால் அந்தப்படைப்பு அடிக்கடி ஞாபகத்தக்கு வந்து மனசு அதைப்பற்றி அசை போட வேணும்!
இனி இந்த எழுத்தாளரின் அடுத்த படைப்பை எப்போ படிப்பேன் என்றதொரு தவிப்பு இருக்க வேண்டும்!
படைப்புக்குப் படைப்பு வித்தியாசமானதாய் இருக்க வேணும்!
அதோட ஒரு சின்னச் செய்தியாவது தொட்டுச் செல்லப்பட்டிருந்தால் இன்னமும் நல்லது!
இப்படி எல்லாம் இருக்கிறமாதிரி எவனொருத்தனாலை எழுத முடியுதோ என்னைப் பொறுத்தளவிலை அவன் சிறந்த எழுத்தாளன் என்று சொல்லுவேன்.
நடிப்பின் சிகரம் சிவாஜி என்றால்
எழுத்தின் சிகரம் சுஜாதா என்பேன்.
நடிப்பில் சிவாஜி ஏற்காத பாத்திங்கள் இல்லையென்பதுபோல
எழுத்தில் சுஜாதாவின் கை படாத துறைகள் இல்லையென்பேன்
சிறுகதை, நாவல், விஞ்ஞானக்கதைகள், நாடகங்கள், அறிவியல் கட்டுரைகள், திரைக்கதைவசனம், சங்ககால இலக்கியங்கள்............. என அந்தச் சிகரம் தொட்டுச் செல்லாத விசயம் இல்லை.
தள்ளாதவயதில் இறக்கும்வரையிலும் யவானிக்கா எனவும், கற்றதும் பெற்றதும் எனவும் இளமைததும்பும் சினிமாக் கதை வசனம் என்றும் எழுத அந்த வயோதிப இளைஞன் ஒருவனால்தான் முடியும் என்பேன்.
இதெல்லாம் எப்படி இந்த வயதிலும் அவரால் சாதிக்க முடிகிறது என்று
சிந்தித்ததில்................
மனத்தளவில் என்றும் இளைஞனாக இருந்த அவருக்கு என்றும் இருந்த தேடுதல் வேட்கையும்!
ஏவுகணைத் தொழில் நுட்பம் முதல் ஆழ்வார் பாசுரங்கள்வரை அவருக்கு இருக்கும பரந்த அறிவும்!
அப்துல்கலாம் முதல் இராப்பிச்சை இராமசாமிவரை தான் காணும் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு சம்பவத்தையும் ஆழ்ந்து நோக்கும் பண்புமே என்பேன்.
ஆதலினால்
எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற கனவுடன் வலம் வரும், அல்லது எழுத்தாளன் என்ற போதையில் மயங்கியிருக்கும் என் உறவுகளே!
உங்கள் கனவுகள் பலிக்க!
உங்களுக்குத் தெரிந்த விடயங்களின் எல்லையைப் பெருக்கிக் கொள்ளுங்கோ!
பல மொழிகளிலும் உள்ள வித்தியாசம் வித்தியாசமான படைப்புக்களை நிறையப் படியுங்கோ!
அதற்குரிய வசதியும் வாய்ப்பும் இல்லாதவை நம்ம சுஜாத்தாவைப் படியுங்கோ அவர் காட்டிய யுக்திகளே வற்றாத கடலாயிருக்கு. எங்கட வீட்டு நூலகத்திலையே அவரின்ரை நாற்பது ஐம்பதுக்கு மேற்பட்ட வேறுபட்ட படைப்புக்கள் இருக்குதெண்டால் .............
உலக அறிவை வளர்த்துக் கொள்ளுங்கோ!
உங்களைச் சுற்றியிருக்கிறவையை உற்று நோக்குங்கோ!
மெல்லக் கனவு நனவாகத் தொடங்கும்.
அம்பலத்தார்
38 comments:
//எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற கனவுடன் வலம் வரும், அல்லது எழுத்தாளன் என்ற போதையில் மயங்கியிருக்கும் என் உறவுகளே!//
என்ன பாஸ் இது காமெடியா இருக்கே! இப்பிடி எல்லாம் வேற நடக்குதா?:-)
சுஜாதா பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையே!
எல்லோருமே நிறைய வாசிக்க வேண்டும் என்பது பற்றிச் சொன்னதுக்கு ஒரு சல்யூட்!!
வணக்கம் அம்பலத்தார்.
அரிய விடயங்களை தன் எழுத்துத் திறமையால் சிகரம் தொட்ட சுஜாத்தா பற்றிய நீண்ட பார்வையுடன் புதியவர்களுக்கு அறிவுரையும் சொல்லியவிதம் சிறப்பு.
சுஜாத்தா படைப்பில் ஃசில பாசுரங்களுக்கு விளக்கவுரை கொடுத்த நூல் எனக்கு அதிகம் பிடிக்கும்.
கற்றதும் பெற்றதும் ஒரு பல்சுவைக்கதம்பம்.அவரின் இழப்பு பேரிலப்புத்தான்.
