நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

கஞ்சன்



நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்க
கிணிங்ங்ங்................................ அழைப்புமணி.
சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான்.
நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்க
ஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார்.


இரண்டு மூன்று நாளாக் காலமையளிலை கவனித்தன்
உங்கட வீட்டு வாசலிலை பேப்பர்போடுறவன் நிண்டதை
அதுதான் நீங்கள் படிச்சு முடிச்சிருந்தால்
நானும் ஒருக்கால் இன்றையப் பத்திரிகையை படிப்பமென்று வந்தனான்.
அதுசரி மணி பதினொன்றாகுது இன்னமும் வீட்டு உடுப்போட நிக்கிறியள்,
இன்றைக்கு லீவோ? என்று அடுக்கிக்கொண்டுபோனார்.
நான் கூடுதலாக இரவிலைதான் வேலை செய்கிறனான் என்றன் எரிச்சலோட
அது என்ன பக்டரிவேலையே?
நான் பெருமையா, எழுத்தாளன்!
சனங்களெல்லாம் விழிப்படையவேண்டும்
விழித்தெழவேணும் என்பதற்காக எனது தூக்கம் தொலைத்து
விடிய விடிய விழித்திருந்து எழுதுபவன். சீர்திருத்தவாதி
மெதுவா கொம்பியு}ட்டர் பக்கம் திரும்பிய ஒட்டகத்தார்.
ஒம் ஒம் மேசைக்குக் கீழை கிடக்கிற போத்தலுகளைப் பார்க்கவே நல்லா விளங்குது.
உங்களைப்போல கொஞ்சப்பேர் நாலுசுவருக்கை நடக்கிற
உங்கட ஒவ்வொரு சிறு எழுச்சி நிகழ்வுகளையும்
ஒன்றுக்கு ஒன்பது பெயரிலை பு}தக்கண்ணாடியாலை பார்க்கிறதுபோல
பெரிதுபடுத்தி சினிமாவுக்குப் போடுற செற்போல போட்டு பில்டப்கொடுத்திலை,
அரேபியப் பாலைவனத்தில இருந்த உனக்கு என்ன தெரியுமென்று கதைக்கிறீர்.
வாயிருக்கென்றதுக்காக கண்டதையும் கதைக்காதையும் என்று இடையில புகுந்து கத்த,
பொறும் பொறும் நான் சொல்லவந்ததை சொல்லிமுடிச்சாப்பிறகு கதையும்....
ஓசிச் சீவியம் நடத்துகிற ஒட்டகம் உனக்கு என்ன தெரியும்
அரசியலையும் போராட்டங்களையும்பற்றி
நான் ஒன்றும் ஓசிச் சீவியம் நடத்தேல்லை.
கொம்யுனிசத்தை செயல்படுத்துகிறன்.
என்ன?
இருக்கிறவன் இல்லாதவனுக்குக் கொடுத்தால்
பொருளாதார ஏறுறத்தாள்வு குறையும் அதுதான் என்ரை கொள்கை.
நீரும் உம்மட கொம்யுனிசமும்.
முதலாளித்துவத்தின்ரை முதுகெலும்பே வங்கியும், காப்புறுதிக் கம்பனியளும்.
சனங்களெல்லாம் வாழ்நாளெல்லாம்
கடனாளியாக் கிடக்கவேணும் என்று முதலாளித்துவம் நினைக்க
அளவுக்குமிஞ்சிக் கடன் கொடுத்ததாலை வங்கியளே திவாலாகுது.
உலகமயமாக்கல் முண்டுகொடுக்குமெண்டால்
அதுவும் வளர்த்த கடா மார்பில பாய்ந்த கதையாப் போட்டுது.
பாரும் ஒரு சுற்றுச் சுற்றிவந்து பழையபடி எங்கை நிற்குமென்று
சரி சரி ஓசிப்பேப்பருக்கு வந்திட்டு
சவடால் விட்டுக்கொண்டு நிற்காதையும் பேப்பரைப் பிடியும்.
சொந்தமாக ஞானம் இருக்க வேணும்
இல்லாவிட்டால் இருக்கிறவன் சொல்லுறதைக் கேட்டகவேணும்
நான் சொல்ல வந்ததைச் சொல்லிப்போட்டுப்போறன்.
அங்கை வன்னியிலை இருந்தவை
அநியாயத்துக்கு உங்கட செயல்திறனைப்பற்றி
நீங்களும் ஏதோ பெரிதா செய்யிறியள் என்று எடைப்போட
வெளிநாடுகளிலை இருந்த புலம்பெயர் தமிழரும்
உங்கட மாயையில மயங்கியிருக்க
நீங்கள் என்னடா என்றால் பில்டப் கொடுத்ததோட சரி
சந்தோசமாக களத்தில உள்ளவை எல்லாத்தையும் செய்வினம் என்று இருந்திட்டு
கடைசி கிளைமாஸ் காட்சியிலை எல்லாம் முடிந்தாப்போல வாற பொலிஸ்போல
நீங்களும் சுதாகரித்துக்கொண்டு செயலிலை இறங்க அங்கை எல்லாம் முடிஞ்சுது.
ஆனாலும் அந்தச்சோகத்திலையும் ஒரு நன்மை
உங்கட புலம்பெயர் சமூகத்தின் பலம் என்ன என்பதை
உங்களுக்குமட்டுமல்ல உலகத்திற்கே புரிந்துவிட்டது.
பெரிய பாடமொன்றை மிகப்பெரியதொரு விலைமதிப்பற்ற பின்னடைவை
விலையாகக் கொடுத்துப் படிச்சிருக்கிறியள்.
இனிவரும் காலங்களில்
அந்தப் பலத்தையும் ஒற்றுமையையும் ஒருங்கிணைத்துச்
சரியான செயல்திடடுங்களோட செயல்படுங்கோ சீக்கிரம் இலக்கை அடையலாம்
என்று சொல்லிக்கொண்டு ஒட்டகத்தார் ஓசிப்பேப்பரோட நடையைக்கட்ட
எனக்கும் எதோ கொஞ்சம் புரிந்தமாதிரிக்கிடங்ததிலை மறுபேச்சில்லாமல் தலைகுனிந்தன்
.

2 comments:

அம்பலத்தார் said...

உற்சாகம் தரும் வார்தைகளிற்கு நன்றி

பராசக்தி said...

வணக்கம் அம்பலத்தார் அவர்களே, இப்ப இடது காலையும் வாசற்படி தாண்டி வலது காலுடன் சேர்த்து உள்ளே வந்து விட்டேன்.
ஒட்டகத்தார் பேச்சை கேட்டு தலை குனிந்தது - எல்லா புலம் பெயர்ந்த தமிழனும் தான்-,
அந்த சோக செய்தி கேட்டு கிட்டத்தட்ட 2 வருடங்களாக இழப்பிலிருந்து மீள முடியாமல், தாயக நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல்,வாய் மூடி மௌனமாய் தவித்தது, மாறாத வடுக்களாய் காலம் முழுதும் தொடர்ந்து வரும் . நிற்க, ஒட்டகத்தார் கஞ்சனாக இருந்தாலும் , வஞ்சனை இல்லாமல் அரசியலை புரட்டி விடுகிறார். ஜோடியாக கலக்குங்கோ.