வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
கலிங்கத்துப் பரணியும் வன்னியில் எம் போரியல் வாழ்வும்
நம் பழந்தமிழ் இலக்கியங்களாம் கலிங்கத்துப்பரணி, நந்திக் கலம்பகம், புறநானூறுஇ குறுந்தொகை .. .. .. இவற்றில் காணப்படும் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத தேனாய் இனிக்கிறதோ இல்லையோ பலநூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இவ்வினிய கவிவரிகள் இன்றும் எவ்வாறு எம் வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகின்றன என்பதுவும் வியப்பைத் தருகின்றது.