சிரிரங்கம் என்றால் எப்போதும் சுஜாத்தா,வாலி ,ஞாபகம் வரும் கூடவே சிரிரங்க நாதர் என் விருப்பம் ஓடிப்போய் பார்ப்பதில் ஒரு குதுகலம்.
வணக்கம் அம்பலத்தார்!
சுஜாத்தாவுக்கு சிறப்பான நினைவு மீட்டல் தந்திருக்கிறிங்கள். நான் அவரின் ஏன் எதற்கு எப்படி தொடரும் சிறிரங்கத்து தேவதைகளும் விரும்பி படித்திருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி!!
சரிங்க...
ஜீ... said...
//என்ன பாஸ் இது காமெடியா இருக்கே! இப்பிடி எல்லாம் வேற நடக்குதா?:-)//
வணக்கம் ஜீ, எத்தனையோ பேர் எதாவது ஒன்றை கிறுக்கிவைத்துவிட்டு மொய்யிற்கு மொய் என அலைகிறதைவதை பார்த்தால் புரியவில்லையா?
ஜீ... said...
//சுஜாதா பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையே!
எல்லோருமே நிறைய வாசிக்க வேண்டும் என்பது பற்றிச் சொன்னதுக்கு ஒரு சல்யூட்!!//
புரிதலுடன்கூடிய உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீ
தனிமரம் said...
//...அரிய விடயங்களை தன் எழுத்துத் திறமையால் சிகரம் தொட்ட சுஜாத்தா பற்றிய நீண்ட பார்வையுடன் புதியவர்களுக்கு அறிவுரையும் சொல்லியவிதம் சிறப்பு.//
வணக்கம் நேசன் பாராட்டுக்களிற்கு நன்றி.
தனிமரம் said...
//சுஜாத்தா படைப்பில் சில பாசுரங்களுக்கு விளக்கவுரை கொடுத்த நூல் எனக்கு அதிகம் பிடிக்கும்.//
ஆம் நேசன் சிலவற்றை நானும் படித்திருக்கிறேன். பழந்தமிழ் இலக்கியங்களில் அவருக்கிருந்த புலமையும், தமிழில் அவருக்கிருந்த ஆளுமையும் வியக்கத்தக்கது.
தனிமரம் said...
//சிரிரங்கம் என்றால் எப்போதும் சுஜாத்தா,வாலி ,ஞாபகம் வரும் கூடவே சிரிரங்க நாதர் என் விருப்பம் ஓடிப்போய் பார்ப்பதில் ஒரு குதுகலம்.//
ஞாபகப்பகிர்விற்கு வாழ்த்துக்கள்.
தனிமரம் said...
//கற்றதும் பெற்றதும் ஒரு பல்சுவைக்கதம்பம்.அவரின் இழப்பு பேரிலப்புத்தான்.//
பரந்த அறிவும் பல்துறை ஆற்றலும் கொண்ட அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாதது.
காட்டான் said...
//வணக்கம் அம்பலத்தார்!
சுஜாத்தாவுக்கு சிறப்பான நினைவு மீட்டல் தந்திருக்கிறிங்கள். நான் அவரின் ஏன் எதற்கு எப்படி தொடரும் சிறிரங்கத்து தேவதைகளும் விரும்பி படித்திருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி!!//
வணக்கம் காட்டான், அவரது ஏனைய படைப்புக்கள் சிலவற்றையும் படித்துப்பாருங்கள். அப்புறம் அவரது தீவிர ரசிகனாகிவிடுவீர்கள்.
மனசாட்சி said...
//சரிங்க...//
நன்றி மனச்சாட்சி. மனச்சாட்சியே சரியென்றுவிட்டதே. அப்படியென்றால் நிச்சயமாக சரியாகத்தான் இருக்கும்.
எங்களுக்கு இங்கே லைப்ரரியில் அவரது புத்தகங்களை தமிழ் செக்சனில்
பார்த்தபோது ஆச்சரியம் .இன்னும் நான் நிறைய படிக்க இருக்கு .
சிறந்த களஞ்சியம் அவரது ஒவ்வொரு புத்தகமும் .
என் இனிய இயந்திரா/நடுப்பகல் மரணம் /ஆ //ஏன் எதற்கு எப்படி /ARE SOME OF MY FAVORITE.
ந்னைவு நாள் சிறப்புப் பதிவு அருமை
தாங்கள் சொல்லிச் செல்லும் அனைத்தும்
படைப்பாளிக்கு அவசியத் தேவையே
அதில் ஒன்றிரண்டையாவது செயல் படுத்த
அவரது நினைவு நாளில் உறுதி கொள்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
நல்லவரைத்தான் முன்னோடியாக கொண்டுள்ளீர்கள் அம்பலத்தார்....
நினைவுப்பகிர்விற்கு வாழ்த்துக்கள்...
//நடிப்பின் சிகரம் சிவாஜி என்றால்
எழுத்தின் சிகரம் சுஜாதா என்பேன்.//
அருமையான பகிர்வு.
சிறப்பான பதிவு சார் ! நன்றி !
