கணனியின் பழைய கோப்புக்களில் ஏதோ தேவைக்காய் தேடிக்கொண்டிருந்தபோது ஏறக்குறைய எட்டு, ஒன்பது வருடங்களின்முன் தமிழின் முதுபெரும் சிங்கமொன்று ஜேர்மனி வந்திருந்தபோது அவரை சந்தித்ததுபற்றி அன்று நான் எழுதிய குறிப்பொன்று கண்ணில் பட்டது அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.நீண்ட நாட்களுக்குப்பின் முதுபெரும் சிங்கமொன்றைச் சந்தித்தேன். வயதோ 65ஐ தாண்டி நடையிலும் பேச்சிலும் சற்றே தளர்வு ஏற்பட்டிருந்தாலும் எதிர் உரையாடுபவரைத் தன்பார்வையாலேயே எடைபோடுவதிலும் சரி. அளந்தே பேசினாலும் வார்த்தைகளினால் சுற்றியிருப்பவர்களைக் கட்டிப்போடுவதிலும் சரி சிங்கம் சிங்கம்தான்.
இருபது ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள், பெருஞ்சித்தனாரின் அச்சகத்திலும் எஸ்.ரி.எஸ் அவர்களின் சட்டமன்ற விடுதி அறையிலும் தங்கியிருந்த நாட்கள் கண்முன் நிழலாடியது. இரா.சனார்த்தனம் குழு, பெருஞ்சித்தனார் குழு, முன்னாள் அமைச்சர் எஸ்.ரி;.சோமசுந்தரம், ஒரத்தநாடு இளவழகன் என ஒருசிலர் ஓடி ஓடி எமக்காய் உழைத்து பேதமின்றி அனைத்து ஈழப் போராளிக்குழுக்களும் தமிழகத்தில் வேர் ஊன்ற வழி சமைத்த காலம் எங்கே?
ஒருநேரக் கஞ்சிமட்டுமே குடிக்கும் ஏழைத் தமிழ்மகனும் ஈழத்துப்போராளி ஒருவன் வந்திருக்கிறான் என்றால் ஓடிவந்து தான் குடிக்கக் காய்ச்சிய கஞ்சியை எம்முடன் பகிர்ந்துகொண்ட அன்றைய தமிழகம் எங்கே?
ஏக்கமாயிருக்கிறது.
அன்று பார்த்த பேசிய இரா. சனார்த்தனமா இவர். பேச்சின் மிடுக்குத் தளர்ந்து, நடையில் வேகம் குறைந்து மனதுக்கு நெருடலாயிருந்தது. எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத்தமிழாராட்சி மகாநாட்டில் தடைகள் தாண்டிப் பேசிய குரலா இது?இலங்கைத்தமிழருக்காய் தமிழகமே எழுச்சிபெற இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு இருபது நாட்களில் 400 கிலோமீட்டர் நடந்தவரா இவர்?
சென்னை எழும்பூரில் உலகத்தமிழர் இல்லத்தில் நேதாஜி படத்திற்கு மாலையிட்டு எங்கள் தலைவர் புதிய புலிகள் அமைப்பை ஆரம்பிக்க உடனிருந்தவரா? நம்ப மறுத்தது மனம்.
ஜேர்மனியில் நண்பர் ஒருவரது இல்லத்தில் பல காலங்களின் பின் கனத்த இதயத்துடன் இரா. சனார்த்தனம் அண்ணனுடன் ஒருசில மணிநேரம் உடனிருந்தேன்.
இவரைக் காணவென வந்த, இலக்கியவாதிகளெனவும், அரசியல் அறிஞரென்றும் கூறிக்கொள்ளும் ஒருசிலர் அடித்த சுயதம்பட்டங்களை அவர் சோகமாய் கேட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்த நண்பரின் மனைவி, "பாவம் அவர், ரொம்பவும்தான் போரடிக்கிறார்கள்" என்று மெதுவாக எனக்கு கூறி அன்றைய அந்த சந்திப்பின் நிதர்சனத்தை எடுத்துரைத்தார். வேசதாரிகள் மத்தியில் வெளிவேசங்கள் அற்றவராக அந்த பெண்மணி.
எம்மவர் வாழ்வில் தொலைந்த அல்லது தொலைத்த பலதையும் சோகமாய் அசைபோட்டபடி வீடு வந்து சேர்ந்தேன்.
நேசமுடன் அம்பலத்தார்
23 comments:
ம்...
சில அசைபோடும் நினைவுகள் சுகம் !
நீங்கள் அசைபோடும் நிகழ்வுகள் எமக்கு புது தகவல்கள்.
வணக்கம் ஐயா,
தமிழரின் வரலாற்றுப் பாதையில் தொண்டாற்றிய தோழமையின் நினைவுகளை மீட்டியிருக்கிறீங்க.
எம் போன்ற இளசுகளுக்கு புதிய தகவலாக, இரா. சனார்த்தனம் பற்றிய தகவல்கள் உள்ளன.
பகிர்விற்கு நன்றி ஐயா.
//ஒருநேரக் கஞ்சிமட்டுமே குடிக்கும் ஏழைத் தமிழ்மகனும் ஈழத்துப்போராளி ஒருவன் வந்திருக்கிறான் என்றால் ஓடிவந்து தான் குடிக்கக் காய்ச்சிய கஞ்சியை எம்முடன் பகிர்ந்துகொண்ட அன்றைய தமிழகம் எங்கே?//
நான் பள்ளிக்கூடம் பயின்ற நாட்கள் அவை .
