இந்தியாவிற்கு போயிருந்த நேரம் புத்தகக் கடையில கருணாகரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம் புத்தகத்துக்கு ஜெயமோகன் எழுதியிருந்த முகவுரையை நுனிப்புல் மேஞ்சதிலை அந்த முகவுரையை வடிவாகப் படிக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலைதான் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். மறந்துபோய் நீண்டகாலமாக அந்தப் புத்தகம் ஒரு ஓரத்திலை கிடந்திட்டுது. பலகாலத்தின்பின் ஞாபகம் வந்து எடுத்துப் படித்தேன். உண்மையிலேயே அற்புதமான படைப்புக்களின் தொகுப்பு அது.
அதில் மாற்றம் என்றொரு கதையில் ஒரு பெண்ணின் ஆளுமைகள் இளவயதில் மெள்ள மெள்ள வளருவதையும் கலியாணத்தின் பின் அதே பெண்ணின் ஆளுமைகள் ஒவ்வொன்றாக மெதுவாகச் சிதைவதையும் எழுதியிருந்தவிதம் அற்புதமாக இருந்தது. தேர்ந்ததொரு சிற்பி அற்புதமானதொரு சிலையைச் செதுக்கியதுபோல அந்தக் கதையின் ஒவ்வொரு வரியும் நேர்த்தியாக அமைந்திருந்தது.
வாழ்வு வசப்படும் எனும் மற்றுமொரு கதையில் புலம்பெயர் நாட்டில் அகதி வாழ்க்கை அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.
ஒரு அகதி உருவாகும் நேரம் கதையில் வெளிநாடுகளுக்கு நம்மவரை ஏற்றுமதிசெய்யும் ஏஜென்ருகளின் மனநிலையும் கஸ்டங்களும் அருமையாகக் கையாளப்பட்டிருக்கிறது.
சபாஸ் கருணாகரமூர்த்தி ஒருதரமான ஈழத்துப்படைப்பாளி என இனிவரும் சந்ததிகளும் உம் கதை பேசும். ஈழத்து இலக்கியத்தில் உமது இருப்பு நிச்சயமானது. பிறக்கட்டும் இன்னும் பல கதைகள்.
இங்கு என்னை ஈர்த்த ஜெயமோகன் வரிகளையும் உங்களுடன் பகிரத்தான் வேண்டும்.
"இலங்கைப் படைப்பாளிகளை விமர்சகர்கள் அணுகும்விதம் பெரிதும் கண்டனத்துக்குரியது. இலங்கை எழுத்து முழுக்கவே அற்புதமான இலக்கியங்கள் என்று கூறுபவர்கள்தான் அதிகம். ஒரு ஈழத்துப் படைப்பு நன்றாக இல்லாவிட்டால்கூட எங்கேதாம் தமிழின விரோதி என முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் அற்புதம் என்று இவர்கள் எழுதிவிடுவார்கள். அந்தரங்கமாக இவர்களுக்கு ஈழத்துப் படைப்புகள்மீது எவ்வித அக்கறையும் கிடையாது என்பதே உண்மை.............
பல்வேறு காரணங்களால் புண்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு இந்த உதட்டளவு உவசாரம் உவப்பளிப்பது இயற்கையே. தன்னம்பிக்கையுடைய ஒரு சிலராவது இவற்றைப் புறக்கணிக்க வேண்டும்............"
சில கருத்துக்களில் முரண்பட்டாலும் பலகருத்துக்களில் அவருடன் இணையக்கூடியதாக இருக்கிறது.