சுஜாதா பற்றிய பகிர்வு அருமை. பகிர்வுக்கு நன்றி
சுஜாதாவின் நினைவு நாள் பதிவு அவர்களின் எழுத்து இனிமேல் கிடைக்காது எண்டு ஓங்கி அறைவது போல் இருந்தது. கடைசி வரைக்கும் "சலவைக்காரி ஜோக்" சொல்லி முடிக்காமல் .........
சிறந்த ஒரு எழுத்தாளரை மறக்காமல் நினைவு மீட்டியது நெகிழ்வு !
அடியேனும் சுஜாதாவின் பரம ரசிகன்தான்.
அடியேனும் சுஜாதாவின் பரம ரசிகன்தான்.
சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் என்றுமே அழியாதவை... அவருடைய ஏன் எதற்கு எப்படி தொகுப்பை எவ்வளவு படித்தாலும் சலிக்காது... அவருடைய விஞ்ஞான கதைகளும் சிறு வயதில் வாசித்திருக்கிறேன். நல்ல கருத்துக்கள் பொதிந்த பதிவு.
angelin said...
//எங்களுக்கு இங்கே லைப்ரரியில் அவரது புத்தகங்களை தமிழ் செக்சனில்
பார்த்தபோது ஆச்சரியம் . இன்னும் நான் நிறைய படிக்க இருக்கு...//
நீங்க கொடுத்துவச்சவங்க அஞ்ஜெலின் உங்க இடத்தில் நூலகத்திலேயே தமிழ் புத்தகங்கள் கிடைக்கிறதே.
Ramani said...
//...தாங்கள் சொல்லிச் செல்லும் அனைத்தும் படைப்பாளிக்கு அவசியத் தேவையே அதில் ஒன்றிரண்டையாவது செயல் படுத்த
அவரது நினைவு நாளில் உறுதி கொள்கிறேன்...//
வணக்கம், எனது பதிவு உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிந்ததில் மகிழ்வாக இருக்கிறது.
ரெவெரி said...
நல்லவரைத்தான் முன்னோடியாக கொண்டுள்ளீர்கள் அம்பலத்தார்....
நினைவுப்பகிர்விற்கு வாழ்த்துக்கள்...//
வருகைக்கும் வாழ்த்துக்களிற்கும் நன்றி
Asiya Omar said...
//அருமையான பகிர்வு.//
வருகைக்கும் வாழ்த்திற்கு நன்றி Asiya
திண்டுக்கல் தனபாலன் said...
//சிறப்பான பதிவு சார் ! நன்றி !//
நன்றி தனபாலன்
சி.பி.செந்தில்குமார் said...
//சுஜாதா பற்றிய பகிர்வு அருமை. பகிர்வுக்கு நன்றி//
உங்க உற்சாகமூட்டும் வார்த்தைகளிற்கு நன்றி சிபி.
பராசக்தி said...
//சுஜாதாவின் நினைவு நாள் பதிவு அவர்களின் எழுத்து இனிமேல் கிடைக்காது எண்டு ஓங்கி அறைவது போல் இருந்தது. கடைசி வரைக்கும் "சலவைக்காரி ஜோக்" சொல்லி முடிக்காமல் .......//
உற்சாகமான வார்த்தைகளிற்கு நன்றி பராசக்தி, ஆமா கடைசிவரை சொல்லாமலே சலவைக்காரியையும் சுஜாதா தன்னுடனே சமாதியாக்கிட்டார்.
ஹேமா said...
//சிறந்த ஒரு எழுத்தாளரை மறக்காமல் நினைவு மீட்டியது நெகிழ்வு !//
அந்த மகா எழுத்தாளனிற்கு செய்த என்னால் முடிந்த ஒரு சிறு காணிக்கை இது
எஸ் சக்திவேல் said...
//அடியேனும் சுஜாதாவின் பரம ரசிகன்தான்.//
நாமெல்லாம் அவரின் ரசிகர்கள் என்று சொல்வதே எமக்கு பெருமை
Blogger enrenrum16 said...
//சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் என்றுமே அழியாதவை... அவருடைய ஏன் எதற்கு எப்படி தொகுப்பை எவ்வளவு படித்தாலும் சலிக்காது... ..//
நீங்களும் அவரது ரசிகை என்று அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.
முதலில் அவரது கதைகள் ஈர்த்தன. கணேஷ் வசந்த் இரண்டு பாத்திரத்திலும் அவரைக் காணலாம். அப்புறம் அப்புறம் அவரது கட்டுரைகள் ரொம்பவே ஈர்த்தன. கற்றதும் பெற்றதும், எண்ணங்கள், அவரது கேள்வி பதில்கள், மிஸ் தமிழ்த் தாயே நமஸ்காரம், மற்ற எழுத்தாளர்களை, கவிஞர்களை ரசித்துப் பாராட்டி நமக்கும் அறிமுகப் படுத்துவது......வீ மிஸ் யூ சுஜாதா....அவரின் படைப்புகள் 90 சதவிகிதம் என்னிடம் உள்ளது என்று நம்புகிறேன்!
Post a Comment