பள்ளிகளை கால வரையின்றி சுமார் ஒரு மாதம் என்று நினைக்கிறேன் மூடி வைத்து எங்கள் எதிர்ப்பை நெஞ்சை நிமிர்த்தி வீரமுடன் காட்டிய காலம் .
நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள் .பகிர்வுக்கு நன்றி
அம்பலத்தார் இவர் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்... ரெம்ப ஆச்சரியமாய் இருக்கு...
புதிய தகவல்கள் சார் ! பகிர்வுக்கு நன்றி !
இரா. சனார்த்தனம்...அறிமுகம் எனக்கு...நினைவு பகிர்வுக்கு நன்றி அம்பலத்தார் ஐயா...
வணக்கம் அம்பலத்தார்!
நல்லதோர் நினைவு மீட்டல்.. உங்கள் அனுபவம் பெரிது. இன்னும் இப்படியான நினைவுகளை உங்கள் மனதில் மட்டும் பூட்டி வைக்காது பகிரலாமே?
மனசாட்சி said...
// ம்...//
உங்க வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
ஹேமா said...
//சில அசைபோடும் நினைவுகள் சுகம்!//
ஆம். ஞாபகங்கள் வாழ்வின் இனிய பொக்கிசங்கள்.
மதுமதி said...
//நீங்கள் அசைபோடும் நிகழ்வுகள் எமக்கு புது தகவல்கள்.//
எனது அனுபவங்கள் உங்களிற்கு புதிய செய்திகளை தருவதை அறிந்ததில் மகிழ்ச்சி
நிரூபன் said...
//வணக்கம் ஐயா,
....எம் போன்ற இளசுகளுக்கு புதிய தகவலாக, இரா. சனார்த்தனம் பற்றிய தகவல்கள் உள்ளன. //
நிரூ, அடுத்த சந்ததியினரிற்கு கொடுத்துச்செல்ல என்னிடம் இருப்பது அனுபவங்கள் மட்டுமே.
angelin said...
//நான் பள்ளிக்கூடம் பயின்ற நாட்கள் அவை .
பள்ளிகளை கால வரையின்றி சுமார் ஒரு மாதம் என்று நினைக்கிறேன் மூடி வைத்து எங்கள் எதிர்ப்பை நெஞ்சை நிமிர்த்தி வீரமுடன் காட்டிய காலம் .//
உங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றியம்மா.
துஷ்யந்தன் said...
//அம்பலத்தார் இவர் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்... ரெம்ப ஆச்சரியமாய் இருக்கு...//
இவையெல்லாம் உங்களிற்கு தெரியாமல் இருந்ததில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நான் அரசியலில் முழு ஈடுபாடுகொள்ள ஆரம்பித்தது எண்பதாம் ஆண்டளவில். பிரபாகரனும் உமாமகேஸ்வரனும், சிறீ சபாரத்தினமும் டக்ளஸ் தேவானந்தாவும் தடையின்றி தமிழகத்தில் நடமாடிய காலம் அது. பதிவில் கூறிய விடயங்கள் நீங்கள் பிறப்பதற்கு முன்பே இடம்பெற்றவை.
திண்டுக்கல் தனபாலன் said...
//புதிய தகவல்கள் சார் ! பகிர்வுக்கு நன்றி//
எனது பதிவுகள் உங்களிற்கு புதிய தகவல்களை தருவது மகிழ்ச்சி தருகிறது.
ரெவெரி said...
//இரா. சனார்த்தனம்...அறிமுகம் எனக்கு...நினைவு பகிர்வுக்கு நன்றி அம்பலத்தார் ஐயா...//
ரெவெரி உங்க வரவிற்கும் உற்சாகம் தரும் வார்த்தைகளிற்கும் நன்றி.
காட்டான் said...
//வணக்கம் அம்பலத்தார்!
நல்லதோர் நினைவு மீட்டல்.. உங்கள் அனுபவம் பெரிது. இன்னும் இப்படியான நினைவுகளை உங்கள் மனதில் மட்டும் பூட்டி வைக்காது பகிரலாமே?//
உங்கள் கருத்திற்கு நன்றி காட்டான். எனது அனுபவங்களை எல்லாம் சொல்லினால் அம்பலத்தான் ரீல்விடுகிறான் என்று சொல்வார்கள். எனது வாழ்வை பதிவிட்டால் அதுவே ஒரு மெகா சீரியல் ஆகிவிடும். முடிந்தவரை படிப்பவருக்கு பயன்படும் அல்லது ஆவணப்படுத்தப்படவேண்டிய விடயங்களை பதிவிட முயல்கிறேன்.
கிழடாயினும் சிங்கம் சிங்கம்தான் ஐயா
இரை மீட்டல் ஒருவித சுகம்......சோகமும்கூட ...
எஸ் சக்திவேல் said...
//கிழடாயினும் சிங்கம் சிங்கம்தான் ஐயா//
சிங்கமுன்னா சும்மாவா?
நிலாமதி said...
//இரை மீட்டல் ஒருவித சுகம்......சோகமும்கூட ...//
ஆமா உண்மைதான் நிலாமதி. கணவர் பிள்ளைகள் நீங்க எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறியளா? ரொம்பநாட்களாக நலம் விசாரிக்கக்கூட மறந்திட்டேன் என திட்டாதையுங்கோ சகோதரி.
Post a Comment