நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

காதல் சிட்டுக்கள் பெத்த முத்துக்கள்.




தமிழகத்து தமிழ் சிட்டுக்கள் இரண்டு சில காலங்களின் முன் எங்கள் வீட்டருகே கூடொன்றில் குடிவந்தன. தமிழகத்திலிருந்து பட்டமேற்படிப்பிற்காய் இங்கு வந்த அவர்கள். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, திட்டமிட்டு படிப்பை முடித்து, வேலையாகி..... 
சில நாட்களின்முன் அவர்களின் கூட்டில் குடியிருக்க சின்னஞ்சிறு சிட்டொன்றும் குடிவந்துவிட்டது. அண்மையில் பிறந்த அந்த குட்டிப்பாப்பாவை பார்க்க சென்றபோது படிக்க தந்த அவர்கள் காதல் டைரியின் சில பக்கங்களை அவர்கள் அனுமதியுடன் உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.



எல்லாம் அவள் செயல் 

எங்கோ ஒரு மூலையிலே பாமரனாய் இருந்திருப்பேன்
அவள் என் பார்வையில் படாது இருந்திருந்தால்
எனது நோக்கம் என்ற பொருளுக்கு ஆக்கம் தந்தவள்
பட்டம் விட இருந்த என்னை பட்டம் பெற வைத்தவள்
என் வாழ்க்கை வண்டிக்கு அச்சாணி
என் கால தோணிக்கு துடுப்பு
ஊர் நினைக்கிறது நானாக உயர்ந்தேன் என்று
பட்டமாய் நான் பறக்க நூலாய் நீ இருப்பதை அறியாமல்.

           

                                                                                                    சந்திரன்

ஆசைகள் ஆயிரம்

உன் அழகில் கிறங்கி மடியில் உறங்க ஆசை
உன் நனைந்த கூந்தல் நறுமணம் பிடிக்க ஆசை
நீ ஆறுதல் அடைய என் தோளை கொடுக்க ஆசை
கொளுத்தும் வெயிலுக்கும், கொள்ளாத மழைக்கும்
நீ பிடிக்கும் குடையாக ஆசை
உன் கார்கூந்தலில் பூச்சூட ஆசை
உன் படர்ந்த நெற்றியில் திலகமிட ஆசை
நீ சுவாசிக்கும் காற்றாக ஆசை
நீ வாசிக்கும் மொழியாக ஆசை
நீ யாசிக்கும் வரமாக ஆசை
நீ பூசிக்கும் குருவாக ஆசை
நீ வசிக்கும் உடலாக ஆசை
நீ ரசிக்கும் பிறையாக ஆசை
நீ அணியும் வளையாக ஆசை
உன் முகத்தின் கலையாக ஆசை
உன் கழுத்து அணியாக ஆசை
உன் கண்ணின் மணியாக ஆசை
நீ உடுத்தும் உடையாக ஆசை
நீ காணும் கனவாக ஆசை
நீ சுவைக்கும் கனியாக ஆசை
உன் விழிக்கு இமையாக ஆசை
உன்னை இமைக்காமல் பார்த்திருக்க ஆசை
என் சோர்வுக்கு மருந்தாய்
என் இச்சைக்கு விருந்தாய்
என் பூவுக்கு அரும்பாய்
இந்த எறும்புக்கு கரும்பாய்
நானே நீயாய்
ஆகிவிட ஆசையடி.
   
                                                        சந்திரன்




                     



 
இச்சைகள் இனிதே 
உன்னை கைப்பிடித்து வெகுதூரம்
பேசிக்கொண்டே நடக்க ஆசை
உன் தோளில் சாய்ந்து
ஆறுதல் அடைய ஆசை
உன்னோடு சேர்ந்து மழையில்
நனைய ஆசை
உன் மடியில் படுத்து
உறங்க ஆசை
உன் மூச்சுக் காற்றை
சுவாசிக்க ஆசை
இப்படி என் ஆசைகள்
நகர்ந்து கொண்டே போகிறது
நான் உன்னை காணும் நாளை
எதிர்நோக்கி!

 

அந்த நாள்

நான் உன்னை காணும் அந்த நாள்
நாணத்தால் நான் நெளிய
உன் அழகு முகத்தை நிமிர்ந்து பார்க்கும்
தைரியம் கூட இல்லாமல்
புமியை பார்த்தபடி நிற்கும் என்னைப் பார்த்து
நீ என்ன செய்வாய்?

                        ஜனனி





அன்றும், இன்றும், என்றென்றும்  
   
    என்னுள்
    துளியாய் விழுந்தாய்
    கடலாய் பெருகினாய்
    தீ பொறியாய் விழுந்தாய்
    தீபமாய் ஒளிர்கிறாய்
    நினைவாய் விழுந்தாய்
    மூச்சுக் காற்றாய் நுழைந்தாய்
    இசையாய் இருக்கிறாய்
    அன்றே என்னுள் உயிராய்-
    விழுந்தாய்
    இன்றும் என்றென்றும் என் 
    உயிராகவே  இருப்பாய்

                        சந்திரன்.








பதிவிற்கான படங்கள் கூகிளில் இருந்து நன்றியுடன் எடுத்துக்கொண்டவை.

8 comments:

முத்தரசு said...

கவிதைகள் அழகு -

வாழ்க வளமுடன்

Anonymous said...

காதல் ரசம் சொட்டுகிறது...இல்லை பொழிகிறது...
இந்த வயதுக்கோளாறு...உங்களுக்கு இல்லையே அம்பலத்தாரே...

Muruganandan M.K. said...

ஒன்றையொன்று ஈர்க்கும் உயிர்களின்
உணர்வுகளின் ரசனையான வரிகள்.
பகிர்ந்ததற்கு நன்றி

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார்.
இனிய சிட்டுக்களின் காதல் சந்தங்களைக் கவிதையாக்கி இன்பக்கள்ளூர விட்டீர்கள் குளிர் கால இரவில் .
நான் உன்னைக்கானும் நாளை எதிர் நோக்கி ! ம்ம்ம் ரசித்தவரிகள்.

எஸ் சக்திவேல் said...

பார்க்க அப்பாவி மாதிரி இருந்தாலும் கவிதைகளில் விளாசி இருக்கிறார்.

ஹேமா said...

பாருங்கோ உங்களை நம்பி டைரி வாசிக்கத் தந்திருக்கினம்.அழகான சந்தோஷமான காதல் சிட்டுக்கள்.என் வாழ்த்தும் அவர்களுக்கு !

Yaathoramani.blogspot.com said...

அன்பின் ஈரம் சொட்டும் அழகான கவிதைகள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர்ந்து தந்தால் மகிழ்வோம்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை சார் !