உண்மையிலேயே இந்தவிதமான விமர்சனங்களினால் மதிமயங்கியிருக்கும் பெரும்பான்மையான நம் எழுத்தாளர் தம்படைப்புகள் பற்றிய எதிர் விமர்சனங்கள் வரும்போது அதை ஏற்கும் மனநிலையில்லாத காரணத்தினால் தாம் பணத்துக்காக எழுதவில்லைக் கொள்கைக்காக எழுதுகிறம் அப்படி இப்படியென்று குதிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பணத்துக்காக எழுதாமல் கொள்கைக்காக எழுதுவதால் மட்டுமே ஒரு படைப்புத் தரமான இலக்கியமாகிவிடது என்பதை ஏற்கும் பக்குவத்தில் அவர்கள் இல்லை. பணத்தேவை இல்லாதது மட்டுமன்றி போதிய பணவசதி இருப்பதால்த்கான் இன்று புலம்பெயர் நாடுகளிலுள்ள நாம் ஒரு படைப்பைப் புத்தகமாக வெளியிடுவது ஒன்றும் பெரிய விடயமல்ல. இவையெல்லாம் சேர்ந்து நம் எழுத்தாளரை ஒரு மாயையிலை வைத்திருப்பதை மறுக்க முடியாது.

இவையெல்லாவற்றையும் தாண்டி கருணாகரமூர்த்தி போன்ற சில ஈழத்துப் படைப்பாளிகள் தெளிவத்தை ஜோசப், மத்தாளை சோமு, மாத்தளை வடிவேலு, ஓ.எஸ்.ராமையா, ,அந்தனிஜீவா, எஸ்.பொ , வ.ஆ இராசரத்தினம், டானியல், டொமினிக்ஜீவா, கைலாசபதி,சிவத்தம்பி, செங்கைஆழியான், முத்துலிங்கம்.... போன்ற ஈழத்து கதை உலகின் முன்னோடி எழுத்தாளர்களை தொடர்ந்து தடை உடைத்து தன்னிலையுணர்ந்து உச்சத்தில் பறப்பதுகண்டு மகிழ்வே.
நேசமுடன் அம்பலத்தார்
12 comments:
வணக்கம் அம்பலத்தார் நல்ல ஒரு படைப்பாளிபற்றி நானும் தெரிந்து கொள்ளுவதற்கு காத்திரமான விடயத்தை பதிவாக்கினதுக்கு வாழ்த்துக்கள்!
"இலங்கைப் படைப்பாளிகளை விமர்சகர்கள் அணுகும்விதம் பெரிதும் கண்டனத்துக்குரியது. இலங்கை எழுத்து முழுக்கவே அற்புதமான இலக்கியங்கள் என்று கூறுபவர்கள்தான் அதிகம். ஒரு ஈழத்துப் படைப்பு நன்றாக இல்லாவிட்டால்கூட எங்கேதாம் தமிழின விரோதி என முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் அற்புதம் என்று இவர்கள் எழுதிவிடுவார்கள். அந்தரங்கமாக இவர்களுக்கு ஈழத்துப் படைப்புகள்மீது எவ்வித அக்கறையும் கிடையாது என்பதே உண்மை.............//சரியாகச் சொன்னீர்கள் இப்படித்தான் அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றார்கள் என்று திலகவதி அவர்களும் எஸ்.பொ வின் பல்முகப் பார்வை தொகுப்பில் சுட்டிக்காட்டி நம் நிலையைக் கடிந்து கொள்கின்றார்!
பணத்துக்காக எழுதவில்லைக் கொள்கைக்காக எழுதுகிறம் அப்படி இப்படியென்று குதிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பணத்துக்காக எழுதாமல் கொள்கைக்காக எழுதுவதால் மட்டுமே ஒரு படைப்புத் தரமான இலக்கியமாகிவிடது என்பதை ஏற்கும் பக்குவத்தில் அவர்கள் இல்லை. பணத்தேவை இல்லாதது மட்டுமன்றி போதிய பணவசதி //இவர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டியவர்கள் எங்கே தம் நிலை கேள்விக்குறியாகி விடுமோ என்று செய்யும் அனாகரிக நிலையையும் நாம் உள்வாங்கனும். பேராசியர்கள் சொல்வது எல்லாம் சரி என்ற முற்போக்கு இலக்கியவாதிகளால் முகம் இழந்த பலரின் படைப்பு ஒரு வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது சிலர் செய்வது எல்லாம் சூப்பர். அதையும் விருதுக்கு பரிந்துரைக்கனும் என்று கூறுபவர்களிடம் எப்படி போராடுவது ஐயா???
சில ஈழத்துப் படைப்பாளிகள் தெளிவத்தை ஜோசப், மத்தாளை சோமு, மாத்தளை வடிவேலு, ஓ.எஸ்.ராமையா, ,அந்தனிஜீவா, எஸ்.பொ , வ.ஆ இராசரத்தினம், டானியல், டொமினிக்ஜீவா, கைலாசபதி,சிவத்தம்பி, செங்கைஆழியான், முத்துலிங்கம்.... போன்ற ஈழத்து கதை உலகின் முன்னோடி எழுத்தாளர்களை // இவருடன் முருகபூபதி,மருதூர் அனார்,ஸ்ஹாப்டீன் ,புண்ணீயமீண்,செ.யோகநாதன் என பலரும் தடைகள் தாண்ட நானும் வாசகனாக பிரார்த்திக்கின்றேன்!
நுனிப்புல் மேஞ்சதிலை அந்த முகவுரையை வடிவாகப் படிக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலைதான்// இப்படித்தான் நானும் சில புத்தக்கத்தைத் தேடினேன் அங்கே ஒரு மலையக வெளியீடும் இல்லாத நிலை கண்டு வேதனையில் வந்தேன்.யுத்தவெறி பற்றிய பலநூல்கள் வரிசைப்படுத்தியவர்கள் மறந்தும் நல்ல நூல் வந்திருக்கு இந்தப்புத்தகத்தை வாங்கிப்போ என்று ஒருவார்த்தை சொல்லாத பதிப்பக நிலைய விற்பனையகம் கள் நிலையை எப்படிச் சொல்வது சில இடங்களில் செ.யோகநாதனோ,செங்கை ஆழியானோ,திக்வலைக்கமாலோ,மருதூர் அனாரோ தெரியாத நிலையை என்னி வேதனையோடு வெளியில் வந்தேன் கடந்த மாதம் கூட.
நாலு மாசத்துக்கு முதல் அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று வாசித்தேன். புத்தகத்தின் கவர் இருக்கவில்லை. 'ஆவுரஞ்சிகள்' என்ற கதையின் பெயர் மட்டும் நினைவில் இருக்கிறது - கேள்விப்படாத, புரியாத பெயர் காரணமாக!
அதில் அநேகமாக 94 இல் எழுதிய கதைகள். புலம்பெயர் அனுபவங்கள் அதிகமாக..
நன்றி அம்பலத்தார் - முடிந்தால் வாசிக்கிறேன்!
டொமினிக்ஜீவா, கைலாசபதி,சிவத்தம்பி, செங்கைஆழியான், முத்துலிங்கம்.. உள்ளிட்ட சிலரை படித்திருக்கிறேன்.அறிமுகம் நன்று.வாய்ப்பு கிடைத்தால் படிக்கவேண்டும்.
டொமினிக்ஜீவா, கைலாசபதி,சிவத்தம்பி, செங்கைஆழியான், முத்துலிங்கம்.. உள்ளிட்ட சிலரை படித்திருக்கிறேன்.அறிமுகம் நன்று.வாய்ப்பு கிடைத்தால் படிக்கவேண்டும்.
நானும் புத்தகம் வாங்கிட்டு ஓரத்தில போடுறது வழமை.
அறிமுகத்துக்கு நன்றி. எழுத்தாளனின் படப்பை இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை.
தேர்ந்த படைப்பாளியை அறிமுகம் செய்ததுக்கு நன்றி அம்பலத்தாரே...
தனிமரம் said...
//வணக்கம் அம்பலத்தார் நல்ல ஒரு படைப்பாளிபற்றி நானும் தெரிந்து கொள்ளுவதற்கு காத்திரமான விடயத்தை பதிவாக்கினதுக்கு வாழ்த்துக்கள்!//
உற்சாகம் தரும் வார்த்தைகளிற்கு நன்றி நேசன்
வணக்கம் நேசன், நிறைய விடயங்களுடன் எழுதிய பின்னூட்டங்களுக்கு நன்றி. உங்களுக்கு ஈழத்து எழுத்தாளர்மீதிருக்கும் அளவுகடந்த ஈர்ப்பும். அதுசார்ந்த விடயங்களில் உங்களுக்கு இருக்கும் ஆளுமையும் பிரமிப்பு தருகிறது.
Post a Comment